நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு

ன்னை பிறந்த நாளில் உங்கள் அன்பின் வெளிப்பாடாக  வாழ்த்திய  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இதற்கு காரணமான என் பெற்றோருக்கு நன்றி. நண்பர்களின் பிறந்த தினங்களை நினைவுறுத்தும் facebook க்கு நன்றி. நோபல் பரிசைக் கூட ஏற்காமல்  நிராகரிக்கலாம், மறுக்கலாம். இந்த பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் யாராலும் ஏற்காமல் இருக்க முடியாது.
சொன்னவற்றை விட சொல்லாதவற்றிற்கு நன்றி. நீ பிறந்ததால் இவ்வுலகிற்கு என்ன நன்மை என்று கேட்காததற்கு நன்றி. பிறந்த நாளை என்னுடைய பழைய பதிவு இரண்டினுடன் (goo.gl/TfY2ggoo.gl/5H6hu) ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. கருவில் இருந்தது பத்துமாதம். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுவது பனிரெண்டு மாதத்திற்கொருமுறை.  ஏன் ? பத்துமாதக் கணக்கில் கொண்டாடினால் என் வயது இப்போது 32.4. வயதைக் குறைத்துச் சொல்லவே பனிரெண்டு மாதக் கணக்கு  (என் வயது 27).


பிறந்தநாள் வாழ்த்தைப் பற்றி எனக்கு இன்னொரு கருத்தும் உள்ளது. "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்". வயதில் மூத்தவர்களை பிறந்தநாளில் வாழ்த்தாமல் வணங்குவது. இது சரியில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் எந்த ஒரு நூலின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது. கடவுள் மிகப் பெரியவன் என்கிறது ரிக் வேதமும் இஸ்லாமும். ஆக கவிஞர்கள் கடவுளை விட வயதில் மூத்தவர்களா? தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. தமிழை விட வயதில் மூத்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரா? வாழ்த்த மனம் தான் முக்கியம். வயது அல்ல.

நேற்று இரவு இறந்தேன், இன்று காலை பிறந்தேன். திருவள்ளுவர் வார்த்தையிலே இப்படி...
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.
தினம் தினம் பிறந்தநாள் தான். இரவில் தூங்குவது இறப்பின் சின்ன வெள்ளோட்டம்.

பிறந்த நாள் வாழ்த்தின் சிறப்பென்ன தெரியுமா?
same to you சொல்ல முடியாது :)

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !!!


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என் ஆய்வகத்தில் நான்கு பேருக்கு ஒரே நாளில் பிறந்த நாள் வரும்... :) ஒரே கல்லுல நாலு மாங்கா...

    ReplyDelete
  3. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆன்மா உள்ளது.ஆன்மா அழிவதில்லை.தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.எனவே இறைவனைவாழ்த்தவும்,தமிழைவாழ்த்தவும் வயதிருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்கே விவசாயி?

மாடித் தோட்டமும் நகர மக்களும்

மருத்துவத்தால் பாதிக்கிறதா மக்கள்நலம்?