௦௦00.00.00.00௦௦ என்ன இது? புத்தாண்டு கொண்டாடும் நேரம். பூமி சூரியனை ஒரு
ரவுண்டு வந்ததயா கொண்டாடுகிறோம்? ஒரு நீள்வட்டப் பாதையின் முடிவு எது? ஆரம்பம்
எது? பூமி இந்த சுற்றிவரும் விளையாட்டை ஆரம்பித்த ஆண்டு தெரியுமா? சூரியன்தான்
பூமிக்கு சுற்றுலாத் தலம். நிலவுக்கு பூமி. நாமும் பூமியுடன் சுற்றிக்கொண்டு தான்
இருக்கிறோம் சூரியனை. நிலவு நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியன், புதன்,
வெள்ளி கிரகங்களைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் நம்மையும் சேர்த்து சூரியனை
சுற்றிக்கொண்டுள்ளன. நாம் ஏன் நவகிரகங்களையும் கோயிலில் சுற்ற வேண்டும்?
ஜாதி, மதம், மொழி, இனம்,
நாடு, கடந்து பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச மக்களால் கொண்டாடப்படும் விழா
இதுதான். இதற்கு ஈடான ஒரு விழா (இந்த கோணத்தில்) வேறு இல்லை. ஆங்கில காலண்டர்
கிருஸ்து பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் பிறந்த நாளாக கருத்தப்படும்
டிசம்பர் 25 கி. மு. வா? கி. பி. யா? அவர் பிறந்த தேதியையே ஜனவரி 1 ஆக
அமைத்திருக்கலாமே.
சூரியக் குடும்பத்தை வைத்துதான் காலண்டர் முறையை
கணக்கிட்டார்கள். ஆனால் ஏன் கோள்களின் வரிசைக்கிணங்க வாரநாள்களுக்கு பெயர்
வைக்கவில்லை? சூரியக் குடும்பத்தின் படி வாரநாள்களுக்கு பெயர் வைத்திருந்தால்..........
ஞாயிறு Sunday
புதன் Wednesday
வெள்ளி Friday
திங்கள் Monday
செவ்வாய் Tuesday
வியாழன் Thursday
சனி Saturday
இப்படித்தான் இருந்திருக்கும்.
நம் காலண்டர்.
டைப்ரைட்டரிலும்,
கீபோர்டிலும்
QWERTYUIOP
ASDFGHJKL
ZXCVBNM
போல கோள்களின்
வரிசைகளையும் மாற்றி வைத்தான் கிறுக்கு மனிதன்.
புளூட்டோவை சிறிது காலத்திற்கு
முன் நம் (சூரிய) குடும்பத்திலிருந்து
நீக்கி விட்டார்கள். அது என்ன இவர்களை நம்பியா சூரியனை சுற்றிக் கொண்டுள்ளது இத்தனை
காலமாய்.
இந்தியாவிலேயே பல
காலண்டர்கள் உள்ளன. தமிழ் காலண்டர், தெலுங்கு காலண்டர், ஹிந்து காலண்டர், முஸ்லிம்
காலண்டர் இன்னும் பிற. அனைத்து புது வருடங்களும் தமிழனின் அணுகுமுறையில், வருடப்
பிறப்பு என்றுதான் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பது new year என்பதின்
மொழிபெயர்ப்பு. நீர்வீழ்ச்சி – waterfalls என்பது போல. அருவி என்ற அருமையான சொல்
இருந்த போதிலும். மொழி பெயர்ப்பைப் பற்றி என் இன்னொரு கருத்து. மின்விசிறி,
மின்விளக்கு மற்றும் பல்வேறு பொருட்களுக்கு ‘மின்’ என்ற முன்னொட்டு. இந்த சொற்கள் மொழிபெயர்ப்பு
செய்யப்பட்ட காலத்தில், வீட்டில், விசிறி மட்டையும் இருந்தது, மின்விசிறி –fan ம்
இருந்தது. இப்போது உங்கள் வீட்டில் விசிறி மட்டை உள்ளதா? அதனால் ‘மின்’ ஐ
தூக்கிவிட்டு விசிறி என்றே பயன்படுத்தலாம். வீட்டில் பாதி நேரம் மின்சாரம் இல்லாததாலும்
‘மின்’ ஐ தூக்கி விடலாம். இது போல நாம் பல பாரம்பரியமான சொற்களைக் காக்க முடியும்.
மைக்ரோசாப்ட் இன்னும் save icon க்கு பிளாப்பி டிஸ்க் ஐ தான் பயன் படுத்துகிறது.
அதைப் போல நாமும் நம் பாரம்பரிய சொற்களைக் காப்பாற்றுவோம்.
மீண்டும் புத்தாண்டிற்கு
வருவோம். 2012 காலண்டரில் இரண்டே வரிதான். ஜனவரி, பிப்ரவரி. மார்ச் மாதம் கட்டாயம்
கட்ட வேண்டும் வருமான வரி. 2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம் வாரத்தின்
ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி,
சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.
2012 மிக வேகமாக ஓடிவிடும் என்று தோன்றுகிறது.
வாழ்த்துக்கள். இவ்வளவு
நேரம் படித்ததற்கு.