Posts

Showing posts with the label மழை

பழி வாங்குமா இயற்கை?

Image
   இயற்கை சீற்றங்களால் பேரழிவு, இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் கட்டுப்படுத்த இயலாத வெள்ளம் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தை 5-10 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது. மீண்டு ( ம் ) பழைய நிலைக்கு கொண்டு வருவது மிகவும் சவாலான வேலை என்று மத்திய மாநில அரசுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை உயிருடன் மீட்ட ராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. சராசரியை விட நாலரை மடங்கு அதிக மழைப்பொழிவுதான் இந்தப் பேரழிவிற்கு காரணமா? இதற்கு காரணம் என்ன?       உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட   குமாவூன் மற்றும் கார்வால் மண்டலங்கள் கங்கை மற்றும் யமுனை ஆகிய ஜீவநதிகளின் பிறப்பிடமான இமயமலையுடன் இணைந்த பகுதிகள். இந்தப் பருவமழை அதிகமாக இருக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்ட ஒன்றுதான். கணிக்கப்பட்ட மழை வெள்ள எச்சரிக்கையை யாத்ரீகர்களுக்கு பொது ஊடகங்கள் மூலம் அறிவிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கமுடியவில்லை. பருவமழை ஒவ்வொரு வருடமும் சூதாட்டம் போல ஏறக்குறையதான் இருக்கும். 65 சதவிகிதத்தை ...

மழை பொழியுமா? பொய்க்குமா?

Image
நீரின்றி அமையாது உலகு. வளமை இன்றி அமையாது பொருண்மை; பசுமை இன்றி அமையாது குளுமை.குளிர்ச்சி வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மேகம் குளிர வேண்டும்; மேகம் குளிர மண்ணில் மரம், செடி, கொடி வேண்டும். வெட்டப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் அழிந்து பட்டாலோ அந்த இடத்தில் புதிய மரக்கன்றை நட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த இடம் வெறுமை ஆவதோடு வெம்மை அதிகமாகும். அனைத்து இடங்களிலும் இந்நிலை நீடிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது, குளுமை குறைகிறது. இந்நிலையில் மழை பொழியுமா? பொய்க்குமா?  என்னசெய்யலாம்? எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெப்பம் மக்களை அதிகமாக வாட்டியது அனைவரும் அறிந்த ஒன்று. வசதி படைத்தவர் குளிர்வாசத்தலங்களுக்கு சென்றனர். வறுமையில் உழன்றோர் கோடை வெப்பம் தாங்க முடியாமல் உயிர்நீத்த செய்தியை நாளிதழ்களில் கண்டிருக்கலாம். அனுதாப “இச்” கொட்டினால், போன உயிர் வருமா? வெப்பம்தான் குறையுமா? இதற்கெல்லாம் என்னகாரணம்? மரம், செடி, கொடிகளை வெட்டியது, ஆற்றுப்படுகைளில் மணலை சுரண்டியது, எவ்வளவு ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமோ அதை செய்வது. காடுகள் வளர்ப்புக்கு...

புது மழை

Image
மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ ஏரோட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ சும்மா திரியுற மாமனுக்கு சூடு வையுங்கோ என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை.  மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத....

மழை

Image
இதுவரையில் நான் மழை பெய்யும் இடத்தில் நின்றிருக்கிறேன், மழை பெய்யாத இடத்தில் நின்றிருக்கிறேன். மழை பெய்யும் இடமும் மழை பெய்யாத இடமும் சந்திப்பது எங்கே? அங்கே நான் நிற்க வேண்டும் இரு கையை விரித்து ஒரு கையில் மட்டும் மழை தொட வேண்டும். பாலைவனத்தில் மழை சூடாகப் பெய்யுமோ? மழைத் துளி மண் சேரும் முன் ஆவியாகி விடுமோ? அப்படியே ஒரு வேளை மழை வந்து நனைந்தாலும் உடைகள் சீக்கிரம் காய்ந்துவிடும். மழை வேண்டி தவளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கிறார்கள். உண்மையில் மழை வந்து குட்டையில் தண்ணீர் தேங்கும் வரை தவளைகளிடமிருந்து திருமணத்திற்கான குரலே கேட்பதில்லை. நல்ல வேளை உப்பு, கடல்நீருடன் சேர்ந்து ஆவியாவதில்லை. அப்படி ஆவியாகியிருந்தால் குடிநீர் கரிக்கும், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தோல்வியடைந்திருக்கும். எல்லா வருடங்களிலும் பருவத்திலேயே இருக்கிறது மழை. இதை விட்டால் காடுகளுக்கு நீர் ஊற்ற யார் இருக்கிறார்கள். யாரால் முடியும். மேகத்தில் இருந்து விழும் மழைத் துளி முதலில் பூமியின் எந்த இடத்தைத் தொடும்? உயரமான மலை உச்சியிலா? பள்ளத்தாக்கிலா? இமயமலையில் ரூப்கண்ட் அருகில் ஒரு பள்ளத்த...