Posts

Showing posts with the label மாணவர்

சமூக மாற்றத்திற்கு புதுமையான போராட்டங்களின் தேவை ??

Image
உலகமே இந்த happy new year ஆங்கில வருடப் பிறப்பு கொண்டாடும் இவ்வேளையில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மாயன் காலண்டர் இந்த வருடம் கிடைக்காது. பெரிய வருத்தம், சமூக மாற்றத்திற்கான பழைய வழிமுறைகள் பயன்படாமல், செயல்படாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அந்த வழிமுறைகள் என்னவென்றால் அரசியல் ஆட்சிமுறைகளும், வன்முறை (தீவிரவாதம், கொடுந்தண்டனைகள்), புரட்சி, அகிம்சை போன்ற போராட்டங்களும் ஆகும். இவைகளெல்லாம், மக்கள் நலனுக்காக வரலாற்றில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது வெற்றியும் பெற்றிருக்கிறது. அரசியல் ஆட்சிமுறைகள் என்பது முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி, மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி ஆகும். ஒவ்வொன்றிலும்  பல நன்மைகளும் தீமைகளும் வரம்புகளும் உள்ளன. தற்போதைய ஜனநாயக அரசியல் இந்தியாவில் தீவிரவாததைவிட மோசமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. நமது நிதி ஆதாரத்தில் அதிகப் பங்கு ராணுவத்திற்கு செலவழிக்கிறோம். அது மக்களின் அறவழிப் போராட்டங்களை ஒடுக்கவே அதிகம் பயன்படுகிறது. அறவழி அகிம்சை போராட்டத்தை உலகிற்கே ( !? ) அளித்தது நம்நாடு. ராணுவ மற்றும் சூழ்ச்சி முறைகளைப் பின்பற்றிய ஆங்கில அரசிற்க...

கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

Image
செய்யப் போகும் தொழிலை/வேலையை தீர்மானிக்கும் நமது கல்லூரி படிப்பு. பள்ளியிலிருந்து கல்லூரிக்குச்  செல்லும் மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும். கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக இக்கட்டுரையை எழுதுகிறேன். இன்னும் +2 தேர்வுகளே ஆரம்பிக்க வில்லை என்று எண்ணாதீர்கள். ஆனால் IIT, NIT, NIFT மற்றும் பல கல்வி நிறுவனங்களில் 2015 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவித்துவிட்டார்கள்.  online இல் விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  +2 தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருந்தால் பல வாய்ப்புகளுக்கான கடைசி தேதி முடிந்திருக்கும். கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் நமக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான படிப்புகளை கீழே உள்ள படத்தில் காணலாம். இதில் இல்லாத படிப்புகளும் அதன் உட்பிரிவுகளும்  உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த/பழகியவர்களின் வேலையையே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். உதாரணமாக நாம் பார்க்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், என்ஜினியர்கள், ஓட்டுனர்...