Pages

Friday, June 29, 2012

Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? அல்லது bank account இல் இருந்து எவ்வாறு பணம் திருடப்படுகிறது?

உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வங்கிகளில் சேமிக்கிறோம், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் எனப்படும் பிளாஸ்டிக் பணத்தை ATM களிலும், கடைகளிலும், online shopping எனப்படும் இண்டெர்நெட் கடைகளிலும், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. RBI யின் கணக்குப்படி 2007ல் 41,361 கோடி ரூபாய், 2008ல் 57,958 கோடி ரூபாய் கிரெடிட் கார்ட் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. ஒரு வருடத்தில் 41% பயன்பாடு உயர்ந்திருக்கிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை குறி வைத்து நடக்கும் குற்றங்களும்தான்.
 Inline image 1
இத்தகைய திருடர்களின் நோக்கம் பிறர் கணக்கிலிருக்கும் பணத்தை கார்டுகளின் மூலம் திருடுவது, வங்கிக் கணக்கிலிருந்து online ல் கொள்ளை அடிப்பது. சமகாலத் தமிழில் சொன்னால் 'அடுத்தவன் அக்கவுண்டில் ஆட்டைய போடுறது'.

ம்ம்…. எப்படி நடக்குது?
பொதுவாக தனிப்பட்ட நபரின் வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் கசிவதால் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது. எத்தனையோ வழிகளில் உங்கள் தகவல்களை 'சுட' திருடர்கள் காத்திருக்கிறார்கள்.

கார்டுகளில் ஒரு பக்கம் உங்கள் (கணக்கு வைத்திருப்பவர்) பெயர், வங்கியின் பெயர், முக்கியமான 16 இலக்க கார்டு எண் போன்றவை பொறிக்கப் பெற்றிருக்கும். மற்றொரு பக்கம் கருப்பு நிற மின் காந்த பட்டையில் மின்னணு கருவியால் படிக்கக்கூடிய தகவல்கள் அடங்கியிருக்கும். மேலும், CVV எனப்படும் Card Verification Value, கார்டின் பயன்பாடு முடிவடையும் தேதி இவையெல்லாம் பொரிக்கப் பெற்றிருக்கும். இத்தகைய தகவல்கள் கசிவதால் தான் குற்றங்கள் நடக்கின்றன.

சரி….. இதுல எத்தனை வகைதான் இருக்குது?
இந்த மாதிரி குற்றங்கள் இரண்டு வகை, முதல் வகை offline திருட்டு. அடுத்தது online திருட்டு.

Ok. அதப்பத்தி தெளிவா  சொல்லுங்க.
உங்கள் கார்டு (atm/debit/credit) திருடப்பட்டு, உங்களைப் பற்றிய, உங்கள் அக்கவுண்ட் பற்றிய விவரங்களுடன் நடைபெறுவது offline குற்றம் அல்லது திருட்டு. உங்கள் பர்சை பிக்பாக்கெட் அடித்தோ, உங்கள் emailல் நுழைந்தோ, உங்கள் வீடு மற்றும் அலுவலக குப்பையிலிருந்தோ அல்லது வேறு எந்த வழியிலோ திருடர்கள் உங்கள் விவரங்களை பெறுவார்கள். இப்படி நடக்கிறது offline குற்றம்.
அதாவது உங்கள் கார்டும், அது சம்பந்தப்பட்ட தகவல்களும் இல்லாமல் offline திருட்டு நடக்காது.
இது பரவயில்லை, அடுத்து பயங்கர கொள்ளையை online குற்றத்தில் பாருங்கள்.

ஸ்… ஸபா…….     இப்பவே.. கண்ண கட்டுதே…….

Online குற்றம் தான் திருடனுக்கு சுலபமான வழி, ஜாலியாக internetல் இருந்தே உங்கள் பணத்தை எந்த நேரத்திலும் கொள்ளை அடிக்கலாம்.

onlineல் திருட்டு 3 முறைகளில் நடக்கிறது

1.      Phishing: திருடர்களால் உங்கள் வங்கி மற்றும் கார்டு தகவல்களுக்காக 'தூண்டில்' போடப்படுவது. முதலில் திருடன் உங்கள் email முகவரியைப் பெறுவான். பிறகு உங்களுக்கு  உங்கள் வங்கியிலிருந்து வருவதைப் போல ஒரு mail வரும், நம்பத்தகுந்தவை போலவே இருக்கும் (இந்த mail வேறு (எந்த) மாதிரியாகவும் இருக்கலாம்). அந்த mailல் link ஒன்று தரப்பட்டிருக்கும். இதுதான் தூண்டில். அதில் நீங்கள் click செய்தால், உங்களை ஒரு log-in பக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் வங்கியின் தளத்தைப் போலவே வடிவமைக்கப் பட்டிருக்கும். அதில் உங்கள் log-in name மற்றும் கடவுச்சொல் (password) கொடுத்து விட்டால் உங்கள் அக்கௌன்ட்  (ஊ.… ஊ….) தடுமாறிவிடு(ழு)ம், balance இருக்காது.


2.      Skimming: திருடர்கள் உங்கள் கார்டைப் போலவே ஒரு கார்டை தயாரிப்பார்கள். ஒரு cd யிலிருந்து மற்றொரு cd யில் தகவல்களை பதிவது போல். இதற்காகவே skimmer என்ற கருவி உள்ளது. உங்கள் கார்டை அதில் swipe செய்தால் (தேய்த்தால்) போதும். மற்றொரு வெற்று (blank) கார்டில் பிரதி எடுத்து உங்கள் அக்கௌன்டில் பணத்தை காலி செய்வார்கள். உங்கள் கார்டு க்ரெடிட் கார்டாக இருந்துவிட்டால் அதன் credit limit வரை காலி செய்து விடுவார்கள். பிறகு திருடனின் கடனை நீங்கள் தான் அடைக்க வேண்டும்.
பொருட்கள் வாங்கிவிட்டு நீங்கள் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது உங்கள் பார்வையிலிருந்து மறைத்து skimmerல் தேய்ப்பார்கள். Skimming ஹோட்ட்ல்களிலும் பெட்ரோல் பங்க்களிலும் நடைபெறலாம்.
Inline image 2 
3.      Application குற்றம்: திருடன் ஒரு வங்கிக் கணக்கை உங்கள் பெயரில் ஆரம்பிப்பான். அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் (ரசீதுகள், வங்கி கணக்குகள் மற்றும் பல ) திருடி கிரெடிட் கார்டு பெற்று செலவு செய்தால் நீங்கள்தான் வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும்.
உக்காந்து யோசிப்பாங்களோ…..
 இதுல இருந்து எப்படி escape ஆகிறது?
 Alert ஆ இருக்கணும்.
  • நீங்கள் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை நகல்களாக கொடுக்கவும். மேலும் அந்த நகல்களில் உங்கள் கையொப்பம், தேதி, எதற்காக அளித்தது என்றும் எழுதி விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு கணக்குகளை வாரத்திற்கு ஒரு முறையேனும் பணப்பரிமாற்ற ரசீதுகளுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள். Internet banking வசதி இருந்தால் பணப்பரிமாற்ற்ங்களை பார்த்துக்கொள்வது எளிது.
  • சந்தேகிக்கும் படி ஏதேனும் உங்கள் கணக்கில் நடந்திருந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். தவறான பரிமாற்றம் இருந்தால் புகார் அளிக்க தாமதம் வேண்டாம். இது பாதிப்புகளை குறைக்கவும், தவறை கண்டுபிடிக்கவும் உதவும்.
  • அனைத்து பழைய வங்கி ரசீதுகள், உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ள ரசீதுகளை அப்புறப்படுத்துமுன் கிழித்துவிடுங்கள். இது Application குற்றம் நடக்காமல் தவிர்க்கும்.
  •  எளிதாக யூகிக்க முடியாத password ஐ பயன்படுத்தவும். பெயர், பிறந்த தேதி, வண்டி எண் இதுபோன்றவற்றை password ல் பயன்படுத்த வேண்டாம்.
  • ஒரே passwordஐ தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். மாற்றிக் கொள்ளுங்கள்.
  • கார்டின் பின்புறமுள்ள CVV எண்ணை மனதில் பதிய வைத்துக்கொண்டு அழித்து விடவும்.
  • உங்கள் பரிமாற்றம் குறித்த SMS மற்றும் email alert களுக்கு வங்கியில் பதிந்து கொள்ளுங்கள்.
  • கடைகளில் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது, கார்டை உங்கள் பார்வையிலிருந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளவும். 
  • websiteல் பணப்பரிமாற்றம் செய்யும் போது அந்த websiteன் நம்பகத்தன்மைக்கு VISA அல்லது Master card secure code உள்ளதா என்று கவனிக்கவும்.
  • வெப்சைட்டின் முகவரி https. என்று உள்ளதா என்று கவனிக்கவும்.
  • ATMல் பணம் எடுக்கும்போது வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம்.
  • உங்கள் கார்டை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
  • PIN எண்ணை எழுதி வைக்க வேண்டாம். எழுதினாலும், கார்டுடன் வைக்க வேண்டாம்.
  • கார்டு தொலைந்து போனால், உடனடியாக வங்கியில் தெரிவித்து கார்டை முடக்கி (block) விடவும்.


திருடர்கள் இன்னும் பல்வேறு புது வழிகளில் (VISHING, SPOOFING, MONEY MULE...etc) திருட முயற்சி செய்வார்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நவீன பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ATM ல் எதாவது புதிதாக அல்லது வினோதமாக தென்பட்டால் (படத்தில் உள்ளதைபோல்) அந்த ATM machine ஐ பயன் படுத்த வேண்டாம். 



wireless கேமெரா, உங்கள்  pin அல்லது Password ஐ தெரிந்து கொள்வதற்காக. 


பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கும். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையில் அளித்த தகவல்கள், என் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாய் அவர் பயணத்தில் இருந்தபோது) போலி கார்டு மூலம் திருடப்பட்ட பின், தெரிந்து கொண்டது. 

உங்கள்  கருத்துக்கள் மற்றும் இந்த கட்டுரையில் விட்டுப்போன அல்லது புதிய  தகவல்களை  தெரிவிக்கவும்.
நன்றி!


8 comments:

  1. Very useful to us.Thanks for ur usefulthink

    ReplyDelete
  2. இன்றைய சூழ்நிலைக்கு அனைவரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியவை.

    தெரியப்படுத்தியமைக்கு நன்றி.........

    ReplyDelete
  3. munbu sonnaddhu pol marupadiyum kanna kattudhu...

    ReplyDelete
  4. very useful post.. i have bookmarked your link :)

    ReplyDelete
  5. Greаt post. I was checκing cοnstantly this blοg and I'm impressed! Extremely helpful information particularly the last part :) I care for such info a lot. I was looking for this certain information for a very long time. Thank you and good luck.

    Here is my web blog :: stop repossession

    ReplyDelete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete