Posts

Showing posts with the label பிறந்தநாள்

நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு

Image
எ ன்னை பிறந்த நாளில் உங்கள் அன்பின் வெளிப்பாடாக  வாழ்த்திய  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இதற்கு காரணமான என் பெற்றோருக்கு நன்றி. நண்பர்களின் பிறந்த தினங்களை நினைவுறுத்தும் facebook க்கு நன்றி. நோபல் பரிசைக் கூட ஏற்காமல்  நிராகரிக்கலாம், மறுக்கலாம். இந்த பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் யாராலும் ஏற்காமல் இருக்க முடியாது. சொன்னவற்றை விட சொல்லாதவற்றிற்கு நன்றி. நீ பிறந்ததால் இவ்வுலகிற்கு என்ன நன்மை என்று கேட்காததற்கு நன்றி. பிறந்த நாளை என்னுடைய பழைய பதிவு இரண்டினுடன் ( goo.gl/TfY2g ,  goo.gl/5H6hu ) ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. கருவில் இருந்தது பத்துமாதம். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுவது பனிரெண்டு மாதத்திற்கொருமுறை.  ஏன் ? பத்துமாதக் கணக்கில் கொண்டாடினால் என் வயது இப்போது 32.4. வயதைக் குறைத்துச் சொல்லவே பனிரெண்டு மாதக் கணக்கு  (என் வயது 27). பிறந்தநாள் வாழ்த்தைப் பற்றி எனக்கு இன்னொரு கருத்தும் உள்ளது. "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்". வயதில் மூத்தவர்களை பிறந்தநாளில் வாழ்த்தாமல் வணங்குவது. ...