வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில் நிலத்தை வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில் முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...