Posts

Showing posts with the label காலண்டர்

புது வருட ரெசல்யூஷன் :)

Image
நியூ இயர் வருது உங்கள் ரெசல்யூஷன் என்னங்க?  640*780 HD. தம்பி என் மொபைலுக்கு தான கேட்டீங்க? டீவி க்கு 1084 இருக்கும். என் வீட்டுல வேற எந்த ரெசல்யூஷனும் இல்லை. உங்க புத்தாண்டு சபதங்கள் என்ன?  யாருகூடவும் நமக்கு பகை இல்லைங்க தம்பி. அதனால "இந்த நாள்.... உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ......" அப்டினு சபதம் எதுவும் விடலை.  உங்களுக்கு புது வருஷ கொண்டாட்டம் எதுவும் இல்லைங்களா? கொண்டாடலாமுன்னு ஒருதரம் ஆரம்பிச்சேன். இருபது முப்பது நாளுக்கு ஒருமுறை கொண்டாடும்படி ஆகிப்போச்சி.  என்னண்ணே சொல்றீங்க?  சீன நியூ இயர், சிறீலங்கா நியூ இயர், கன்னட நியூ இயர், முஸ்லீம் நியூ இயர், கிரிஸ்டீன் நியூ இயர், தமிழ் நியூ இயர், இப்படியே ஆப்பிரிக்கா, அண்டார்க்டிக்கா, நெப்டியூனின் நியூ இயர் வரைக்கும் கொண்டாடிட்டேன். இதுக்கெடயிலே எனக்கு 30 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்துச்சி, இப்போ "அண்ணனை  வாழ்த்த வயதில்லை ...." அளவுக்கு ஆகிப்போச்சி பாத்துக்கோங்க. இதனால ஐநா வுக்கு போட்டியா பல தினங்களை கொண்டாடிட்டேனு கிப்டு எல்லாம் வந்து குடுத்தாங்க தம்பி. 

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இரண்டாம் பட்சமா

Image
இங்கிலீஷ்* புத்தாண்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் முதல் ஆளாக(i am the first to wish.,) அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாட்டு மக்களெல்லாம், தமிழ் வருடத் தொடக்கத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பது ஏன் என்கிற வினா ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இங்கிலீஷ் நாட்காட்டியின் படி சம்பளம் பெறுவதாலா? தமிழ் புத்தாண்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரி கட்டி  கையிருப்பில் பணம் இல்லாது போவதாலா? தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை என்றால் கர்நாடகாவிலா அரசு விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இங்கிலீஷ் புத்தாண்டும்,  தமிழ் புத்தாண்டும் sms blackout days என்று அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில் மட்டுமே sms பரிமாற்றம் அதிகமிருக்கிறது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தை sms blackout தினத்திலிருந்து நீக்கச் செய்ய வேண்டும். சம்பளம் தமிழ் மாத முதல் தேதியில் தருவதை வழக்கமாக்க வேண்டும். நிதிஆண்டும் தமிழ் ஆண்டும் பங்குனியில்(மார்ச்) முடியும். நேரக் கணக்கைப்...

வருடத்தின் 182 மணி நேரம்

Image
அரை மணி நேரம் TV யை நிறுத்துங்கள், உங்கள் வாழ்க்கையிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். ஒரு நாளில் சுமார் மூன்று மணி நேரம் டிவியில் செலவிடுகிறீர்கள் என்றால் அதை இரண்டரை மணி நேரமாக குறையுங்கள். அதுவும் நீங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சியின் நேரத்தில் குறையுங்கள். நம் வீட்டில் இருக்கும் சாதனங்களிலேயே மிகவும் எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டிய சாதனம் TV தான். ஒரு நாளைக்கு, உங்கள் நேரம் அரை மணி நேரம், உங்கள் மொத்த குடும்ப நேரம் 2  மணி நேரம் (4 பேர் கொண்ட குடும்பம்) இப்படி கணக்கிட்டால் வருடத்தின் 182.5 மணி, குடும்பத்தின் நேரம் 730 மணி நேரம் பல பயனுள்ள காரியங்களுக்கு செலவிடப்படும். பல நேரங்களில் ஒய்வு எடுக்க நேரமின்றி இருந்திருப்பீர்கள். இந்த அரை மணி நேரத்தை அதற்கு கூட பயன் படுத்திக்கொள்ளலாம். மக்களை டிவி முன் அமரவைத்து டிவி பேசிக்கொண்டிருக்கிறது மக்கள் முடமாக அதன்முன் அனைத்து புலன்களையும் அடகு வைத்துவிடுகிறார்கள். கண்ணும் காதும் டிவியை கவனித்துக் கொண்டிருக்கிறது. கண் காதுக்கு ஒத்திசைவாக உங்கள் உடல் இயக்கம் இன்றி நிற்கிறது. அதைவிட முக்கியமாக உங்களை சிந்திக்க விடுவதில்லை. ...

காலண்டர் மாற்றும் திருவிழா

Image
௦௦00 .00.00.00 ௦௦ என்ன இது? புத்தாண்டு கொண்டாடும் நேரம். பூமி சூரியனை ஒரு ரவுண்டு வந்ததயா கொண்டாடுகிறோம்? ஒரு நீள்வட்டப் பாதையின் முடிவு எது? ஆரம்பம் எது? பூமி இந்த சுற்றிவரும் விளையாட்டை ஆரம்பித்த ஆண்டு தெரியுமா? சூரியன்தான் பூமிக்கு சுற்றுலாத் தலம். நிலவுக்கு பூமி. நாமும் பூமியுடன் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம் சூரியனை. நிலவு நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியன், புதன், வெள்ளி கிரகங்களைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் நம்மையும் சேர்த்து சூரியனை சுற்றிக்கொண்டுள்ளன. நாம் ஏன் நவகிரகங்களையும் கோயிலில் சுற்ற வேண்டும்?  ஹாப்பி நியூ இயர் கொண்டாடும் மக்களே! ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்பென்ன தெரியுமா? ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்து பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச மக்களால் கொண்டாடப்படும் விழா இதுதான். இதற்கு ஈடான ஒரு விழா (இந்த கோணத்தில்) வேறு இல்லை. ஆங்கில காலண்டர் கிருஸ்து பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் பிறந்த நாளாக கருத்தப்படும் டிசம்பர் 25 கி. மு. வா? கி. பி. யா? அவர் பிறந்த தேதியையே ஜனவரி 1 ஆக அமைத்திருக்கலாமே.         ...

புத்தாண்டு - பூமியின் விழா

Image
ஆண்டுக்கு பனிரெண்டு மாதம் எப்படி? பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் ஒரு நாள். சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றி வர தேவைப்படும் நேரம் ஒரு மாதம். இந்த இயற்கையின் விதிகளைக் கண்டறிந்து காலண்டரை கண்டுபிடித்த அந்த அறிஞனை எண்ணி வியக்கிறேன். ஆக திசம்பர் 31 தான் ஆண்டின் முடிவு! ஜனவரி 1, புது வருட தொடக்கம்!! இதை கொண்டாடும் உலகமக்கள்!!! இயேசு பிறந்த தினம் – கிருஸ்துமஸ், கிருஷ்ணர் பிறந்த தினம் – கிருஷ்ண ஜெயந்தி. அது போல பூமியின் பிறந்த தினம்தான் ஆங்கிலப் புத்தாண்டா? அல்லது தமிழ் புத்தாண்டா? அல்லது எந்த புத்தாண்டு தான் பூமியின் பிறந்த தினம்? நேரம் 00:00:01தான் பூமி தோன்றிய நேரமா? பூமியும் சூரியனும் தோன்றாத போது நேரமே இல்லையா? மகிழ்ந்த்திருக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்குத் தரும் ஒவ்வொரு ஜனவரி 1 யும் நானும் வரவேற்கிறேன். அந்த ஒரு நாளோடு புத்தாண்டு முடிந்து விடுகிறதா? எப்போது ஒரு ஆண்டு பழையதாகிறது? உலகத்தில் பழையது என்பது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் இயற்கைதான். ஒரு சீரான சுழற்சியில் தான் இருக்கிறது. பூமியை ...