உரக்கச் சொல்லுங்கள்,
விளையாட்டின் அடிப்படையே வெற்றியை நோக்கிய விடா முயற்சியும், முன்னேறிக்கொண்டே இருப்பதும் தான். வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்கள் அனைவர் வாழ்விலும் விளையாட்டின் பங்கு இருக்கிறது. "படிக்கிற வேலையைப் பாரு அப்புறம் விளையாடலாம்" என்று நீங்கள் போனால் போகிறது என்று அனுமதிப்பதால் எந்த ஒரு குழந்தையும் விளையாட்டு வீரர் ஆகிவிட முடியாது.
நான், என் பெற்றோர், என் பள்ளி, ஆசிரியர்கள், என் ஊர் மக்கள், அரசாங்கம்.
உரக்கச் சொன்னது போதும்.
எனக்கு விளையாட்டு மிக மிக விருப்பம், என்னை விளையாட விட்டதா இந்தச் சமூகம். என் அம்மா, அப்பா, ஆசிரியர்களின் அடக்குமுறை என்னை படிப்பை நோக்கித் தள்ளியது. பேச்சு, கருத்து, மதம், மதமற்ற நாத்திகம் அனைத்திற்கும் சுதந்திரம் உள்ள இந்நாட்டில் குழந்தைகள் விளையாட்டு வீரராக சுதந்திரம் இல்லை. ஒரு விளையாட்டு வீரனாக மாற எத்தனை தடைகள் இருக்கிறது தெரியுமா இந்நாட்டில்? தற்போதைக்கு ஒலிம்பிக் 2012இல் பங்கேற்ற அனைத்து வீரர்களும் எதோ ஒரு துறையில் வேலை செய்கிறார்கள்/ நன்றாக படித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் பயிற்சியினாலும் திறமையினாலும் (சிலர் பயிற்சி, திறமையுடன் பணபல அரசியல் செல்வாக்காலும்) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். அதற்கு மேலும் பார்த்தால் தன் சொந்த செலவில் பயிற்சி எடுத்தவர்கள் 80%. (அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங், அஸ்வினி பொன்னப்பா, ஜ்வாலா குட்டா, செய்னா நேவால், சானியா மிர்சா இன்னும் பலர்).
உங்கள் ஊரில் போதிய விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியில் ஏன் உங்கள் பிள்ளைகளை சேர்க்கிறீர்கள்? ஒரு சில கேள்விகளை உங்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள். ஹாக்கி/கபடி/வாலிபால் அணியில் எத்தனை வீரர்கள்? ஹாக்கியில் உள்ள பந்து எந்த வகை காற்றடைத்ததா அல்லது கார்க் பந்தா அல்லது பிளாஸ்டிக் பந்தா? புட்பால் மேட்ச் விளையாடும் கால அளவு (match time duration) எவ்வளவு?
இக்கேள்விகளுக்கு உங்கள் பிள்ளைக்கு விடை தெரியவில்லை என்றால் உடனே உங்கள் பிள்ளையை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேறு பள்ளிக்கு மாற்றுங்கள். (ஒன் டே , டெஸ்ட், T20 கிரிக்கெட்டிலுள்ள பல விதிகள் தெரிந்திருக்கிறதே).
உங்களுக்கே தெரியவில்லை என்றால், இத்தனை வருட ஒலிம்பிக்கில் மொத்த பதக்க எண்ணிக்கை 20ஐ தாண்டாததற்கு நீங்களும் பொருப்பாளிதான். தாராளமாக வெட்கப்படலாம். (ஒட்டுமொத்த ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் 2008 வரை, கட்டுரை முடிவில்)
When India's 75 member "strong" olympic team returned home from the
Olympic Games 2004 held in Athens, Greece with just one silver medal.
Olympic Games 2004 held in Athens, Greece with just one silver medal.
விளையாட நேரம் ஒதுக்காமல் காலையில், மாலையில் டியூஷன் அனுப்புவது ஏன்?
பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பது ஏன்?
அப்படியே பள்ளியின்/கல்லூரியின் பெருமைக்காக வைத்திருக்கும் விளையாட்டு அணியின் மாணவர்களுக்கு on duty, attendance கொடுக்க அலைக்கழிப்பது ஏன்?
ஆசிரியர்களே, விளையாட்டு வீரனாக இருப்பவனுக்குத் தான் தெரியும் அவன்/ள் சமூகத்தால் ஏற்படும் மன உளைச்சல்கள். விளையாட்டு வீரனுக்கு வெற்றி தோல்வி சமம், அணி வீரர்களுடன் ஒத்துழைப்பு, மன உறுதி இருப்பதால்தான் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. (கிரிக்கெட்டில் தோற்றதால் டிவி பார்த்துக் கொண்டிருந்தவர் தற்கொலை என்பது தான் செய்தி. வீரர் தற்கொலை என்றெல்லாம் எங்கும் வரலாறு இல்லை). வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் இரு பக்கங்கள் என்பது விளையாட்டு வீரனுக்கு உள்ள மன உறுதி, உடலும் உறுதிதான். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு விளையாட்டு அவசியம். விளையாட்டிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. விளையாட்டில் ஈடுபடுவதால் உடலும் மூளையும் சுறுசுறுப்படைகிறது, உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, அணியில் ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற வாழ்க்கையில் தேவையான செயல்கள் மேம்படுகிறது.
ஒரு பெண்ணை, நீ பெண்ணல்ல, ஆணுமல்ல என்று பகிரங்கமாகச் சொன்னால் அந்த பெண்ணின் மனம் உள்ளாகும் நிலை என்ன? இந்த நாடே, சாந்தி என்ற தமிழ்நாட்டு வீராங்கனையை பாலின சோதனை என்று அவமானப் படுத்தியது. மிக வருத்தம், தாங்க முடியாத சோகம். திருமணத்திற்கு முன் அந்த பாலின சோதனையை செய்து கொள்ள நீங்கள் தயாரா ? முடிவு சாந்திக்கு ஏற்பட்டது போல் தான் இருக்கும். தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையம் என்ன செய்தது? ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரரைக் கூட அனுப்ப முடியாத ஆணையம்.
கிரிக்கெட் இருக்கிறதே என்று வாதம் செய்வோருக்கு... நம் நாட்டின் மக்கள் தொகை 110 கோடி. நாட்டில் எத்தனை சர்வதேச கிரிக்கெட் அணிகள் உள்ளன? IPL ஒரு வீரர்கள் ஏலமிடப்படும் விளம்பரதாரர் நிகழ்ச்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற தகுதியும் திறமையும் இருந்தால் மட்டும் போதுமா? பண பலமும் அரசியல் செல்வாக்கும் தானே அணி வீரர்களை தேர்வு செய்கிறது.
நாயைக் கூட வெறி பிடிக்காமல் இருக்க வாக்கிங் கூட்டிச் செல்வோர், குழந்தைகளை அடைத்து வைத்து படிக்க வைக்கிறார்கள். பத்தாதென்று ராசிபுரம் நாமக்கல் பக்கங்களில் முழுநேரப் (24/7) பள்ளிகளிலும் இந்தக் கொடூரம் நிகழ்கிறது. மன அழுத்தமே ஏற்படாதா மாணவர்களுக்கு?
எப்போதும் வீடியோ கேம் விளையாடுகிறான்/ள், கார்டூன் சேனல் பார்க்கிறான்/ள் என்று அங்கலாய்ப்பவர்கள், பிள்ளையை எந்த விளையாட்டில் விருப்பம் என்று கேட்டிருக்கிறீர்களா? பள்ளியில் ஏன் விளையாடுவதில்லை என்று கேட்டிருக்கிறீர்களா? "இந்த தடவை ரேங்க்/மார்க் குறைவு எங்கேயாவது டியூசன் சேத்துவிடட்டா?" என்று படிப்புக்கு மட்டும் தனிப்பயிற்சி அளிக்கத் தயாராய் இருக்கும் தாய் தந்தையரே, விளையாட்டுக்கு தனிப்பயிற்சி பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? அப்படி அளித்தால் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக, வீட்டுக்கு மட்டுமில்லை நாட்டுக்கே பெருமை சேர்க்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை. அது போக கூடுதல் நன்மைகளாக அரசாங்க வேலைவாய்ப்பிலும், கல்லூரி சேர்க்கையிலும் தனி கோட்டா விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது. ஒரு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கும் நீங்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் தகுதியைப் பார்க்கும் நீங்கள் ஆண் பெண்ணுக்கென தனித்தனி உடற்பயிற்சி/விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளார்களா என்று பார்த்தீர்களா? விளையாட்டு வகுப்பு முறையாக தவறாமல் நடத்தப்படுகிறதா என்று விசாரித்தீர்களா? போதுமான அளவில் விளையாட்டு உபகரணங்களும் முதலுதவி பொருட்களுமிருக்கிறதா அப்பள்ளியில்?
விளையாட்டின் அடிப்படையே வெற்றியை நோக்கிய விடா முயற்சியும், முன்னேறிக்கொண்டே இருப்பதும் தான். வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்கள் அனைவர் வாழ்விலும் விளையாட்டின் பங்கு இருக்கிறது. "படிக்கிற வேலையைப் பாரு அப்புறம் விளையாடலாம்" என்று நீங்கள் போனால் போகிறது என்று அனுமதிப்பதால் எந்த ஒரு குழந்தையும் விளையாட்டு வீரர் ஆகிவிட முடியாது.
OVERALL MEDALS | GOLD | SILVER | BRONZE | TOTAL | ||
1 | United States of America | 1018 | 824 | 710 | 2552 | |
2 | USSR | 473 | 376 | 355 | 1204 | |
3 | Germany | 232 | 235 | 251 | 718 | |
4 | Italy | 227 | 189 | 211 | 627 | |
5 | Great Britain | 217 | 258 | 262 | 737 | |
6 | France | 217 | 239 | 273 | 729 | |
7 | Democratic Republic of Germany | 192 | 165 | 162 | 519 | |
8 | Sweden | 190 | 192 | 222 | 604 | |
9 | China | 172 | 135 | 122 | 429 | |
10 | Norway | 161 | 154 | 133 | 448 | |
11 | Hungary | 159 | 143 | 163 | 465 | |
12 | Russia | 145 | 130 | 138 | 413 | |
13 | Finland | 142 | 142 | 171 | 455 | |
14 | Australia | 136 | 138 | 167 | 441 | |
15 | Japan | 132 | 124 | 141 | 397 | |
16 | Canada | 110 | 139 | 156 | 405 | |
17 | The Netherlands | 100 | 110 | 121 | 331 | |
18 | South Korea | 91 | 88 | 81 | 260 | |
19 | Switzerland | 89 | 107 | 111 | 307 | |
20 | Romania | 86 | 89 | 117 | 292 | |
21 | Austria | 73 | 103 | 111 | 287 | |
22 | Federal Republic of Germany | 69 | 82 | 94 | 245 | |
23 | Cuba | 67 | 64 | 63 | 194 | |
24 | Poland | 64 | 86 | 125 | 275 | |
25 | Unified Team | 54 | 44 | 37 | 135 | |
26 | Bulgaria | 52 | 86 | 80 | 218 | |
27 | Czechoslovakia | 51 | 57 | 60 | 168 | |
28 | Denmark | 41 | 64 | 66 | 171 | |
29 | Belgium | 38 | 52 | 54 | 144 | |
30 | Turkey | 37 | 23 | 22 | 82 | |
31 | United Team of Germany | 36 | 60 | 41 | 137 | |
32 | New Zealand | 36 | 16 | 35 | 87 | |
33 | Spain | 35 | 49 | 31 | 115 | |
34 | Greece | 30 | 42 | 36 | 108 | |
35 | Ukraine | 29 | 23 | 49 | 101 | |
36 | Yugoslavia | 28 | 34 | 32 | 94 | |
37 | Kenya | 22 | 29 | 24 | 75 | |
38 | Brazil | 20 | 25 | 47 | 92 | |
39 | South Africa | 20 | 24 | 26 | 70 | |
40 | Ethiopia | 18 | 6 | 14 | 38 | |
41 | Argentina | 17 | 23 | 26 | 66 | |
42 | Czech Republic | 15 | 17 | 17 | 49 | |
43 | Jamaica | 13 | 23 | 17 | 53 | |
44 | Estonia | 13 | 10 | 15 | 38 | |
45 | Mexico | 12 | 18 | 25 | 55 | |
46 | Belarus | 11 | 24 | 40 | 75 | |
47 | Islamic Republic of Iran | 11 | 15 | 22 | 48 | |
48 | Kazakhstan | 10 | 19 | 16 | 45 | |
49 | North Korea | 10 | 13 | 20 | 43 | |
50 | India | 9 | 4 | 7 | 20 | |
51 | Slovakia | 8 | 10 | 6 | 24 | |
52 | Ireland | 8 | 7 | 8 | 23 | |
53 | Mixed team | 8 | 5 | 4 | 17 | |
54 | Croatia | 7 | 11 | 9 | 27 | |
55 | Egypt | 7 | 7 | 10 | 24 | |
56 | Thailand | 7 | 4 | 10 | 21 | |
57 | Indonesia | 6 | 9 | 10 | 25 | |
58 | Morocco | 6 | 5 | 10 | 21 | |
59 | Uzbekistan | 5 | 5 | 8 | 18 | |
60 | Georgia | 5 | 2 | 11 | 18 | |
61 | Portugal | 4 | 7 | 11 | 22 | |
62 | Lithuania | 4 | 4 | 8 | 16 | |
63 | Azerbaijan | 4 | 3 | 9 | 16 | |
64 | Algeria | 4 | 2 | 8 | 14 | |
65 | Slovenia | 3 | 7 | 12 | 22 | |
66 | Australasia | 3 | 4 | 5 | 12 | |
67 | Zimbabwe | 3 | 4 | 1 | 8 | |
68 | Bahamas | 3 | 3 | 4 | 10 | |
68 | Pakistan | 3 | 3 | 4 | 10 | |
70 | Cameroon | 3 | 1 | 1 | 5 | |
71 | Latvia | 2 | 13 | 5 | 21 | |
72 | Nigeria | 2 | 9 | 12 | 23 | |
73 | Mongolia | 2 | 7 | 10 | 19 | |
74 | Chile | 2 | 7 | 4 | 13 | |
75 | Chinese Taipei (Taiwan) | 2 | 6 | 11 | 19 | |
76 | Luxembourg | 2 | 3 | 0 | 5 | |
77 | Uruguay | 2 | 2 | 6 | 10 | |
78 | Liechtenstein | 2 | 2 | 5 | 9 | |
79 | Tunisia | 2 | 2 | 3 | 7 | |
80 | Dominican Republic | 2 | 1 | 1 | 4 | |
81 | Trinidad and Tobago | 1 | 5 | 8 | 14 | |
82 | Colombia | 1 | 3 | 7 | 11 | |
83 | Uganda | 1 | 3 | 2 | 6 | |
84 | Peru | 1 | 3 | 0 | 4 | |
85 | Venezuela | 1 | 2 | 8 | 11 | |
86 | Armenia | 1 | 1 | 7 | 9 | |
87 | Israel | 1 | 1 | 5 | 7 | |
88 | Costa Rica | 1 | 1 | 2 | 4 | |
89 | Syria | 1 | 1 | 1 | 3 | |
90 | Ecuador | 1 | 1 | 0 | 2 | |
90 | Hong Kong | 1 | 1 | 0 | 2 | |
92 | Panama | 1 | 0 | 2 | 3 | |
93 | Mozambique | 1 | 0 | 1 | 2 | |
93 | Suriname | 1 | 0 | 1 | 2 | |
95 | Burundi | 1 | 0 | 0 | 1 | |
95 | Bahrain | 1 | 0 | 0 | 1 | |
95 | United Arab Emirates | 1 | 0 | 0 | 1 | |
98 | Namibia | 0 | 4 | 0 | 4 | |
99 | Philippines | 0 | 2 | 7 | 9 | |
100 | Moldova | 0 | 2 | 3 | 5 | |
101 | Iceland | 0 | 2 | 2 | 4 | |
101 | Malaysia | 0 | 2 | 2 | 4 | |
101 | Lebanon | 0 | 2 | 2 | 4 | |
104 | Serbia and Montenegro | 0 | 2 | 0 | 2 | |
104 | Singapore | 0 | 2 | 0 | 2 | |
104 | Tanzania | 0 | 2 | 0 | 2 | |
104 | Vietnam | 0 | 2 | 0 | 2 | |
108 | Puerto Rico | 0 | 1 | 5 | 6 | |
109 | Bohemia | 0 | 1 | 3 | 4 | |
109 | Ghana | 0 | 1 | 3 | 4 | |
111 | Individual Participant | 0 | 1 | 2 | 3 | |
111 | Kyrgyzstan | 0 | 1 | 2 | 3 | |
111 | Serbia | 0 | 1 | 2 | 3 | |
114 | Haiti | 0 | 1 | 1 | 2 | |
114 | Saudi Arabia | 0 | 1 | 1 | 2 | |
114 | Sri Lanka | 0 | 1 | 1 | 2 | |
114 | Tajikistan | 0 | 1 | 1 | 2 | |
114 | Zambia | 0 | 1 | 1 | 2 | |
119 | Netherlands Antilles | 0 | 1 | 0 | 1 | |
119 | Cote d'Ivoire | 0 | 1 | 0 | 1 | |
119 | Virgin Islands | 0 | 1 | 0 | 1 | |
119 | Paraguay | 0 | 1 | 0 | 1 | |
119 | Senegal | 0 | 1 | 0 | 1 | |
119 | Sudan | 0 | 1 | 0 | 1 | |
119 | Tonga | 0 | 1 | 0 | 1 | |
126 | West Indies Federation | 0 | 0 | 2 | 2 | |
126 | Qatar | 0 | 0 | 2 | 2 | |
128 | Afghanistan | 0 | 0 | 1 | 1 | |
128 | Barbados | 0 | 0 | 1 | 1 | |
128 | Bermuda | 0 | 0 | 1 | 1 | |
128 | Djibouti | 0 | 0 | 1 | 1 | |
128 | Eritrea | 0 | 0 | 1 | 1 | |
128 | Guyana | 0 | 0 | 1 | 1 | |
128 | Iraq | 0 | 0 | 1 | 1 | |
128 | Kuwait | 0 | 0 | 1 | 1 | |
128 | Macedonia | 0 | 0 | 1 | 1 | |
128 | Niger | 0 | 0 | 1 | 1 | |
128 | Togo | 0 | 0 | 1 | 1 |
கல்வியில் ப்ரிககேஜி,எல்கேஜி,யுகேஜி இவைகளை நீக்கவேண்டும்.பிள்ளைகள் அனைத்திலுமுழுவளர்ச்சி பெற்றபின் பள்ளியில் சேர்க்கவேண்டும்.படிக்குமபோது ஒவொரு பிள்ளையையும் ஏதேனும் ஒரு விளையாட்டில் சிறக்கச் செய்யவேண்டும்.இதுகட்டாயமாக்கவேண்டும். நாணயத்தின் இருபக்கம்போல கல்வி,ஒழுக்கம்.கல்வி - இருபக்கம் அறிவு,விளையாட்டு.விஸ்வநாத்ஆனந் செஸ்சில் தொடர்ந்து வெற்றி. செஸ்ஸை போதித்தல்,அசிறியர்களுக்கு பயிற்சி.இதுபோல்மற்ற விளையாட்டுகளுக்கும்முயற்சிகள்மேற்கொள்ளலாமே.பாரதிகூட காலைஎழுந்தவுடன் படி,மாலைமுழுதும் விளையாட்டு என்றுதான்சொன்னார்.உங்களைப்போல காலைஎழுந்தவுடன் ட்யூஷன் மாலைமுழுதும் ட்யூஷன்செல்லச்சொல்லவில்லை.விளையாட்டுதரும் நன்மை பலப்பல.சிந்திப்பீர்.செயல்படுவீர். அரசுக்கும் சொல்வீர்.
ReplyDeleteDear Vaideesh... The trend is changing. If u see the growth curve, its upward and not downward. All other countries too will try to keep up their level. Don't see the medal counts alone. Many players have cleared the qualifying rounds. We can't change it upside down over night. Neither money alone can change it. Of course money is one thing. But the skill is also essential (only Skilled coaches can bring up an Olympian). And then comes infrastructure. And then the miscellaneous facilities required for a sports person. Its because of our country's economic situation our progress in sports is slow. A medal in Olympics won't going to serve you if you don't have ur basics needs. Government has to concentrate on fullfilling the basic needs of million. Once needs get satisfied satisfactorily then automatically the new generation will have all money, luxury etc and can concentrate on pride. Currently based on the economic situation of our country, the four medals what we have got in olympics is not so bad.
ReplyDeleteமிகவும் வேட்கபடுகிறேன்..............
ReplyDelete