எழுதுவது – பேனா பிடித்த விரல்கள்
உங்கள் கையெழுத்து உங்கள் கைவிரல்களிலிருந்து வருவதல்ல, மூளையிலிருந்து வருவது. விபத்தில் கை இழந்தவர்கள் காலால், வாயால் எழுதும்போது கவனிக்கலாம் கையெழுத்து ஒத்திருப்பதை. நான் எழுதுகிறேன் என்பது நான் சிந்திக்கிறேன் என்பதைக் காட்டுகிறது. எழுதுவது மிகக் குறைவே. போனில் சொல்லும் எண்ணை எங்காவது துண்டு காகிததிலோ உள்ளங்கையிலோ எழுதுவதை இங்கே நான் சொல்லவில்லை. என்ன எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு அதையே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் பேனா, நான் எழுதுவதை பற்றி என்ன நினைக்கும். இங்கும் அங்கும் அதைப் பிடித்து காகிதத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்குமோ? நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என்று என் பேனாவுக்குத் தெரியுமா? நான் எழுதுவதே தெரியாதென்றால் மருத்துவர்கள் எழுதும் prescription ஐப் பற்றி என்ன நினைக்கும். பேனா எழுதுவது தன் தலையாலா அல்லது ஒற்றைக் காலாலா? நான் எழுதும் அனைத்தையும் தன் நினைவில் கொள்ளுமா என் பேனா? மையுடன் சேர்ந்து அதன் நினைவுகளும் காகிதத்திற்கு மாறிவிடுமோ? சிறுகுழந்தைகள் கையிலுள்ள பேனா என்ன எழுதுகிறது என்று குழந்தைக்கோ, பேனாவுக்கோ அல்லது வேறு யாருக்காவது தெரியு...