Posts

Showing posts with the label kitchen garden

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture

Image
வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்     திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில்  நிலத்தை  வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில்   முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...

மாடித் தோட்டமும் நகர மக்களும்

Image
கி.பி. 1600 களில் 60 கோடியாக இருந்த உலக   மக்கள்தொகை அடுத்த 400 ஆண்டுகளில் 700 கோடி உயர்ந்தது. ஒவ்வொரு எழுபது ஆண்டுகளிலும் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. இதே நிலையில் போனால் 2050 இல் உலக மக்கள் தொகை ஐநா கணிப்பின்படி 915 கோடி ஆகும். நம் பூமியின் தாங்கும் அளவு என்ன? எத்தனை பேர் வாழ இந்த பூமியில் வளங்கள் உள்ளன? மக்கள் தொகை உயர்ந்ததோ மடங்குகளில். அதே அளவு வளங்கள் உயர்ந்ததா என்றால் இல்லை. உணவு உற்பத்தியை ஒரு அளவு வரை படிப்படியாக உயர்த்த முடிந்தது, இன்னும் இன்னும் உயர்த்திக் கொண்டே போவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். உணவு உற்பத்தியை மேற்கொள்பவர்களின் துயரங்கள் (நம் நாட்டு அரசியல் கொள்கைகளால்) அவர்களின் அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில், உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் தடுத்துவிடுகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடன் பட்டதால் உழைப்புக்கு உணவு தரும் அட்சய பாத்திரமான  நிலங்களையும் விற்றுவிட்டு வேறு தொழில் தேடி தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நேரடியாக விவசாயம் செய்யும் மக்கள்தொகையில் 2035 பேர் குறைந்துகொண்டிருக்கிறா...