Pages

Saturday, December 31, 2011

காலண்டர் மாற்றும் திருவிழா



௦௦00.00.00.00௦௦ என்ன இது? புத்தாண்டு கொண்டாடும் நேரம். பூமி சூரியனை ஒரு ரவுண்டு வந்ததயா கொண்டாடுகிறோம்? ஒரு நீள்வட்டப் பாதையின் முடிவு எது? ஆரம்பம் எது? பூமி இந்த சுற்றிவரும் விளையாட்டை ஆரம்பித்த ஆண்டு தெரியுமா? சூரியன்தான் பூமிக்கு சுற்றுலாத் தலம். நிலவுக்கு பூமி. நாமும் பூமியுடன் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம் சூரியனை. நிலவு நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியன், புதன், வெள்ளி கிரகங்களைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் நம்மையும் சேர்த்து சூரியனை சுற்றிக்கொண்டுள்ளன. நாம் ஏன் நவகிரகங்களையும் கோயிலில் சுற்ற வேண்டும்? 

ஹாப்பி நியூ இயர் கொண்டாடும் மக்களே! ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்பென்ன தெரியுமா?
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்து பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச மக்களால் கொண்டாடப்படும் விழா இதுதான். இதற்கு ஈடான ஒரு விழா (இந்த கோணத்தில்) வேறு இல்லை. ஆங்கில காலண்டர் கிருஸ்து பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் பிறந்த நாளாக கருத்தப்படும் டிசம்பர் 25 கி. மு. வா? கி. பி. யா? அவர் பிறந்த தேதியையே ஜனவரி 1 ஆக அமைத்திருக்கலாமே. 
             

சூரியக் குடும்பத்தை வைத்துதான் காலண்டர் முறையை கணக்கிட்டார்கள். ஆனால் ஏன் கோள்களின் வரிசைக்கிணங்க வாரநாள்களுக்கு பெயர் வைக்கவில்லை? சூரியக் குடும்பத்தின் படி வாரநாள்களுக்கு பெயர் வைத்திருந்தால்..........

ஞாயிறு                       Sunday
புதன்                           Wednesday
வெள்ளி                       Friday
திங்கள்                        Monday
செவ்வாய்                    Tuesday
வியாழன்                     Thursday
சனி                             Saturday        

இப்படித்தான் இருந்திருக்கும். நம் காலண்டர்.

டைப்ரைட்டரிலும், கீபோர்டிலும்
QWERTYUIOP
ASDFGHJKL
ZXCVBNM
போல கோள்களின் வரிசைகளையும் மாற்றி வைத்தான் கிறுக்கு மனிதன்.

புளூட்டோவை சிறிது காலத்திற்கு முன்  நம் (சூரிய) குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அது என்ன இவர்களை நம்பியா சூரியனை சுற்றிக் கொண்டுள்ளது இத்தனை காலமாய்.

இந்தியாவிலேயே பல காலண்டர்கள் உள்ளன. தமிழ் காலண்டர், தெலுங்கு காலண்டர், ஹிந்து காலண்டர், முஸ்லிம் காலண்டர் இன்னும் பிற. அனைத்து புது வருடங்களும் தமிழனின் அணுகுமுறையில், வருடப் பிறப்பு என்றுதான் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பது new year என்பதின் மொழிபெயர்ப்பு. நீர்வீழ்ச்சி – waterfalls என்பது போல. அருவி என்ற அருமையான சொல் இருந்த போதிலும். மொழி பெயர்ப்பைப் பற்றி என் இன்னொரு கருத்து. மின்விசிறி, மின்விளக்கு மற்றும் பல்வேறு பொருட்களுக்கு ‘மின்’ என்ற   முன்னொட்டு. இந்த சொற்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காலத்தில், வீட்டில், விசிறி மட்டையும் இருந்தது, மின்விசிறி –fan ம் இருந்தது. இப்போது உங்கள் வீட்டில் விசிறி மட்டை உள்ளதா? அதனால் ‘மின்’ ஐ தூக்கிவிட்டு விசிறி என்றே பயன்படுத்தலாம். வீட்டில் பாதி நேரம் மின்சாரம் இல்லாததாலும் ‘மின்’ ஐ தூக்கி விடலாம். இது போல நாம் பல பாரம்பரியமான சொற்களைக் காக்க முடியும். மைக்ரோசாப்ட் இன்னும் save icon க்கு பிளாப்பி டிஸ்க் ஐ தான் பயன் படுத்துகிறது. அதைப் போல நாமும் நம் பாரம்பரிய சொற்களைக் காப்பாற்றுவோம்.


மீண்டும் புத்தாண்டிற்கு வருவோம். 2012 காலண்டரில் இரண்டே வரிதான். ஜனவரி, பிப்ரவரி. மார்ச் மாதம் கட்டாயம் கட்ட வேண்டும் வருமான வரி. 2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம் வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி, சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.  2012 மிக வேகமாக ஓடிவிடும் என்று தோன்றுகிறது.

வாழ்த்துக்கள். இவ்வளவு நேரம் படித்ததற்கு.

Wednesday, December 14, 2011

why this kolaveri di தமிழில்.... முற்றிலும் தமிழில்..........(kolaveri lyrics in tamil)

நான் பாடும் பாட்டு .....   ஓ நான் பாடும் பாட்டு 
நல்ல பாட்டு 
மொக்க பாட்டு 


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி


தாளம் சரியா


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி


தயவு செய்து தாளத்த  மாத்தாத 
ஏன் இந்த kolaveri .. டி

தொலைவில் நிலவு-நிலவு-
நிலவின்  வண்ணம் வெள்ளை
வெள்ளை பின்னணியில் இரவு...  இரவு.... 
இரவின் வண்ணம் கருப்பு

ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி

வெள்ளை தோல் பொண்ணு ம்ம்  பொண்ணு
பொண்ணு  இதயம்  கருப்பு.....
கண்ணும் கண்ணும் சந்திக்க...சந்திக்க....
என் எதிர்காலம் ஆச்சு இருட்டு 

ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி

மாமா குறிச்சுக்கோ 
அப்படியே கைல சாக்ஸ(போன்)  எடுத்துகோ 


ப் ப பா பா....ம்  ப் பா பா பாம்..... ப பா பா பா பா பாம்
ம்...சரியா வாசி 


சூப்பர் மாமா தயார்
1 2 3 4 தயார்

 என்ன மாமா ஒரு மாற்றம்
சரி மாமா இப்போ இசைக்கு மாற்றம்


கைல குவளை 

வாயில பீட்டர் 

கை  குவளை 
குவளையில் தண்ணீர் 
கண்ணுல முழு சா கண்ணீர்
வாழ்க்கை காலி 
பொண்ணு வரும்
வாழ்க்கை தலைகீழா போகும் 
காதல்.....ஓ .காதல்........
 என் காதல் ஊ...
நீங்கள் என்னை பவ்வு காட்டினீர்கள்
மாட்டு  மாட்டு நல்லா மாட்டு
இப்போது தான் கேட்கிறேன்
கடவுளே நான் இறக்கும் தருவாயில் இப்போது
அவள் சந்தோஷமாக இருக்கிறாள்!!  எப்படி?

இளைஞருக்கு இந்த பாடல்
நமக்கு ஒரு வாய்ப்பும் இல்ல 

ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி



Wednesday, November 9, 2011

தலையைச் சுற்றி மூக்கை..................



         அதிகமாக வேலை செய்தால் கைகள் வலிக்கும். நடந்தால், நின்றால், ஓடினால் கால்கள் வலிக்கும். ஓசை அதிகமாகக் கேட்டால் காது  வலிக்கும். கம்பியூட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண்கள் வலிக்கும். கடினமான உடலுழைப்பால் உடம்பே வலிக்கும். அதிகமாக சாப்பிட்டால் நாக்கு வலிக்குமா? எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும் மூக்கு வலிக்குமா?
           
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலிழக்கும், மூக்கு செயலிழக்குமா? முகரும் சக்தி எந்த வயதிலும் மாறுவதில்லையே. மற்ற எல்லா உறுப்புகளுக்கும் செயற்கையான உறுப்புகள் இருக்கின்றன. இதயமே இயந்திரமாக(pacemaker) ஒரு சிலரை பல நாள்கள் வாழவைக்கின்றது. மோப்பம் பிடிக்கும் மூக்கிற்கு செயற்கை மூக்கு உள்ளதா?

           
கை கால்கள் செயலிழந்தால் ஊனம். கண்கள் செயலிழந்தால் குருடு. காது செயலிழந்தால் செவிடு. மூக்கு செயலிழந்தால் ..................??????

எந்த மொழியிலேனும் இதற்கு பதிலிருக்கிறதா? அப்படி என்ன இந்த மூக்கு செயலிழப்பது மனித வரலாற்றிலேயே நடந்திராத ஒன்றா?
ஜலதோஷம்........ அதனாலும் ஏழு நாட்களுக்கு மேல் முகரும் சக்தியை தடுக்க முடியாது.
           
மூக்கில்லாமல் சுவையும் தெரிவதில்லை. சோதித்துப் பார்க்கிறீர்களா அடுத்த முறை டீ, காபி சாப்பிடும் போது மூக்கைப்பிடித்துக்கொண்டு.

உணவை உட்கொள்ள பெரிதான ஒரு ஓட்டையுள்ள வாய். காற்று வாங்க எதற்கு இரண்டு ஒட்டையுள்ள மூக்கு.

மூக்கில்லை என்றால் தூங்கும் இரவுகளில் தீ விபத்திலிருந்து தப்புவது மிகக்கடினம். தீ உங்களை தொடும்போது, சுடும்போதுதான் தெரியும் தீ என்று.

ஒரு குழந்தை உலகத்தை முதன்முதலாக உணர்வதே மூக்கின் மூலம் தான். தாயைவிட்டு முற்றிலும் வெளிவராத முன்பே முதல் சுவாசம் நுரையீரலை நிரப்பியிருக்கும்.
  
நான் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவில்லை என்பது இப்போது புரிகிறதா?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.........
கழுதைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவு, எதிரி, ஆபத்தின் வாசனைகள் தெரியும். கற்பூர வாசனையால் ஒரு பலனுமில்லை.
            மண் வாசனை தெரியும். விண்வெளியின் வாசனை என்னவாக இருக்கும்!?

காதில் குத்தி அணியப்படும் அணிகலன்களுக்கு தோடு, கம்மல், ஜிமிக்கி என்றெல்லாம் பெயர்கள் இருக்கும்போது மூக்கில் அணியப்படும் அணிகலனுக்குப் பெயர் மூக்குத்தி. அவ்வளவுதானா? வேறேதும் பெயர்கள் இருக்கிறதா? மூக்குக்கண்ணாடி இருக்கிறது, அது கண்ணுக்கு அணியாகிறது. மூக்கணாங்கயிறு – அது மாட்டின் மூக்குத்தி.

            மூக்கு அதி முக்கியத்துவம் பெறுகிறது பெண்களைப் பற்றி ‘மூக்கும் முழியுமாக’ என்று குறிப்பிடும்போது. முழிகள்(கண்கள்) எத்தனையோ  உணர்ச்சிகளை வெளிப்படுத்த வல்லவை. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத மூக்கை ஏன் அங்கே நுழைத்தார்கள்?

கண், காது, நாக்கு, தலை, வாய், வயிறு, கை, கால் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.
மூக்கு என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஓட்டும்.

மூக்கு என்னதான் தவறு செய்ததோ, கோபம் கூட மூக்கின் மேல்தான் வருகிறது!!
உங்கள் மேலான கருத்துக்களை கீழே comments ல் தெரிவிக்கவும். 

Saturday, January 1, 2011

புத்தாண்டு - பூமியின் விழா

ஆண்டுக்கு பனிரெண்டு மாதம் எப்படி? பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் ஒரு நாள். சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றி வர தேவைப்படும் நேரம் ஒரு மாதம். இந்த இயற்கையின் விதிகளைக் கண்டறிந்து காலண்டரை கண்டுபிடித்த அந்த அறிஞனை எண்ணி வியக்கிறேன். ஆக திசம்பர் 31 தான் ஆண்டின் முடிவு! ஜனவரி 1, புது வருட தொடக்கம்!! இதை கொண்டாடும் உலகமக்கள்!!!

இயேசு பிறந்த தினம் – கிருஸ்துமஸ், கிருஷ்ணர் பிறந்த தினம் – கிருஷ்ண ஜெயந்தி. அது போல பூமியின் பிறந்த தினம்தான் ஆங்கிலப் புத்தாண்டா? அல்லது தமிழ் புத்தாண்டா? அல்லது எந்த புத்தாண்டு தான் பூமியின் பிறந்த தினம்?

நேரம் 00:00:01தான் பூமி தோன்றிய நேரமா? பூமியும் சூரியனும் தோன்றாத போது நேரமே இல்லையா?

மகிழ்ந்த்திருக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்குத் தரும் ஒவ்வொரு ஜனவரி 1 யும் நானும் வரவேற்கிறேன். அந்த ஒரு நாளோடு புத்தாண்டு முடிந்து விடுகிறதா? எப்போது ஒரு ஆண்டு பழையதாகிறது?

உலகத்தில் பழையது என்பது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் இயற்கைதான். ஒரு சீரான சுழற்சியில் தான் இருக்கிறது. பூமியை விட மூத்த சூரியன் புதிது புதிதாகத் தானே எரிய முடியும்.

அனைத்து கோள்களுக்கும் ஜனவரி ஒன்று இருக்கிறதா? அக்கோள்களின் புத்தாண்டைக் கொண்டாட யார் இருக்கிறார்கள்?

வாழ்த்துச்செய்தி பரிமாறுதலில் மொபைல் நெட்வொர்க்கே ஒரு சில மணி நேரங்கள் திணறிவிடுகிறது. அந்தந்த time zoneல் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் போது நெட்வொர்க் தனது அதிகபட்ச திறனை மீறி தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. இந்த சூழ்நீலையில் பாதிக்கப் படுபவர்கள் அவசர சிகிச்சைக்காக/உதவிக்காக தொடர்பு கொள்வோர்.

பூமி எவ்வளவோ பாதிப்புகளுக்குப் பிறகும் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டதுதான். சமீபத்தில் கூட நாசா, பூமியின் ஓசோன் ஓட்டை அடைந்து வருவதாகத் தெரிவித்து இருந்தது. ஹெய்டி பூகம்பத்தில் பூமி சிறிது சாய்ந்து நாளின் நேரம் குறைந்துள்ளது.

புத்தாண்டு என்பது யாருடைய விழா? பூமியின் விழா.
யார் விளம்பரப் படுத்தி யார் வியாபாரம் செய்கிறார்கள்?
   
பூமியின் விழாவில் பூமியை பாதுகாக்கும், செம்மைப்படுத்தும், மாசுகளைக் குறைக்கும் செயல்களைத் தானே செய்ய வேண்டும். அதை விடுத்து அனைத்து நாட்டினரும் ஒரே நேரத்தில் தாக்கினால், பாவம் இந்த பூமி.

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா? மற்ற உயிரினங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லையா?

பூமியை நம்பிதான் மனிதர்கள் இருக்கிறோம். மனிதனை நம்பி பூமி இயங்குவதில்லை.

புத்தாண்டை பூமியின் விழாவாக அமைதியுடன் கொண்டாடுவோம். வாழ்த்துக்கள்.