Posts

Showing posts with the label சுற்றுலா

பயணக் கட்டுரை எழுத ஆசை

Image
மிக நீண்ட பயணம், சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு தூரம் சுமார் 200 கி. மீ ஒரே ஒரு பேருந்தில் சென்று சேரலாம் 4 – 5 மணி நேரத்தில். ஆனால் இதிலென்ன சுவாரசியமுள்ளது? சுற்றுலாவுக்காக எங்கோ ஒரு தூரமான இடத்திற்கு செல்ல ஆசைப்படுகிறோம், நாம் ஊர் அருகிலுள்ள ஊர்கள், மக்கள், நடைமுறைகள், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள ஒரு பிரயாணத் திட்டமிட்டேன். திட்டப்படி சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு டவுன் பஸ்சில் மட்டுமே செல்லலாம். மினி பஸ், ஷேர் ஆட்டோ, மாட்டு வண்டி, விவசாய டிராக்டர், ஆகியவற்றிலும் செல்லலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே மொபைல் போனை சுவிட்ச் ஆன் செய்யலாம். ஊர்களை, மக்களை, அவர்கள்தம் உரையாடல்களை அனுபவிக்க வேறெந்த இடையூறுகளும் இருக்கக் கூடாதல்லவா? எடுத்துக் கொள்ளக் கூடிய பொருட்கள்- தண்ணீர் பாட்டில், பணம், அடையாள அட்டை, விசில், டார்ச் லைட், குடை, தீப்பெட்டி,  கத்தி, அவசரத்திற்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள். பயணம் ஒரு நாளுக்கு மேலே ஆகும் என்பதால், துண்டு, போர்வை, சோப்பும் தேவைப்படலாம். பணத்தை பேருந்துக் கட்டண...

ரயிலும் நானும்

Image
தன்  அனுபவப் படைப்பை என் வலைப்பூவிற்கு வழங்கிய நண்பன் கலைச்செல்வனுக்கு மிக்க நன்றி.

மழை

Image
இதுவரையில் நான் மழை பெய்யும் இடத்தில் நின்றிருக்கிறேன், மழை பெய்யாத இடத்தில் நின்றிருக்கிறேன். மழை பெய்யும் இடமும் மழை பெய்யாத இடமும் சந்திப்பது எங்கே? அங்கே நான் நிற்க வேண்டும் இரு கையை விரித்து ஒரு கையில் மட்டும் மழை தொட வேண்டும். பாலைவனத்தில் மழை சூடாகப் பெய்யுமோ? மழைத் துளி மண் சேரும் முன் ஆவியாகி விடுமோ? அப்படியே ஒரு வேளை மழை வந்து நனைந்தாலும் உடைகள் சீக்கிரம் காய்ந்துவிடும். மழை வேண்டி தவளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கிறார்கள். உண்மையில் மழை வந்து குட்டையில் தண்ணீர் தேங்கும் வரை தவளைகளிடமிருந்து திருமணத்திற்கான குரலே கேட்பதில்லை. நல்ல வேளை உப்பு, கடல்நீருடன் சேர்ந்து ஆவியாவதில்லை. அப்படி ஆவியாகியிருந்தால் குடிநீர் கரிக்கும், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தோல்வியடைந்திருக்கும். எல்லா வருடங்களிலும் பருவத்திலேயே இருக்கிறது மழை. இதை விட்டால் காடுகளுக்கு நீர் ஊற்ற யார் இருக்கிறார்கள். யாரால் முடியும். மேகத்தில் இருந்து விழும் மழைத் துளி முதலில் பூமியின் எந்த இடத்தைத் தொடும்? உயரமான மலை உச்சியிலா? பள்ளத்தாக்கிலா? இமயமலையில் ரூப்கண்ட் அருகில் ஒரு பள்ளத்த...

பறவை

Image
--> மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் V வடிவத்தில் கூட்டமாய், விசிலடித்து தனிமையாய், மின்சாரக் கம்பியில் வரிசையாய், வயலோரங்களில், ஏரிக்கரை மரங்களில் சிறகடித்து பறந்த பல்வேறு வகையான பறவைகளை பார்த்து ரசித்து விட்டு மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்க இதோ இப்போது எழுத ஆரம்பித்து விட்டேன் பறவைகளுக்காக. ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல பறவை ஆச்சரி யமான உயிரினம். பறப்பதற்கு ஆசைப்படாத மனிதனில்லை. நம் கதைகளில் குதிரை, பெண் தேவதைகள், சூப்பர்மேன், ஏமாந்தால் எருமை கூடப் பறக்கும். பறவையைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கலாம் என்று கற்பனை செய்யும். நாம் பார்த்து பெயர் தெரியாத பறவைகள் உள்ளதா? யோசித்து பாருங்கள்... வால் நீளமாக, அலகு கூர்மையாக, வளைந்து, திக்கித் திக்கி கத்திக் கொண்டு, உடலிலே வண்ணம் வேறாக,.... இப்படி எத்தனையோ. சரி, நமக்கு தெரிந்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுவோம். காகம், குருவி, வாத்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, மைனா, கழுகு, குயில், மயி ல், தேன் சிட்டு, கிளி, லவ் பேர்ட்ஸ், உள்ளான், காடை, கௌதாரி, ஆந்தை, புறா...