Posts

Showing posts with the label மரணம்

"நான்" அவன் இல்லை. நான் யார்?

Image
இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்... அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்... அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ? “நான்”, அவன் கடவுளுக்கு கீழே உள்ளவன் அவனுடைய வேலை அவன் தாயை புரிந்துகொள்வது. “நான்” வாழ்நாள் முழுவதும் அலைவான், நிரந்தரத்தை வெறுப்பவன், முடிவிலியை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவன் அவனுடைய ஆசைகள் எபோதும் நிறைவேறபோவதில்லை என அறிந்தும் அதை அடைய முற்படுபவன். “நான்” ஒரு தனி மனிதன், தனித்த மனிதன் ,தனிமையின் அழகை உணர்ந்த மனிதன். அதன் கிறக்கத்திலிருந்து மீண்டு வர மனமில்லாதவன்.. அவன் நடக்கிறான். சில நேரங்களில் பறக்கிறான்.. புரியவில்லை பரிணாமத்தில் அதற்கு வழியில்லையே என்றாலும் “நான்’ பறக்கிறான்...

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

Image
சமீபத்தில் என் மனதை மிகவும் வருத்தமடையச் செய்த சம்பவம், என் நண்பரின் அகால மரணம். அதன் காரணம் இரத்த உறைவு (blood clot). இரத்த உறைவு மரணத்திற்குக் காரணமாகுமா? இதுவரை எனக்கும் தெரியாது. மருத்துவர்கள் இரத்த உறைவின் விளைவுகளை எடுத்துரைக்காதது மரணத்திற்கு இட்டுச்சென்றது. நண்பர்களே, நம் உடல்தான் நம் பிரதான சொத்து. "போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்று சொல்லுவார்கள். ஆனால் போகும்வரை நமது உடல்தான் நம்முடன் இருக்கும்.உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். என்னதான் கையெழுத்து மட்டுமே போடும் வேலையாயிருந்தாலும் உங்கள் கை அவசியம், கண் பார்வை முக்கியம். வெளியுருப்புகளை விட உள்ளுறுப்புகள் மிக மிக பாதுகாக்க வேண்டியவை. ஆசைகள் அதிகமிருக்கும் அதற்கெல்லாம் ஈடுகொடுக்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். நண்பர் Dr. ராஜாராம் பாட்டீல் (32), வேளாண் வேதிப்பொருட்களில் முனைவர். இயற்கை விவசாய சான்றளிக்கும் நிறுவனத்தில் கள ஆய்வாளர். கள ஆய்வுகளுக்குச் செல்ல அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவுரங்கபாத்தில் என் உடன் பணிபுரிந்தார். நாங்கள் இருவரும் ஒரே அறை நண்பர்கள். பல்வேறு வரலாற்று...