Pages

Showing posts with label தாகூர். Show all posts
Showing posts with label தாகூர். Show all posts

Friday, September 6, 2013

தாடி


தாடி என்பது காதல் தோல்விக்கான குறியீடு எனும் குறுகிய எண்ணப்போக்கு வேண்டாம். தாடிக்கென்று மிகப்பெரிய வரலாறே உள்ளது. வரலாற்றையே உருவாக்கியதும் உருமாற்றியதும் தாடிக்காரர்கள்தான்.
 


தாடி ஒருவேளை காதலித்த இருவரின் பிரிவை குறிக்கும் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகிறது, மார்க்சியத்தை உலகிற்குத் தந்த மாபெரும் மனிதன் கார்ல் மார்க்ஸ் காதலித்து மணந்த தன் மனைவி ஜெனீயுடன் வாழ்ந்த போதும், மனைவி இறந்த போதும் தாடியுடன் தான் வாழ்ந்தார். கிட்டத்தட்ட எல்லா மதத்தவர்களுமே சீக்கியர், இசுலாமியர்(முகமது நபி), கிறிஸ்தவர்(ஏசு, கிருஸ்துமஸ் தாத்தா), இந்து(சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள்), ஏன் தாடி வைத்து இருந்தார்கள்? இருகிறார்கள்? அனைவரும் காதலில் தோற்றவர்களா?  சிவன், இவரு பேரு சடா முடி, ஆனா தலையில மட்டும் முடி, தாடி சுத்தமா மழிச்சி இருப்பாரு (எல்லாம் ஒவியனோட தவறான கற்பனை). மதம், கடவுள், தீண்டாமை இல்லை என்ற பெரியாரும், கம்யுனிச வாதியுமான கார்ல் மார்க்சும் தாடியுடனேயே காணப்பட்டனர்.  கம்யுனிசம் ஒரு உணர்வு, இடத்துக்கு இடம் மாறுபடும். கிரேக்கத்தை ஆட்டுவித்த தத்துவ மேதை சாக்ரடீஸ், ப்ளுடோ, மற்றும் நான் ரசித்த போராளி, பார்க்க துடிக்கும் தலைவர் முறையே, வல்லரசு ஆதிக்கத்தில இருந்து கியுபாவை வென்று எடுத்த சே.., பிடல்காஸ்ட்ரோ ஆகியோரும், இன்னும் பல புதுமைகளையும், பல கண்டுபிடிப்புகளையும் தந்தும், தந்து கொண்டு இருக்கிற, நோபல் பரிசை உலகுக்கு அறிமுகம் செய்த அல்பிரட் நோபல் மற்றும் ஆராய்ச்சியாளர்களும், உலகத்தில் வாழும் அனைத்து உயிரினத்தின் பரிணாமத்தினை ஐந்து வருடம் கடல் மார்கமாக உலகை சுற்றி ஆராய்ந்து உயிரினங்களின் தோற்றம் ஆய்வு கட்டுரையை உலகத்திற்கு தந்த சார்லஸ் டார்வின், ஆகியோரும் தாடியுடனேயே காணப்பட்டனர்.
  
செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாக பிறந்த ஆப்ரகாம் லிங்கன், ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து, தனது அரசியல் வாழ்வில் முதன்முதலில் வெற்றிபெற்றது ஒரு சிறுமியின் வேண்டுகோளுக்கிணங்க தனது பருவந்த, ஒடுக்கத்துடன் காணப்பட்ட, பாவப்பட்ட முகத்தில் தாடி வைத்தபின்பே அமெரிக்க அதிபரானார் என்பது வரலாறு.  காரல் மார்க்ஸ் நாடு கடத்த பட்ட போது, பலபோழுது இரவு நேரத்தில் வீதியிலும், குளிரிலும், ஒளிந்தும், மறைந்து திரிந்து மூலதனத்தை உலகிற்கு தந்தார், சே., ஆஸ்துமாவால் பாதிப்புற்று கொரில்லா தாக்குதலுக்கு முற்படும் போதும் மிக அடர்ந்த காட்டில் சுற்றித்திரிய முகத்தில் முடி  தேவை பட்டு இருக்கலாம், இதுதான் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதே !!! (thermoregulation)
இன்னும்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 1031

மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார் போன்ற வேளாண் விஞ்ஞானிகளும் தாடியுடனேயே காணப்பட்டனர்.
  
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவன் வாழ்ந்த காலகட்டத்தில்  குழந்தைத் திருமணம் இருந்திருக்க கூடும், இருந்திருந்தால் திருவள்ளுவரும் வாசுகி அம்மையாரூம் பால்ய பருவத்திலேயே சேர்ந்து வாழ்ந்து இருப்பார்கள், ஆக வள்ளுவனுக்கும் காதல் மலர்ந்தது திருமணத்திற்கு பிறகு பருவ வயது எட்டியதும். அங்கு தோல்வியும் இல்லை அப்படி அவருக்கு மற்ற யாரோடும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பும் இல்லை!!!


பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோரர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு – 149  

இது இவரு எழுதினது அப்ப ஒழுக்கமாகத்தான் இருந்திருப்பாரு. அது மட்டும் அல்ல, தமிழர்கள் தமிழர்களாய் வாழ்ந்த காலம் அது. காதல் என்னவென்று உலகுக்கு சொல்லும் இன்றைய  கேவல சினி(மாக்கள்), இப்ப இருக்கறமாதிரி விண்ணைத்தாண்டி வருவாயா?,.. ஆதலினால் காதல் செய்வீர்!.. தமிழர்களை முன் நடத்தி செல்லும் காலம் இல்லை.

ஷாஜகான் பல மனைவியுடன் வாழ்ந்த போதும் மும்தாஜின் இறப்பிற்கு பிறகும் தாடியுடனேயே காணப்பட்டார், மும்தாஜ் திருமணமான 19 வயதிலிருந்து 40 வயதுவரை 14 குழந்தையைப் பெற்றெடுத்து 14 வது பிரசவத்தில் ரத்தப்போக்கால் இறந்து போனாள். இது காதலே இல்லை. ஷாஜகானுக்கு இது வெற்றியே ஒழிய தோல்வியில்லை பிறகு ஏன் இந்த தாடி? அப்புறம் ஒசாமா பின்லேடன்?.

இந்த மயிரூ,. குளிரு நேரத்தில் மனிதனை குளிரில் இருந்து காப்பாற்றி தட்ப வெப்பத்தினை கட்டுபடுத்தும் ஈரத்தினை தக்க வைக்கும் தன்மை கொண்டது (thermoregulation), கற்காலமனிதன் தனது வாழ்நாளில் பலமணிநேரத்தை இரை தேடலிலேயே கழித்தான், இவன்தான் வேட்டையாடுவான் தனக்கும், தன்னை சார்ந்த துணைக்கும். ஆதலால் உடம்பில் முடியுடனும், தாடியுடனும்தான் திரிந்து வாழ்ந்து இருப்பான். அப்ப, குளிரிலிருந்து தப்ப!!! 
 
இது காதல் தோல்வியால் ஒரு ஆண் முகத்தில் தாடி வச்சிகிட்டு திரியிறான்னு வச்சிக்கிடா, தோல்வி என்பது எதோ ஆண்களுக்குத்தானா? பெண்களுக்கு காதல் தோல்வி என்பது இல்லையா? இல்லை ஏற்படாமல் இருக்க தாடியை இயற்கையே தவிர்த்தா? எல்லாம் அன்றோஜென் (Androgenic Hormone) சேய்யும் வேலைமா!!! வேலை!!! ஆண்மையின் அடையாளம் !!! பருவ வயதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலில் சில மாற்றம் நிகழும் இது இயற்கை, இங்க ஒன்னும் காதலும் இல்ல கத்திரிகாயும் இல்ல.

சபரி மலை சாமி தினம் ரெண்டு வேளை அதுவும் கார்த்திகை மார்கழியில் குளி(ரி)யல், அந்த சாமி மேற்குதொடர்ச்சி மலைமேல இருக்கு, அத பாக்க போனா மழைகாலத்தில் குளிர் வாட்டி எடுக்கும் அதுக்காக தாடி, தலையில் கனத்த மயிர வளர்த்தால் உடம்பின் தட்பவெப்பத்தை தக்க வைக்க உதவும். திருமணம் ஆனவங்க தனியா படுத்தா, உடம்பில் எதிர்ப்பு சக்தி இருக்கும். செருப்பு போடாம பழகினா மலையில் ஏறுவதற்கு பழகிபோயுரும், மத்த கலர விட  கருப்புகலரு துணி சீக்கிரம் காயும் அது அறிவியல் சாமியோ!!! சாமியோ!!!  சரணம் !!!!!
 
சவரம் செய்யாதிருந்தால், மனித தோல் பகுதியை புறஊதாகதிர் தாக்குதலில் இருந்து காப்பற்றிக் கொள்ளவும், இன்று உள்ள மாசுபட்ட காற்றில் இருந்து மிக நுண்ணிய துகள் சுவாசகாற்றுக்குள் சென்று ஆஸ்துமா போன்ற நுரையிரல் தொற்று தடுக்கவும், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வேதிபொருட்களை ஆய்வகத்தில் பயன்படுதும் போது வேதி பொருளின் ஆவியானது(chemical vapour) முகத்தில் பட்டு தோலின் மெலனினுக்கு கேடு விளைவிக்காமல் இருக்கவும் பயன்படும். சிந்திக்கும் போது தடவ முடியும் :-)

வேடதாரிகளுக்கு வேடமிட ஆளும், நேரமும் நிறைய உண்டு. சராசரியாக ஒரு ஆண் 15 – 65 வயது வரை முகத்தில் இருக்கும் முடியை நீக்க வேண்டும் என்று வைப்போம் (நீக்குவோம்), ஒரு முறைக்கு 20 நிமிடம் என்றால் வாரத்திற்கு 2 – 3 முறை, வருடத்திற்கு சுமார் 52 மணி நேரம், சராசரியாக 50 வருடம் என்று கணக்கிட்டால் ஒரு மனிதனுக்கு ((52 x 50)/24)= 108.3 முழு நாள் தேவை படும், அது மட்டு அல்லது உபகரணங்கள் சவர கத்தி, சோப்பு, படிகாரம் மற்றும் பல., (Razer, Blade, Shaving cream, Brush, After shave lotion, Moisturiser , Anti oil cream, finally Powder to avoid oily face due to moisturiser cream) அதுதான் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாச்சே அத போயி மழிச்சா? skin rashes, infection, powder ரால சருமத்தின் நுண்ணிய துளை அடைபட்டு பரு வரும்  அப்புறம் அதுக்கு ஒரு கிரீம் So Sad :-(
  

மொத்தத்தில் போராளி, ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன், உழுபவனும் தாடியுடனே காணப்பட்டனர்.

தாடி எடுத்தால் என்ன வரும் (வராது)
அறுவை சிகிச்சியையின் போது முடியினை நீக்குவார்கள், தவறினால் உடலின் உட்பகுதியில் தவறுதலாக முடி செல்ல வாய்ப்பு இருக்கு, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தபடும்  மிக கூர்மையான உபகரணத்தால் வெட்டப்பட்டு!!!
நல்லா வளந்த தாடி நைசா இருக்கும், இளந்தாடியால் இருவருக்கு பிரச்சனை இருக்ககும். குழந்தையை ஈன்றெடுத்த அன்னைக்கு, மற்றொன்று குழந்தைக்கு. ரெண்டுமே முத்தத்தின் போது!!!
மற்றபடி தாடியால் ஒரு பிரச்னையும் வராதுங்க.
ஒரு கருவுற்ற பெண்ணின் கணவன் ஏன் தாடி வைக்கிறான்?
தாடியை எடுக்கும் மனிதர்கள் எல்லாம் மீசை , தலை முடி மற்றும் புருவத்தையும் நீக்காமல் இருப்பது ஏன்?
மொத்தத்தில் கவுண்டமணி, செந்தில் செய்யிற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது,
செந்தில்: அண்ணே எனக்கு ஒரு டவுட்டு.
மணி:  என்னடா தேங்காய் தலையா.
செந்தில்: என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கனே.
மணி: டேய் இதுக்குதான் ஒரு ஆளினால் அழகுராஜா வேணுங்கிறது.
செந்தில்: தலையில மொளைச்சா அது தலை முடி, நெஞ்சில மொளைச்சா அது நெஞ்சி முடி அப்பறம் எனே மொகத்தில் மொளைச்சா மட்டும்  தாடிங்கராங்க?????
மணி: கோமுட்டி தலையா டேய் அவன புடிங்க........
தாடையின் பகுதியில் வளரும் முடி காலபோக்கில் மருவு மொழியாக தாடியானது (தாடை முடி)

உங்களின் நண்பர்களையும் உங்கள் ஆண் மகனையும் தாடி எடுக்க வற்புறுத்தாதீர்கள்
   

Punch :  தாடியோட இருந்தா தான்.......  ஆம்பிள சிங்கம் :-)

குறிப்பு: style தாடிக்கு மேலே சொன்ன நற்பலன்கள் பொருந்தாது.

அன்புடன்