Posts

Showing posts with the label மாரடைப்பு

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

Image
சமீபத்தில் என் மனதை மிகவும் வருத்தமடையச் செய்த சம்பவம், என் நண்பரின் அகால மரணம். அதன் காரணம் இரத்த உறைவு (blood clot). இரத்த உறைவு மரணத்திற்குக் காரணமாகுமா? இதுவரை எனக்கும் தெரியாது. மருத்துவர்கள் இரத்த உறைவின் விளைவுகளை எடுத்துரைக்காதது மரணத்திற்கு இட்டுச்சென்றது. நண்பர்களே, நம் உடல்தான் நம் பிரதான சொத்து. "போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்று சொல்லுவார்கள். ஆனால் போகும்வரை நமது உடல்தான் நம்முடன் இருக்கும்.உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். என்னதான் கையெழுத்து மட்டுமே போடும் வேலையாயிருந்தாலும் உங்கள் கை அவசியம், கண் பார்வை முக்கியம். வெளியுருப்புகளை விட உள்ளுறுப்புகள் மிக மிக பாதுகாக்க வேண்டியவை. ஆசைகள் அதிகமிருக்கும் அதற்கெல்லாம் ஈடுகொடுக்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். நண்பர் Dr. ராஜாராம் பாட்டீல் (32), வேளாண் வேதிப்பொருட்களில் முனைவர். இயற்கை விவசாய சான்றளிக்கும் நிறுவனத்தில் கள ஆய்வாளர். கள ஆய்வுகளுக்குச் செல்ல அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவுரங்கபாத்தில் என் உடன் பணிபுரிந்தார். நாங்கள் இருவரும் ஒரே அறை நண்பர்கள். பல்வேறு வரலாற்று...