Pages

Wednesday, September 26, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்னும் வேண்டும் இதுபோல் தமிழக நகரங்களிலும்

நண்பர் பிரேம்குமார் அவர்களின் அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கவிதை. வலைப்பூவில் பதிப்பிக்க கேட்டேன். உடனே எழுதித் தந்த புலமைக்கு நன்றிகள். இதுபோல இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்.
வசரமான சென்னையில்  ஓர்
ஆரவாரமற்ற கண்ணாடி மாளிகை.

அரிய மரங்களை அழித்து விட்டு
யாரையோ பலி தீர்க்க
அவசர கதியில் வளர்ந்திருக்கும் ஓர்
அழகிய கட்டிடம்.

ஓயா நகருக்குள் ஓயாமல் இயங்கும்
ஓர் கட்டிடம்.

வெறும் மண்ணின் மூலக்கூறுகளால்
மட்டும் வானளாவி மோதி நிற்கும்
ஓர் அழகிய கட்டிடம்.

இங்குள்
எட்டடுக்கு மாளிகையின் அலங்கார
அலமாரிக்குள் மர மம்மிக்கள்.
ஆம்
வெவ்வேறு  (அரச)மரங்களின் தியாகத்தால்
தன்னை
வெட்டி அறுத்து நொருக்கி - அமுக்கி  பிழிந்து
பின் தன் மேல் பதிக்க விடவிட்டு
கொடுத்த எழுத்துகளால் கோர்க்கப்பட்டு
நூல்களாக்கப்பட்ட மம்மிக்களின் குடோன்.
Inline image 1
மனசாட்சி மாறிப்போன
மனித விலங்கை நெறிபடுத்த இங்கு
இத்தொகையை விட
இந்நூல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

அணுகுண்டே தலை மேல் விழுந்தாலும்
அசையாமல் அசராமல் நம்முள்ளே
உறையும் ஆன்மாவை தட்டி எழுப்பி
தீட்சை தர காத்திருக்கும் குருக்களின்
ஹைடெக் குடிசை.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, எவருக்கும்
அஞ்சா தோள்கள்,
வெறும் சோற்றுக்காக யாசிப்பதை
இழுக்கென்றிருந்த நம்மை
சான் வயிற்றுக்காக மட்டும் வாழ சொல்லித்தரும்
வார்த்தை வித்தைகள் நிரம்பி
வழியும் பெருஅரங்கம்.

கூத்தாடிகளின் கூத்துகளால்
சீரழிந்து போயிருக்கும் நம் நாட்டின்
சீரழிவை ரசித்து ருசிக்கும்
சுரனைகெட்ட பல கூட்ட மக்களுக்கென்று
எழுதி குவித்த குப்பைகளை
கொட்டி வைக்க ஒரு அரங்கு.

இந்நாட்டில்
பொரிக்கிகளுக்கும், விபசாரிகளுக்கும், சோம்பேறிகளுக்கும்
வரிந்து கட்டி வேலை செய்ய
உயர் பதவிக்கு வர துடிக்கும் நம் நல்
சொற்ப உழைப்பாளிகளின் சிறு அறிவுக்கு
வழி காட்டும் பெரு அரங்கம்.

கடவுளின் கவனக்குறைவால்
மற்றும் கருணையால் இங்குள்ள காலிகளை பார்க்காமல்
(பார்வை மட்டும் இழந்து)
வாழும் நல்மக்கள் நல் அறிவு பெற
ஓர் சிறு அரங்கு

ஒளி-ஒலியால் அவ்வப்போது
இச்சமுதாயத்தை சீரழிக்கச்செய்ய
பெரு உள்-வெளி அரங்கம்.

" நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா"
"ஓடி விளையாடு பாப்பா "- பாரதி

பாப்பா-வை அறிவில்லாமல் பிஞ்சிலேயே
முடமாக்கி சிறை நிரப்ப விஸ்தாரமான கூடம்.


இவை அத்துணையையும் எதற்காகவோ பார்க்க
சாரை சாரையாய் மக்கள் கூட்டம்.......
காந்தியார் மண்டபச் சாலை
கோட்டூர் அண்ணா நூல் நிலையத்தை நோக்கி.
ஆனால் இங்கோ
அறிஞருக்கு பேர் எடுத்த அண்ணா
இங்கு வாசலில் நம்மையும்
அரங்கையும் பாரா முகமாய்
பார்த்து அமர்ந்துள்ளார்.

மனிதர்களே அழகான இந்நிலையத்திற்குள்
வாருங்கள்.
சான்றோர்களாக செல்லுங்கள்.

தன் வயிருக்கு சோறு போட துடிக்கும்
அதே ஆர்வம் கொஞ்சம் இச்சமுதாயத்தின்
பக்கம் திரும்பட்டும்.
நாடு நன்மை பயப்பன செய்ய உள்ளே
வாருங்கள்.

நீங்கள் நிற்கும் இடம் சிறு உயிர்களின்
தியாகத்தால் இப்படியானது.
நம்முடனே வாழும் அடி தட்டு மக்களுக்கு
கிட்டாத வாய்ப்பு உங்களுக்கு கிட்டியது.
அன்னம் போல் நூல்களை பருகுங்கள்.
இங்கிருந்து செல்லும் போது
நூல்களின் கருத்துகளை சுமந்து கொண்டு
மட்டும் செல்லாதீர்கள்.
கழுதை நம்மை விட அதிகமாக சுமக்க
அறிந்தது.

இனி இங்கு தேவை புரட்சி.
புரட்சி மட்டுமே!!!!
வாழ்த்துக்கள்!!!
மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கும்
அண்ணா நூல் நிலையம் உங்களை
வரவேற்கிறது!!

இப்படிக்கு ,
22-09-2012, 10:30 AM

அண்ணா நூலகம் பற்றிய பதிவர்களின் இணைப்புகள்
1.   http://annacentenarylibrary.blogspot.in/ - நூலகத்தின் வலைப்பூ



No comments:

Post a Comment