Posts

Showing posts with the label தவறான முடிவு

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு..... முதல் பாகம்

Image
பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? அடிப்படையில் மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும்தான். அதாவது குறிப்பிட்ட துறையில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். மாணவர்கள் தன் சுயவிருப்பத்துடன் ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும்போது முழு ஈடுபாடு இருக்கும். பணம் சம்பாதிப்பதும் அதனுடன் சேர்ந்து நடக்கும். இதே பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவனு(ளு)க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி இரண்டாம்பட்சம் தான். (கட்டாயத்தின் பேரில் படித்த மாணவர் படிப்பிலும் நாட்டமின்றி தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து வேலை கிடைப்பதும் கடினம்). இங்கே தொழில் ஈடுபாடில்லாததால் பணம் சம்பாதிப்பது ஒன்றே அத்தியாவசியமாகிறது. ஆகவே விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ தரமுடியாது. இதுபோன்று விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகமாகிறத...