Posts

Showing posts with the label அறிவுக்கண்

ஈர்ப்புவிசைக் கவச உடை - Anti gravity suit

Image

தோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacket

Image
நாம் எப்போதும் அணியும் உடைகள், ஒரு துணி அல்லது இரு துணி அடுக்குகள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும். கவச உடை சாதாரண உடையப் போல் இல்லாமல் சுமார் 20-40 அடுக்கு துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வுடையிலிருக்கும் நூலிழைகள் அதிக வலிமையையும் குறைந்த நீளும் தன்மையும் கொண்டிருக்கும். பாரா அராமிட் (para aramid) இழைகள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கிராம் முதல் 20 கிராம் வரையும் நொடிக்கு 200 முதல் 800 மீட்டர் வேகத்திலும் தாக்கக் கூடிய துப்பாக்கி தோட்டாக்களை தாங்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் இதுதான். கவச உடை தோட்டாவின் ஆற்றலை உள்வாங்கி குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்டுள்ள பாவு மற்றும் ஊடை நூலிழைகளின் வழியாக பரவவிட்டு தாக்கும் வேகத்தையும் குறைக்கிறது. இவ்வாற்றல் தோட்டா தாக்கிய புள்ளியியை நோக்கி அலை போல் ஆடை அடுக்குகள் உள் நோக்கி குவிந்து ஆற்றல் பரவுதலை சமன்படுத்தும். தோட்டாவின் வேகம் குறைந்து குவிந்த துணி அடுக்குகள் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது துணி அடுக்குகளினுள் சிக்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கும். இந்த ஆற்றல் குறைப்பு கவசப...