Pages

Monday, December 31, 2012

சமூக மாற்றத்திற்கு புதுமையான போராட்டங்களின் தேவை ??

உலகமே இந்த happy new year ஆங்கில வருடப் பிறப்பு கொண்டாடும் இவ்வேளையில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மாயன் காலண்டர் இந்த வருடம் கிடைக்காது.

பெரிய வருத்தம், சமூக மாற்றத்திற்கான பழைய வழிமுறைகள் பயன்படாமல், செயல்படாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அந்த வழிமுறைகள் என்னவென்றால் அரசியல் ஆட்சிமுறைகளும், வன்முறை (தீவிரவாதம், கொடுந்தண்டனைகள்), புரட்சி, அகிம்சை போன்ற போராட்டங்களும் ஆகும். இவைகளெல்லாம், மக்கள் நலனுக்காக வரலாற்றில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது வெற்றியும் பெற்றிருக்கிறது.

அரசியல் ஆட்சிமுறைகள் என்பது முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி, மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி ஆகும். ஒவ்வொன்றிலும்  பல நன்மைகளும் தீமைகளும் வரம்புகளும் உள்ளன. தற்போதைய ஜனநாயக அரசியல் இந்தியாவில் தீவிரவாததைவிட மோசமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. நமது நிதி ஆதாரத்தில் அதிகப் பங்கு ராணுவத்திற்கு செலவழிக்கிறோம். அது மக்களின் அறவழிப் போராட்டங்களை ஒடுக்கவே அதிகம் பயன்படுகிறது. அறவழி அகிம்சை போராட்டத்தை உலகிற்கே (!?) அளித்தது நம்நாடு. ராணுவ மற்றும் சூழ்ச்சி முறைகளைப் பின்பற்றிய ஆங்கில அரசிற்கு, புதுமையான அகிம்சைப் போராட்டங்களை  எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் அகிம்சை போராட்டம் புதுமையாக இருந்ததால் எதிர்கொள்ளத் தெரியவில்லை, ஒடுக்க முடியவில்லை. அதே போல் தான் போரில் கொரில்லா முறை புகுத்தப் பட்ட காலகட்டத்தில் வெற்றிபெற்றது, காரணம், கொரில்லா போர்முறையை அணுகும் முறை தெரிந்திருக்கவில்லை. அதன்பிறகு அதே நாட்டில் அதே முறை வெற்றிபெற்றதில்லை. வேறு நாடுகளில் வெற்றி பெற்றதுண்டு. அதை அணுகி ஒடுக்கும் முறைகள் தெரிந்தபின் அவை எங்கும் பெரிதாக உருவெடுக்கக் கூட முடியவில்லை.

இந்த போராட்டத்திற்கான வழிமுறைகளில் வன்முறைதான் முதலில் தோன்றியது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப, முடியாட்சி, போர்கள், கொடுந்தண்டனைகள், சர்வாதிகார ஆட்சி, ஜனநாயக அரசியல், தீவிரவாத போராட்டங்கள், அறவழிப் போராட்டங்கள், என்பவை உருவாகியது. இவற்றில் காலத்தால் முதலில் தோன்றிய முறைகளுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவும், சமீபத்தில் தோன்றிய முறைகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளதாக தோன்றுகிறது.
இங்கே சொன்ன முறைகளில் மக்களால் பயன்படுத்தப்படுவது வன்முறை, தீவிரவாதம், அறவழிப் போராட்டங்கள். வன்முறையை ஒடுக்க அதிக சட்டங்கள் உள்ளன. அறவழிப் போராட்டங்களை ஒடுக்க அதைவிட அதிக சட்டங்களும் காவல் துறையும் ராணுவமும் உள்ளன. இந்த பழைய முறைகள் சமூக மாற்றத்தில் பலனளிக்காது என்று கருதுகிறேன்.

இப்போது சமூக மாற்றத்திற்கு தேவை புதுமையான போராட்ட வழிமுறை. சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் புதிய முறை தான் வெற்றி பெரும். அதுவும் அந்த முறைக்கு எதிரான சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் வரை தான் வெற்றி பெரும். காலங்கள் மாறி கலாச்சாரங்கள் மாறிவிட்ட நிலையிலும் அதே பழைய போராட்ட முறைகளை நம்பி களத்தில் இறங்குவது ஒரு வகையில் முட்டாள்தனம்தான். சாப்பிடும் உணவு குடிக்கும் தண்ணீர், செய்யும் தொழில்கள், வாழ்க்கை முறைகள் மாறிவிட்ட இந்த தலைமுறை மக்களுக்கு ஏற்றதாய் பழைய தலைமுறையினரின் போராட்ட வழிமுறைகள் சாத்தியப்படுமா?

சமீபத்தில் எகிப்து நாட்டில் நடந்த புரட்சி துவக்கப்பட்டது facebook மூலம். டில்லியில் நடந்த அறவழிப் போராட்டத்திற்கான கூட்டத்தைச் சேர்த்ததும் சமூக வலை தளங்கள் மூலம் தான். சில அரபு நாடுகளில் (சிரியா) facebook, twitter போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு இத்தளங்கள் தரும் resistance தான், இது ஒரு வகையில் வெற்றி தான். வலைத் தளங்களில் மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆதரவு ஒரே ஒரு “click/share/like” –உடன் நின்று விடாமல், களத்தில் இறங்கி போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்கும் பட்சத்தில் தேவையான  சமூக மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு சில மணிகளில் ஆயிரக் கணக்கில் கூட்டத்தைச் சேர்க்கும் சக்தி இவற்றிற்கு உண்டு. ஒரு புதிய முறை உருவாகி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், எகிப்து, சிரியா போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் நடந்து விடுமோ என்ற பயத்தில் இந்தியா, IT Act 66 (A)வில் பேஸ்புக்கில் எழுதிய மும்பை பெண்ணையும் like கொடுத்த இன்னொரு பெண்ணையும் கைது செய்தது. ஒரு நாளைக்கு 5 sms என்பன போன்ற அடக்குமுறைகளை விதித்தது கடும் கண்டனத்திற்கு ஆளானது. இச்சட்டத்தில் போலீஸ் இணை ஆணையாளர் (DCP) அல்லது போலிஸ் தலைமை ஆய்வாளர் (IGP) முன் அனுமதியுடன் வழக்கு பதிவு செய்யலாம் என்று மாற்றம் கொண்டு வந்துள்ளார்கள். அடுத்த கட்டத்திற்கு இன்னும் புதிய போராட்ட முறைகள் தேவை.

கி. பி. 2013 ல் சமூக மாற்றத்திற்கான புதிய வழிமுறை கண்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இனிய ஆங்கில வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்.


New Year's ReV(s)olution  - முதலில் வைத்த தலைப்பு இதுதான். சரியாகப் பொருந்தவில்லை, "சமூக மாற்றத்திற்கு புதுமையான போராட்டங்களின் தேவை" என மாற்றிவிட்டேன். 



----------------   ------------------  -----------------   ----------------  -------------  -----------------  -----------------  -----------  ------------- ------
(?!) இந்தியா விடுதலை பெற்றது காந்தி வழி அகிம்சைப் போராட்டத்தாலா? நேதாஜி வழி ராணுவப் போராட்டத்தாலா? இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளா?
பல போராட்டங்களைத் தொடர்ந்து அகிம்சைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942இல் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு ஆண்டிற்குள் முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்து இந்த இயக்கம் ஆங்கில அரசால் ஒடுக்கப்பட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஜப்பானிய அரசை நம்பியிருந்தது, இரண்டாம் உலகப் போரில் கடும் சேதத்திற்கு உள்ளான ஜப்பானிய அரசால் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவ முடியவில்லை. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் பொருளாதாரம் சீரழிந்தது. இங்கிலாந்தின் பொருளாதார நிலை இங்கிலாந்தின் மறுசீரமைப்பிற்கே போதவில்லை, இந்தியாவில் இருந்து வரும் வருமானத்தை விட இந்தியாவின் நிர்வாகத்திற்கு அதிகமாக செலவானது விடுதலை அளிக்க முக்கியமான காரணமாகும். நாம் படித்த பள்ளிப் புத்தகத்தில் இதை மறைத்திருந்தார்கள்,  உலகப் போர்களைப் பற்றிய பாடங்களிலும் இதனை இந்தியாவின் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தவில்லை. 

Tuesday, November 20, 2012

கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

செய்யப் போகும் தொழிலை/வேலையை தீர்மானிக்கும் நமது கல்லூரி படிப்பு.

பள்ளியிலிருந்து கல்லூரிக்குச்  செல்லும் மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும். கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.


இன்னும் +2 தேர்வுகளே ஆரம்பிக்க வில்லை என்று எண்ணாதீர்கள். ஆனால் IIT, NIT, NIFT மற்றும் பல கல்வி நிறுவனங்களில் 2015 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவித்துவிட்டார்கள்.  online இல் விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  +2 தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருந்தால் பல வாய்ப்புகளுக்கான கடைசி தேதி முடிந்திருக்கும்.


கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் நமக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான படிப்புகளை கீழே உள்ள படத்தில் காணலாம். இதில் இல்லாத படிப்புகளும் அதன் உட்பிரிவுகளும்  உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த/பழகியவர்களின் வேலையையே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். உதாரணமாக நாம் பார்க்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், என்ஜினியர்கள், ஓட்டுனர்கள், நர்சுகள், அரசு அலுவலர்கள்....


இன்னும் எவ்வளவோ துறைகளும், வேலைகளும் உள்ளன.


ஐநா சபையில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தூதரகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், நாட்டிற்கே நிதி மேலாண்மை செய்யும் நிதி அமைச்சகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தொல்லியல் துறையில் உள்ளவர் என்ன படித்திருப்பார், வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் என்ன படித்திருப்பார், தடயவியல் துறைக்கு என்ன படிக்க வேண்டும்? வானொலி/தொலைகாட்சி நிலையங்களில் பணியாற்ற என்ன படித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் சட்டம் படித்திருக்க வேண்டுமா? மருத்துவமனையில் பணிசெய்பவர்கள் அனைவரும் மருத்துவம் படித்திருக்க வேண்டுமா?இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பாமல் குருட்டுத் தனமாக அனைவரும் விரும்பும் ஒரு படிப்பை சுயவிருப்பம் இல்லாமல், படித்து முடித்தபின் என்ன வாய்ப்புகள், விளைவுகள் என்று எண்ணாமல் முடிவு எடுக்கக் கூடாது.




இன்னும் சில விஷயங்களையும் சிந்தனையில் கொள்ள வேண்டும். அவை, குடும்ப சூழ்நிலை பொறுத்து எத்தனை ஆண்டுகள் படிக்க முடியும், அதாவது இளநிலைப் படிப்பிற்கு 3 அல்லது 4 ஆண்டுகள். மேல் படிப்பிற்கு கூடுதலாக 2 ஆண்டுகள். இவையில்லாமல் 5 வருட படிப்புகளும், ஒரு வருட இரண்டு வருட படிப்புகளும் உள்ளன. வேலைக்கு எங்கே செல்ல வேண்டும். ஒரு சில பாடப் பிரிவுகள் படித்தால் வெளிமாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும்  செல்ல வேண்டியதிருக்கும். உதாரணமாக mining engg./ marine engg. படித்தவர்கள் சுரங்கங்கள் இருக்கும் இடத்திலும், கப்பல், கடல் இருக்கும் இடங்களிலேயே வேலையை பெறுவார்கள். குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்போர் அந்த மாவட்டத்தின் தொழில்கள் சார்ந்து படிப்பது அந்த மாவட்டத்திலேயே வேலை செய்ய சரியாக  இருக்கும்.





அனைவரும் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்தால், படித்து முடித்து வேலை தேடும்போது போட்டி மிக அதிகமிருக்கும், அதை எதிர்கொள்ள படிக்கும்போது துறை சார்ந்தஅறிவையும், இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

பொறுப்பும்,அதிகாரமும்,மிகுந்த மரியாதையும்,சமூக மேம்பாட்டுக்கு உறுதுணையாயிருக்கும் பணிகள் செய்ய IAS, IPS,... போன்று இன்னும் பல பணிகள் உள்ளன அவை:
Indian Administrative Service
Indian Police Service
Indian Foreign Service
Indian Forest Service


Group A Services

Indian P & T Accounts & Finance Service
Indian Audit and Accounts Service
Indian Revenue Service (Customs and Central Excise)
Indian Defence Accounts Service
Indian Revenue Service (I.T.)
Indian Ordnance Factories Service (Assistant Works Manager, Administration)
Indian Postal Service
Indian Civil Accounts Service
Indian Railway Traffic Service


Indian Railway Accounts Service
Indian Railway Personnel Service
Post of Assistant Security Commissioner in Railway Protection Force
Indian Defence Estates Service
Indian Information Service (Junior Grade)
Indian Trade Service, Group 'A' (Gr. III)
Indian Corporate Law Service


Group - B Services

Armed Forces Headquarters Civil Service (Section Officer's Grade)
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service
Pondicherry Civil Service
Pondicherry Police Service



இந்தப் பணிகளுக்கு தயாராக ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகலாம். இளநிலை படிப்பு தேர்ந்தெடுக்கும் முன்னரே IAS இந்திய ஆட்சிப் பணிகளில் ஆர்வம் இருந்தால் அதற்குக் தகுந்தது போல இளநிலைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் கல்லூரிக் காலத்திலேயே தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே இத்தேர்வை வெற்றிகொண்டு இந்திய ஆட்சிப் பணியில் அமரலாம். எங்கோ ஒரு MNCல் வேலை செய்வதைக் காட்டிலும் மாவட்டத்தின் மிக உயர்ந்த பணி மதிப்புக்குரியதுதானே.

ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே அதிகமான மாணவர்கள் படிக்கும் போது அவர்கள் சார்ந்த வேலை தேர்வு செய்வதும் வேலை கிடைப்பதும் மிக அரிதாக உள்ளது, இதனால் வேலைதேடி பிற மாநிலங்களை நம்பும் நிலை உள்ளது. கல்வியும் விவசாயம் போன்றதே,.  குறிபிட்ட படிப்பு (Engineering) மட்டுமே மிக அதிகமான மாணவர்கள் சேர்வது என்பது மண்ணுக்கு நல்லதல்ல மற்றும் நல்ல விளைச்சலை தராது....

படிப்பு என்பது வேலை கிடைபதற்கு ஒரு தகுதி. எத்தனையோ விதமான படிப்பு வகைகள் இருந்தாலும் மக்களிடையே மிக பிரசத்தி பெற்ற உத்தியோகம் என்றால் அது அரசாங்க உத்தியோகம் மட்டுமே அதற்கு பின் வங்கி என படித்த இளைஞரும் அவருடைய பெற்றோர்ரும் விரும்புவது white collar வேலை மட்டுமே. இன்றைய சமுதாயம் வேலையை குறி வைத்து படிகின்றது என்றால் அது கண்டிப்பாக இல்லை. அரசாங்க இன்னும் பிற white collar வேலை அனைத்தும் போட்டித் தேர்வுகள்  மூலமாகவே  தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இந்த வேலைகளுக்கு குறிப்பிட பட்ட படிப்பு தான்  அவசியம் என்று இல்லை. எதாவது ஒரு பட்ட படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைத்திருக்க வேண்டும். அவ்வளவு  தான்...  பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை எந்த பாடம் படிக்க வைக்கலாம் என்று விவாதம் செய்வதை விட்டு எந்த வேலை நம் குடும்பத்துக்கு பணமும் புகழும் தரும் என்பதை அறிந்து குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்தால் வேலை வைப்பின்மையை சிறிதளவு குறைக்கலாம் .. எந்த பெற்றோரும் தன் மகன்/மகள் பொறியியல் வல்லுநர் என்பதை விட அவன் எங்க ஊரு வி எ ஒ என்பதை பெருமையாக நினைப்பார்கள்.. படிப்பில் பெரிது சிறியது கஷ்டமானது என்று ஏதும் இல்லை ஒருவன்னுக்கு ராக்கெட் சயின்ஸ் பிடிக்கும் என்றால் அது அவனுக்கு மிகவும் எளிதான விஷயம் அதே ராக்கெட் சயின்ஸ் படித்தவனால் சர்ட் டது  அக்கௌன்ட் செய்யும் வேலையை செய்ய முடியாது . படிப்பை பற்றி யோசிக்காமல் பார்க்க போகும் வேலை மட்டும் முடிவு செய்யுங்கள்.



நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களான 16 IIT (Indian Institute of Technology) மற்றும் 30 NIT(National Institute of Technology) களிலும் 2014-15  சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 2013 லேயே கொடுக்க ஆரம்பித்து  ஏப்ரலில்  IITJEE மற்றும் IEEE போன்ற நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுகின்றன. அதைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்த 46 கல்வி நிறுவனங்களில் சேர முடியாது. இதைப் போன்ற தகவல்களை மகன்/மகள் 11ம் வகுப்பு படிக்கும் போதே தெரிந்து கொள்ளவேண்டும். தகுந்த நேரத்தில் விண்ணப்பிக்கவும் வேண்டும். இன்னும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும், தன்னாட்சி கல்லூரிகளும் (autonomous college) +2 result வந்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் விண்ணப்பம் அளித்து சேர்க்கைகள்  நடைபெற்று முடிந்து விடும். ஆகவே மிகவும் விழிப்புடன் இருந்து இத்தகவல்களைப் பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர்ப்பது உண்மையிலேயே பெற்றோர்களின் பொறுப்பு. ஆசிரியர்களின் உதவியும் தேவை, பல பெற்றோர்கள் சரியான கல்வியறிவு இல்லாதவர்கள். கல்வியறிவு பெற்ற பெற்றோர்களுக்கும் இதுபோன்ற கல்வியின் பரந்துபட்ட வாய்ப்புகள் பற்றி தெரிய வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகக் கருதுகிறேன். IIT, NIT கல்வி நிறுவனங்களில் படிக்க IITJEE என்ற நுழைவுத் தேர்வு கட்டாயம் 2013 சேர்க்கைக்கு onlineல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 16, 2013. மேலும் தகவல்களுக்கு http://jeeadv.iitm.ac.in/#


பெரும்பான்மையானவர்களால் அதிகம் அறியப்படாத Chartered Accountant (CA) படிப்பு பற்றி http://tntjcovai.com என்ற வலைத்தளத்தில் இருந்து


மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் CPT( Common Proficiency Test) தேர்வுக்கு தகுதிபெறுவார்கள். ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வில், நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த தேர்வில், அக்கவுண்டிங் அடிப்படைகள், வணிகச் சட்டங்கள், பொது பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான திறனாய்வு உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

இதன்பிறகு, 9 மாதங்கள் கழித்து, Integrated Professional Competence Course(IPCC) என்ற தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது 2 பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் 4 தாள்களும், இரண்டாவது பிரிவில் 3 தாள்களும் உள்ளன. இந்த இரண்டு பிரிவு தேர்வையும் முடித்தப் பிறகு, ஒருவர் இறுதி நிலைக்கு செல்லலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான்,

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த சி.ஏ., படித்தவர்களிடம் அதிகமாக உள்ளது. சி.ஏ., படித்தவர்களே இந்திய நிறுவனங்களுக்கான சிறந்த தலைவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உடனடி முடிவுகளை சி.ஏ., படித்தவர்களே எடுக்க முடியும். CA படிப்பிற்கான தகவல்களுக்கு http://students.icwai.org/studies/students-admission.asp

CA படிப்பில் சேர்வதற்கு தேர்வுகள் வருடத்தில் இருமுறை நடக்கிறது (ஜூன் 11-18, டிசம்பர் 10-17). ஜூன் தேர்வுக்கு டிசம்பர் 5ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் தேர்வுக்கு ஜூன் 5ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.


மருத்துவமும் ஆதனைச் சார்ந்த படிப்புகள் அதிகமாக உள்ளன. அவற்றுள் பார்வை பிரச்சனை இந்தியாவில் உள்ள அனைத்து வயதினருக்கும் பொதுவாக காணப்படுகிறது.  கண் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய படிப்பு B.S optometry (பி எஸ் அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல்) ஆகும். நான்கு ஆண்டு தொழில்முறை படிப்பில் முதல் மூன்று ஆண்டு கல்வி பயிற்சி மற்றும் நான்காம் ஆண்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல் நாட்டின் முதல் பத்து வருமானம்-ஈட்டும் தொழில்களுள் ஒன்றாகும். மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் அறிவியலில் ( இயற்பியல், கணிதம், உயரியல்) 50 சதவிதம் பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். தேர்வு முறை  வெவ்வேறு நிறுவனங்களுக்கு வேறுபடும். சிலர் நுழைவு தேர்வு மூலமும் சிலர் தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் இளநிலை பட்டம் பெற்ற பின் மாஸ்டர் மற்றும் M.Phil போன்ற மேல்பப்டிபும் தொடரலாம். ஒரு optometrist தனது சொந்த கண் மருத்துவமனை, ஒளியியல் கடை, லென்ஸ் உற்பத்தி அலகு, முதலியன தொடங்கமுடியும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள  கண்  மருத்துவமனைகளில் வேலை பெற முடியும். அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம்.

இந்தியாவில் optometrist (அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல்) படிப்புகள் வழங்கும் கல்லூரிகளின் பட்டியல்.
1.        All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi.


2.       Elite School of Optometry (ESO), Sankara Nethralaya, (collaboration with Birla Institute of  Technology and Science, (BITS) Pilani, India), Chennai.

3.        Bharati Vidyapeeth University School of Optometry, Pune.


4.     Sri Prakash Institute of Optometry (Dr.Agarwal's Eye Hospital) (Affiliated to Alagappa University), Chennai.


5.        Vidyasagar College of Optometry & Vision Science, Kolkata.


6.        Aditya Jyot Institute of Optometry, Mumbai.


7.        Bausch & Lomb School of Optometry, Hyderabad.


8.        College of Optometry and Ophthalmic Sciences, Nasik.


9.        Lions Arvind Institute of Community Ophthalmology, Aravind Eye Hospital, Madurai.


10.     Optometry Research & Training Institute (ORTI), Banda (Uttar Pradesh).


11.     School of Optometry, Gandhi Eye Hospital, Aligarh (Uttar Pradesh).


12.     MEH School of Optometry, Muncipal Eye Hospital, Mumbai.


மேலும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரிகளை விட பல்கலைக்கழகங்களில் சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இருப்பார்கள், உதாரணமாக B. Tech Biotechnology, Bioinformatics படிப்பை புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கல்லூரியில் படிப்பதை விட Tamil Nadu Agricultural University இல் படிக்கலாம், இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.(http://www.tnau.ac.in/admission.html). 

B. Tech. Traditional Architecture மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் படிக்கலாம். B. Sc. Visual Communication Design சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள தமிழ்நாடு அரசு கவின்கலைக் கல்லூரியில் படிக்கலாம். http://artandculture.tn.gov.in/art-culture2.htm


இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை. யு.பி.எஸ்.சி. ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ்(SCRA) தேர்வை நடத்துகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (http://www.upsc.gov.in/exams/notifications/2014/scra/scra_eng.pdf2013 நவம்பர் 4, ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுபோல எண்ணற்ற படிப்புகள் உள்ளன, கல்லூரியில் சேருவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொண்டு தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். (பல கல்வி நிறுவனங்களில் தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விழிப்புடன் இருந்து விண்ணப்பிக்கும் தேதிகளை தவற விடாதீர்கள்.)


ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவ, மாணவியர் 18.12.2014 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். IITJEE நுழைவுத்தேர்வு தேதி 4, 10& 11.4.2015.  மேலும் விவரம் http://jeemain.nic.in/webinfo/PDF/Admission%20notice.pdf

NIFT நுழைவுத்தேர்வு தேதிகள் 09.02.2014 மற்றும் 23.02.2014 பற்றி அறிய - https://www.applyadmission.net/nift2014/default.htm

இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர National Eligibility cum Entrance Test NEET நுழைவுத்தேர்வு தேதி 04.05.2014 பற்றி அறிய  - http://cbseneet.nic.in/cbseneet/docs/Press_Release.pdf

IISER - Indian Institutes of Science Education and Research போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ளது. இங்கே 5 வருட BS-MS கல்வி உதவித்தொகையுடன் படிக்கலாம். மேலும் அறிய http://kalvimalar.dinamalar.com/news-details.asp?id=12426&cat=1

ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்கள் CUCET என்ற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். மேலும் அறிய http://cutn.ac.in/news_det.php?id=MzA4



மே 6, 2015 முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. https://www.annauniv.edu/tnea2015/
மே 6, 2015 முதல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். 


விருப்பமில்லாத படிப்பு, தொழில், வேலையில் ஈடுபட்டவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவுகளில் காணவும்.



Wednesday, September 26, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்னும் வேண்டும் இதுபோல் தமிழக நகரங்களிலும்

நண்பர் பிரேம்குமார் அவர்களின் அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கவிதை. வலைப்பூவில் பதிப்பிக்க கேட்டேன். உடனே எழுதித் தந்த புலமைக்கு நன்றிகள். இதுபோல இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்.
வசரமான சென்னையில்  ஓர்
ஆரவாரமற்ற கண்ணாடி மாளிகை.

அரிய மரங்களை அழித்து விட்டு
யாரையோ பலி தீர்க்க
அவசர கதியில் வளர்ந்திருக்கும் ஓர்
அழகிய கட்டிடம்.

ஓயா நகருக்குள் ஓயாமல் இயங்கும்
ஓர் கட்டிடம்.

வெறும் மண்ணின் மூலக்கூறுகளால்
மட்டும் வானளாவி மோதி நிற்கும்
ஓர் அழகிய கட்டிடம்.

இங்குள்
எட்டடுக்கு மாளிகையின் அலங்கார
அலமாரிக்குள் மர மம்மிக்கள்.
ஆம்
வெவ்வேறு  (அரச)மரங்களின் தியாகத்தால்
தன்னை
வெட்டி அறுத்து நொருக்கி - அமுக்கி  பிழிந்து
பின் தன் மேல் பதிக்க விடவிட்டு
கொடுத்த எழுத்துகளால் கோர்க்கப்பட்டு
நூல்களாக்கப்பட்ட மம்மிக்களின் குடோன்.
Inline image 1
மனசாட்சி மாறிப்போன
மனித விலங்கை நெறிபடுத்த இங்கு
இத்தொகையை விட
இந்நூல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

அணுகுண்டே தலை மேல் விழுந்தாலும்
அசையாமல் அசராமல் நம்முள்ளே
உறையும் ஆன்மாவை தட்டி எழுப்பி
தீட்சை தர காத்திருக்கும் குருக்களின்
ஹைடெக் குடிசை.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, எவருக்கும்
அஞ்சா தோள்கள்,
வெறும் சோற்றுக்காக யாசிப்பதை
இழுக்கென்றிருந்த நம்மை
சான் வயிற்றுக்காக மட்டும் வாழ சொல்லித்தரும்
வார்த்தை வித்தைகள் நிரம்பி
வழியும் பெருஅரங்கம்.

கூத்தாடிகளின் கூத்துகளால்
சீரழிந்து போயிருக்கும் நம் நாட்டின்
சீரழிவை ரசித்து ருசிக்கும்
சுரனைகெட்ட பல கூட்ட மக்களுக்கென்று
எழுதி குவித்த குப்பைகளை
கொட்டி வைக்க ஒரு அரங்கு.

இந்நாட்டில்
பொரிக்கிகளுக்கும், விபசாரிகளுக்கும், சோம்பேறிகளுக்கும்
வரிந்து கட்டி வேலை செய்ய
உயர் பதவிக்கு வர துடிக்கும் நம் நல்
சொற்ப உழைப்பாளிகளின் சிறு அறிவுக்கு
வழி காட்டும் பெரு அரங்கம்.

கடவுளின் கவனக்குறைவால்
மற்றும் கருணையால் இங்குள்ள காலிகளை பார்க்காமல்
(பார்வை மட்டும் இழந்து)
வாழும் நல்மக்கள் நல் அறிவு பெற
ஓர் சிறு அரங்கு

ஒளி-ஒலியால் அவ்வப்போது
இச்சமுதாயத்தை சீரழிக்கச்செய்ய
பெரு உள்-வெளி அரங்கம்.

" நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா"
"ஓடி விளையாடு பாப்பா "- பாரதி

பாப்பா-வை அறிவில்லாமல் பிஞ்சிலேயே
முடமாக்கி சிறை நிரப்ப விஸ்தாரமான கூடம்.


இவை அத்துணையையும் எதற்காகவோ பார்க்க
சாரை சாரையாய் மக்கள் கூட்டம்.......
காந்தியார் மண்டபச் சாலை
கோட்டூர் அண்ணா நூல் நிலையத்தை நோக்கி.
ஆனால் இங்கோ
அறிஞருக்கு பேர் எடுத்த அண்ணா
இங்கு வாசலில் நம்மையும்
அரங்கையும் பாரா முகமாய்
பார்த்து அமர்ந்துள்ளார்.

மனிதர்களே அழகான இந்நிலையத்திற்குள்
வாருங்கள்.
சான்றோர்களாக செல்லுங்கள்.

தன் வயிருக்கு சோறு போட துடிக்கும்
அதே ஆர்வம் கொஞ்சம் இச்சமுதாயத்தின்
பக்கம் திரும்பட்டும்.
நாடு நன்மை பயப்பன செய்ய உள்ளே
வாருங்கள்.

நீங்கள் நிற்கும் இடம் சிறு உயிர்களின்
தியாகத்தால் இப்படியானது.
நம்முடனே வாழும் அடி தட்டு மக்களுக்கு
கிட்டாத வாய்ப்பு உங்களுக்கு கிட்டியது.
அன்னம் போல் நூல்களை பருகுங்கள்.
இங்கிருந்து செல்லும் போது
நூல்களின் கருத்துகளை சுமந்து கொண்டு
மட்டும் செல்லாதீர்கள்.
கழுதை நம்மை விட அதிகமாக சுமக்க
அறிந்தது.

இனி இங்கு தேவை புரட்சி.
புரட்சி மட்டுமே!!!!
வாழ்த்துக்கள்!!!
மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கும்
அண்ணா நூல் நிலையம் உங்களை
வரவேற்கிறது!!

இப்படிக்கு ,
22-09-2012, 10:30 AM

அண்ணா நூலகம் பற்றிய பதிவர்களின் இணைப்புகள்
1.   http://annacentenarylibrary.blogspot.in/ - நூலகத்தின் வலைப்பூ



Friday, August 3, 2012

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லாததற்கு யார் காரணம்?

உரக்கச் சொல்லுங்கள்,
நான், என் பெற்றோர், என் பள்ளி, ஆசிரியர்கள், என் ஊர் மக்கள்,  அரசாங்கம்.
உரக்கச் சொன்னது போதும்.

எனக்கு விளையாட்டு மிக மிக விருப்பம், என்னை விளையாட விட்டதா இந்தச் சமூகம். என் அம்மா, அப்பா, ஆசிரியர்களின் அடக்குமுறை என்னை படிப்பை நோக்கித் தள்ளியது. பேச்சு, கருத்து, மதம், மதமற்ற நாத்திகம் அனைத்திற்கும் சுதந்திரம் உள்ள  இந்நாட்டில் குழந்தைகள் விளையாட்டு வீரராக சுதந்திரம் இல்லை. ஒரு விளையாட்டு வீரனாக மாற எத்தனை தடைகள் இருக்கிறது தெரியுமா இந்நாட்டில்? தற்போதைக்கு ஒலிம்பிக் 2012இல் பங்கேற்ற அனைத்து வீரர்களும் எதோ ஒரு துறையில் வேலை செய்கிறார்கள்/ நன்றாக படித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் பயிற்சியினாலும் திறமையினாலும் (சிலர் பயிற்சி, திறமையுடன் பணபல அரசியல் செல்வாக்காலும்) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். அதற்கு மேலும் பார்த்தால் தன் சொந்த செலவில் பயிற்சி எடுத்தவர்கள் 80%. (அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங், அஸ்வினி பொன்னப்பா, ஜ்வாலா குட்டா, செய்னா நேவால், சானியா மிர்சா இன்னும் பலர்).
உங்கள் ஊரில் போதிய விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியில் ஏன் உங்கள் பிள்ளைகளை சேர்க்கிறீர்கள்? ஒரு சில கேள்விகளை உங்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள். ஹாக்கி/கபடி/வாலிபால் அணியில் எத்தனை வீரர்கள்? ஹாக்கியில் உள்ள பந்து எந்த வகை காற்றடைத்ததா அல்லது கார்க் பந்தா அல்லது பிளாஸ்டிக் பந்தா? புட்பால் மேட்ச் விளையாடும் கால அளவு (match time duration) எவ்வளவு?

இக்கேள்விகளுக்கு உங்கள் பிள்ளைக்கு விடை தெரியவில்லை என்றால் உடனே உங்கள் பிள்ளையை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேறு பள்ளிக்கு மாற்றுங்கள். (ஒன் டே , டெஸ்ட், T20 கிரிக்கெட்டிலுள்ள பல விதிகள் தெரிந்திருக்கிறதே).
உங்களுக்கே தெரியவில்லை என்றால், இத்தனை வருட ஒலிம்பிக்கில் மொத்த பதக்க எண்ணிக்கை 20ஐ தாண்டாததற்கு நீங்களும் பொருப்பாளிதான். தாராளமாக வெட்கப்படலாம். (ஒட்டுமொத்த ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் 2008 வரை, கட்டுரை முடிவில்)
Inline image 1 
When India's 75 member "strong" olympic team returned home from the
Olympic Games 2004 held in Athens, Greece with just one silver medal.
  Inline image 2

விளையாட நேரம் ஒதுக்காமல் காலையில், மாலையில் டியூஷன் அனுப்புவது ஏன்?
பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பது ஏன்?
அப்படியே பள்ளியின்/கல்லூரியின் பெருமைக்காக வைத்திருக்கும் விளையாட்டு அணியின் மாணவர்களுக்கு on duty, attendance கொடுக்க அலைக்கழிப்பது ஏன்?
ஆசிரியர்களே, விளையாட்டு வீரனாக இருப்பவனுக்குத் தான் தெரியும் அவன்/ள் சமூகத்தால் ஏற்படும் மன உளைச்சல்கள். விளையாட்டு வீரனுக்கு வெற்றி தோல்வி சமம், அணி வீரர்களுடன் ஒத்துழைப்பு, மன உறுதி இருப்பதால்தான் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. (கிரிக்கெட்டில் தோற்றதால் டிவி பார்த்துக் கொண்டிருந்தவர் தற்கொலை என்பது தான் செய்தி. வீரர் தற்கொலை என்றெல்லாம் எங்கும் வரலாறு இல்லை). வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் இரு பக்கங்கள் என்பது விளையாட்டு வீரனுக்கு உள்ள மன உறுதி, உடலும் உறுதிதான். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு விளையாட்டு அவசியம். விளையாட்டிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. விளையாட்டில் ஈடுபடுவதால் உடலும் மூளையும் சுறுசுறுப்படைகிறது, உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, அணியில் ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற வாழ்க்கையில் தேவையான செயல்கள் மேம்படுகிறது.

ஒரு பெண்ணை, நீ பெண்ணல்ல, ஆணுமல்ல என்று பகிரங்கமாகச் சொன்னால் அந்த பெண்ணின் மனம் உள்ளாகும் நிலை என்ன? இந்த நாடே, சாந்தி என்ற தமிழ்நாட்டு வீராங்கனையை பாலின சோதனை என்று அவமானப் படுத்தியது. மிக வருத்தம், தாங்க முடியாத சோகம். திருமணத்திற்கு முன் அந்த பாலின சோதனையை செய்து கொள்ள நீங்கள் தயாரா ? முடிவு சாந்திக்கு ஏற்பட்டது போல் தான் இருக்கும். தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையம் என்ன செய்தது? ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரரைக் கூட அனுப்ப முடியாத ஆணையம்.
கிரிக்கெட் இருக்கிறதே என்று வாதம் செய்வோருக்கு... நம் நாட்டின் மக்கள் தொகை 110 கோடி. நாட்டில் எத்தனை சர்வதேச கிரிக்கெட் அணிகள் உள்ளன? IPL ஒரு வீரர்கள் ஏலமிடப்படும் விளம்பரதாரர் நிகழ்ச்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற தகுதியும் திறமையும் இருந்தால் மட்டும் போதுமா? பண பலமும் அரசியல் செல்வாக்கும் தானே அணி வீரர்களை தேர்வு செய்கிறது.

நாயைக் கூட வெறி பிடிக்காமல் இருக்க வாக்கிங் கூட்டிச் செல்வோர், குழந்தைகளை அடைத்து வைத்து படிக்க வைக்கிறார்கள். பத்தாதென்று ராசிபுரம் நாமக்கல் பக்கங்களில் முழுநேரப் (24/7) பள்ளிகளிலும் இந்தக் கொடூரம் நிகழ்கிறது. மன அழுத்தமே ஏற்படாதா மாணவர்களுக்கு?
எப்போதும் வீடியோ கேம் விளையாடுகிறான்/ள், கார்டூன் சேனல் பார்க்கிறான்/ள் என்று அங்கலாய்ப்பவர்கள், பிள்ளையை எந்த விளையாட்டில் விருப்பம் என்று கேட்டிருக்கிறீர்களா? பள்ளியில் ஏன் விளையாடுவதில்லை என்று கேட்டிருக்கிறீர்களா? "இந்த தடவை ரேங்க்/மார்க் குறைவு எங்கேயாவது டியூசன் சேத்துவிடட்டா?" என்று படிப்புக்கு மட்டும் தனிப்பயிற்சி அளிக்கத் தயாராய் இருக்கும் தாய் தந்தையரே, விளையாட்டுக்கு தனிப்பயிற்சி பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? அப்படி அளித்தால் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக, வீட்டுக்கு மட்டுமில்லை நாட்டுக்கே பெருமை சேர்க்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை. அது போக கூடுதல் நன்மைகளாக அரசாங்க வேலைவாய்ப்பிலும், கல்லூரி சேர்க்கையிலும் தனி கோட்டா விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது. ஒரு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கும் நீங்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் தகுதியைப் பார்க்கும் நீங்கள் ஆண் பெண்ணுக்கென தனித்தனி உடற்பயிற்சி/விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளார்களா என்று பார்த்தீர்களா?    விளையாட்டு வகுப்பு முறையாக தவறாமல் நடத்தப்படுகிறதா என்று விசாரித்தீர்களா? போதுமான அளவில் விளையாட்டு உபகரணங்களும் முதலுதவி பொருட்களுமிருக்கிறதா அப்பள்ளியில்?

விளையாட்டின் அடிப்படையே வெற்றியை நோக்கிய விடா முயற்சியும், முன்னேறிக்கொண்டே இருப்பதும் தான். வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்கள் அனைவர் வாழ்விலும் விளையாட்டின் பங்கு இருக்கிறது. "படிக்கிற வேலையைப் பாரு அப்புறம் விளையாடலாம்" என்று நீங்கள் போனால் போகிறது என்று அனுமதிப்பதால் எந்த ஒரு குழந்தையும் விளையாட்டு வீரர் ஆகிவிட முடியாது.



 OVERALL MEDALS   GOLD SILVER BRONZE TOTAL
1  United States of America
10188247102552
2  USSR
473376355 1204
3  Germany
232235251 718
4  Italy
227189211627
5  Great Britain
217258262737
6  France
217239273 729
7  Democratic Republic of Germany
192165 162519
8  Sweden
190192222 604
9  China
172135122 429
10  Norway
161154133 448
11  Hungary
159143163465
12  Russia
145130138 413
13  Finland
142142171455
14  Australia
136138167441
15  Japan
132124141 397
16  Canada
110139156 405
17  The Netherlands
100110121331
18  South Korea
918881260
19  Switzerland
89107111307
20  Romania
8689117 292
21  Austria
73103111 287
22  Federal Republic of Germany
6982 94245
23  Cuba
676463 194
24  Poland
6486125 275
25  Unified Team
544437135
26  Bulgaria
528680 218
27  Czechoslovakia
515760168
28  Denmark
416466 171
29  Belgium
385254 144
30  Turkey
372322 82
31  United Team of Germany
366041137
32  New Zealand
36163587
33  Spain
354931 115
34  Greece
304236 108
35  Ukraine
292349 101
36  Yugoslavia
28343294
37  Kenya
222924 75
38  Brazil
202547 92
39  South Africa
20242670
40  Ethiopia
18614 38
41  Argentina
17232666
42  Czech Republic
15171749
43  Jamaica
132317 53
44  Estonia
131015 38
45  Mexico
121825 55
46  Belarus
112440 75
47  Islamic Republic of Iran
11152248
48  Kazakhstan
10191645
49  North Korea
10132043
50  India
94720
51  Slovakia
8106 24
52  Ireland
878 23
53  Mixed team
854 17
54  Croatia
7119 27
55  Egypt
7710 24
56  Thailand
7410 21
57  Indonesia
6910 25
58  Morocco
6510 21
59  Uzbekistan
558 18
60  Georgia
5211 18
61  Portugal
4711 22
62  Lithuania
448 16
63  Azerbaijan
439 16
64  Algeria
428 14
65  Slovenia
3712 22
66  Australasia
34512
67  Zimbabwe
341 8
68  Bahamas
334 10
68  Pakistan
334 10
70  Cameroon
311 5
71  Latvia
2135 21
72  Nigeria
2912 23
73  Mongolia
2710 19
74  Chile
274 13
75  Chinese Taipei (Taiwan)
261119
76  Luxembourg
230 5
77  Uruguay
226 10
78  Liechtenstein
2259
79  Tunisia
223 7
80  Dominican Republic
2114
81  Trinidad and Tobago
15814
82  Colombia
137 11
83  Uganda
132 6
84  Peru
1304
85  Venezuela
128 11
86  Armenia
117 9
87  Israel
115 7
88  Costa Rica
112 4
89  Syria
111 3
90  Ecuador
110 2
90  Hong Kong
110 2
92  Panama
102 3
93  Mozambique
101 2
93  Suriname
101 2
95  Burundi
100 1
95  Bahrain
100 1
95  United Arab Emirates
1001
98  Namibia
040 4
99  Philippines
0279
100  Moldova
023 5
101  Iceland
022 4
101  Malaysia
022 4
101  Lebanon
022 4
104  Serbia and Montenegro
0202
104  Singapore
020 2
104  Tanzania
020 2
104  Vietnam
020 2
108  Puerto Rico
0156
109  Bohemia
013 4
109  Ghana
013 4
111  Individual Participant
0123
111  Kyrgyzstan
0123
111  Serbia
012 3
114  Haiti
011 2
114  Saudi Arabia
0112
114  Sri Lanka
011 2
114  Tajikistan
0112
114  Zambia
011 2
119  Netherlands Antilles
0101
119  Cote d'Ivoire
0101
119  Virgin Islands
0101
119  Paraguay
010 1
119  Senegal
010 1
119  Sudan
010 1
119  Tonga
010 1
126  West Indies Federation
0022
126  Qatar
002 2
128  Afghanistan
0011
128  Barbados
001 1
128  Bermuda
001 1
128  Djibouti
001 1
128  Eritrea
001 1
128  Guyana
001 1
128  Iraq
001 1
128  Kuwait
001 1
128  Macedonia
001 1
128  Niger
001 1
128  Togo
001 1