தாடி
தா டி என்பது காதல் தோல்விக்கான குறியீடு எனும் குறுகிய எண்ணப்போக்கு வேண்டாம். தாடிக்கென்று மிகப்பெரிய வரலாறே உள்ளது. வரலாற்றையே உருவாக்கியதும் உருமாற்றியதும் தாடிக்காரர்கள்தான். தாடி ஒருவேளை காதலித்த இருவரின் பிரிவை குறிக்கும் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகிறது, மார்க்சியத்தை உலகிற்குத் தந்த மாபெரும் மனிதன் கார்ல் மார்க்ஸ் காதலித்து மணந்த தன் மனைவி ஜெனீயுடன் வாழ்ந்த போதும், மனைவி இறந்த போதும் தாடியுடன் தான் வாழ்ந்தார். கிட்டத்தட்ட எல்லா மதத்தவர்களுமே சீக்கியர், இசுலாமியர்(முகமது நபி), கிறிஸ்தவர்(ஏசு, கிருஸ்துமஸ் தாத்தா), இந்து(சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள்), ஏன் தாடி வைத்து இருந்தார்கள்? இருகிறார்கள்? அனைவரும் காதலில் தோற்றவர்களா? சிவன், இவரு பேரு சடா முடி, ஆனா தலையில மட்டும் முடி, தாடி சுத்தமா மழிச்சி இருப்பாரு (எல்லாம் ஒவியனோட தவறான கற்பனை). மதம் , கடவுள், தீண்டாமை இல்லை என்ற பெரியாரும் , கம்யுனிச வாதியுமான கார்ல் மார்க்சும் தாடியுடனேயே காணப்பட்டனர். கம்யுனிசம் ஒரு உணர்வு, இடத்துக்கு இடம் மாறுபடும். கிரேக்கத்தை ஆட்டுவித்த தத்து...