Pages

Tuesday, November 20, 2012

கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

செய்யப் போகும் தொழிலை/வேலையை தீர்மானிக்கும் நமது கல்லூரி படிப்பு.

பள்ளியிலிருந்து கல்லூரிக்குச்  செல்லும் மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும். கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.


இன்னும் +2 தேர்வுகளே ஆரம்பிக்க வில்லை என்று எண்ணாதீர்கள். ஆனால் IIT, NIT, NIFT மற்றும் பல கல்வி நிறுவனங்களில் 2015 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவித்துவிட்டார்கள்.  online இல் விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  +2 தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருந்தால் பல வாய்ப்புகளுக்கான கடைசி தேதி முடிந்திருக்கும்.


கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் நமக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான படிப்புகளை கீழே உள்ள படத்தில் காணலாம். இதில் இல்லாத படிப்புகளும் அதன் உட்பிரிவுகளும்  உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த/பழகியவர்களின் வேலையையே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். உதாரணமாக நாம் பார்க்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், என்ஜினியர்கள், ஓட்டுனர்கள், நர்சுகள், அரசு அலுவலர்கள்....


இன்னும் எவ்வளவோ துறைகளும், வேலைகளும் உள்ளன.


ஐநா சபையில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தூதரகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், நாட்டிற்கே நிதி மேலாண்மை செய்யும் நிதி அமைச்சகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தொல்லியல் துறையில் உள்ளவர் என்ன படித்திருப்பார், வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் என்ன படித்திருப்பார், தடயவியல் துறைக்கு என்ன படிக்க வேண்டும்? வானொலி/தொலைகாட்சி நிலையங்களில் பணியாற்ற என்ன படித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் சட்டம் படித்திருக்க வேண்டுமா? மருத்துவமனையில் பணிசெய்பவர்கள் அனைவரும் மருத்துவம் படித்திருக்க வேண்டுமா?இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பாமல் குருட்டுத் தனமாக அனைவரும் விரும்பும் ஒரு படிப்பை சுயவிருப்பம் இல்லாமல், படித்து முடித்தபின் என்ன வாய்ப்புகள், விளைவுகள் என்று எண்ணாமல் முடிவு எடுக்கக் கூடாது.




இன்னும் சில விஷயங்களையும் சிந்தனையில் கொள்ள வேண்டும். அவை, குடும்ப சூழ்நிலை பொறுத்து எத்தனை ஆண்டுகள் படிக்க முடியும், அதாவது இளநிலைப் படிப்பிற்கு 3 அல்லது 4 ஆண்டுகள். மேல் படிப்பிற்கு கூடுதலாக 2 ஆண்டுகள். இவையில்லாமல் 5 வருட படிப்புகளும், ஒரு வருட இரண்டு வருட படிப்புகளும் உள்ளன. வேலைக்கு எங்கே செல்ல வேண்டும். ஒரு சில பாடப் பிரிவுகள் படித்தால் வெளிமாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும்  செல்ல வேண்டியதிருக்கும். உதாரணமாக mining engg./ marine engg. படித்தவர்கள் சுரங்கங்கள் இருக்கும் இடத்திலும், கப்பல், கடல் இருக்கும் இடங்களிலேயே வேலையை பெறுவார்கள். குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்போர் அந்த மாவட்டத்தின் தொழில்கள் சார்ந்து படிப்பது அந்த மாவட்டத்திலேயே வேலை செய்ய சரியாக  இருக்கும்.





அனைவரும் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்தால், படித்து முடித்து வேலை தேடும்போது போட்டி மிக அதிகமிருக்கும், அதை எதிர்கொள்ள படிக்கும்போது துறை சார்ந்தஅறிவையும், இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

பொறுப்பும்,அதிகாரமும்,மிகுந்த மரியாதையும்,சமூக மேம்பாட்டுக்கு உறுதுணையாயிருக்கும் பணிகள் செய்ய IAS, IPS,... போன்று இன்னும் பல பணிகள் உள்ளன அவை:
Indian Administrative Service
Indian Police Service
Indian Foreign Service
Indian Forest Service


Group A Services

Indian P & T Accounts & Finance Service
Indian Audit and Accounts Service
Indian Revenue Service (Customs and Central Excise)
Indian Defence Accounts Service
Indian Revenue Service (I.T.)
Indian Ordnance Factories Service (Assistant Works Manager, Administration)
Indian Postal Service
Indian Civil Accounts Service
Indian Railway Traffic Service


Indian Railway Accounts Service
Indian Railway Personnel Service
Post of Assistant Security Commissioner in Railway Protection Force
Indian Defence Estates Service
Indian Information Service (Junior Grade)
Indian Trade Service, Group 'A' (Gr. III)
Indian Corporate Law Service


Group - B Services

Armed Forces Headquarters Civil Service (Section Officer's Grade)
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service
Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service
Pondicherry Civil Service
Pondicherry Police Service



இந்தப் பணிகளுக்கு தயாராக ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகலாம். இளநிலை படிப்பு தேர்ந்தெடுக்கும் முன்னரே IAS இந்திய ஆட்சிப் பணிகளில் ஆர்வம் இருந்தால் அதற்குக் தகுந்தது போல இளநிலைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் கல்லூரிக் காலத்திலேயே தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே இத்தேர்வை வெற்றிகொண்டு இந்திய ஆட்சிப் பணியில் அமரலாம். எங்கோ ஒரு MNCல் வேலை செய்வதைக் காட்டிலும் மாவட்டத்தின் மிக உயர்ந்த பணி மதிப்புக்குரியதுதானே.

ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே அதிகமான மாணவர்கள் படிக்கும் போது அவர்கள் சார்ந்த வேலை தேர்வு செய்வதும் வேலை கிடைப்பதும் மிக அரிதாக உள்ளது, இதனால் வேலைதேடி பிற மாநிலங்களை நம்பும் நிலை உள்ளது. கல்வியும் விவசாயம் போன்றதே,.  குறிபிட்ட படிப்பு (Engineering) மட்டுமே மிக அதிகமான மாணவர்கள் சேர்வது என்பது மண்ணுக்கு நல்லதல்ல மற்றும் நல்ல விளைச்சலை தராது....

படிப்பு என்பது வேலை கிடைபதற்கு ஒரு தகுதி. எத்தனையோ விதமான படிப்பு வகைகள் இருந்தாலும் மக்களிடையே மிக பிரசத்தி பெற்ற உத்தியோகம் என்றால் அது அரசாங்க உத்தியோகம் மட்டுமே அதற்கு பின் வங்கி என படித்த இளைஞரும் அவருடைய பெற்றோர்ரும் விரும்புவது white collar வேலை மட்டுமே. இன்றைய சமுதாயம் வேலையை குறி வைத்து படிகின்றது என்றால் அது கண்டிப்பாக இல்லை. அரசாங்க இன்னும் பிற white collar வேலை அனைத்தும் போட்டித் தேர்வுகள்  மூலமாகவே  தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இந்த வேலைகளுக்கு குறிப்பிட பட்ட படிப்பு தான்  அவசியம் என்று இல்லை. எதாவது ஒரு பட்ட படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைத்திருக்க வேண்டும். அவ்வளவு  தான்...  பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை எந்த பாடம் படிக்க வைக்கலாம் என்று விவாதம் செய்வதை விட்டு எந்த வேலை நம் குடும்பத்துக்கு பணமும் புகழும் தரும் என்பதை அறிந்து குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்தால் வேலை வைப்பின்மையை சிறிதளவு குறைக்கலாம் .. எந்த பெற்றோரும் தன் மகன்/மகள் பொறியியல் வல்லுநர் என்பதை விட அவன் எங்க ஊரு வி எ ஒ என்பதை பெருமையாக நினைப்பார்கள்.. படிப்பில் பெரிது சிறியது கஷ்டமானது என்று ஏதும் இல்லை ஒருவன்னுக்கு ராக்கெட் சயின்ஸ் பிடிக்கும் என்றால் அது அவனுக்கு மிகவும் எளிதான விஷயம் அதே ராக்கெட் சயின்ஸ் படித்தவனால் சர்ட் டது  அக்கௌன்ட் செய்யும் வேலையை செய்ய முடியாது . படிப்பை பற்றி யோசிக்காமல் பார்க்க போகும் வேலை மட்டும் முடிவு செய்யுங்கள்.



நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களான 16 IIT (Indian Institute of Technology) மற்றும் 30 NIT(National Institute of Technology) களிலும் 2014-15  சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 2013 லேயே கொடுக்க ஆரம்பித்து  ஏப்ரலில்  IITJEE மற்றும் IEEE போன்ற நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுகின்றன. அதைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்த 46 கல்வி நிறுவனங்களில் சேர முடியாது. இதைப் போன்ற தகவல்களை மகன்/மகள் 11ம் வகுப்பு படிக்கும் போதே தெரிந்து கொள்ளவேண்டும். தகுந்த நேரத்தில் விண்ணப்பிக்கவும் வேண்டும். இன்னும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும், தன்னாட்சி கல்லூரிகளும் (autonomous college) +2 result வந்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் விண்ணப்பம் அளித்து சேர்க்கைகள்  நடைபெற்று முடிந்து விடும். ஆகவே மிகவும் விழிப்புடன் இருந்து இத்தகவல்களைப் பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர்ப்பது உண்மையிலேயே பெற்றோர்களின் பொறுப்பு. ஆசிரியர்களின் உதவியும் தேவை, பல பெற்றோர்கள் சரியான கல்வியறிவு இல்லாதவர்கள். கல்வியறிவு பெற்ற பெற்றோர்களுக்கும் இதுபோன்ற கல்வியின் பரந்துபட்ட வாய்ப்புகள் பற்றி தெரிய வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகக் கருதுகிறேன். IIT, NIT கல்வி நிறுவனங்களில் படிக்க IITJEE என்ற நுழைவுத் தேர்வு கட்டாயம் 2013 சேர்க்கைக்கு onlineல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 16, 2013. மேலும் தகவல்களுக்கு http://jeeadv.iitm.ac.in/#


பெரும்பான்மையானவர்களால் அதிகம் அறியப்படாத Chartered Accountant (CA) படிப்பு பற்றி http://tntjcovai.com என்ற வலைத்தளத்தில் இருந்து


மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் CPT( Common Proficiency Test) தேர்வுக்கு தகுதிபெறுவார்கள். ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வில், நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த தேர்வில், அக்கவுண்டிங் அடிப்படைகள், வணிகச் சட்டங்கள், பொது பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான திறனாய்வு உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

இதன்பிறகு, 9 மாதங்கள் கழித்து, Integrated Professional Competence Course(IPCC) என்ற தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது 2 பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் 4 தாள்களும், இரண்டாவது பிரிவில் 3 தாள்களும் உள்ளன. இந்த இரண்டு பிரிவு தேர்வையும் முடித்தப் பிறகு, ஒருவர் இறுதி நிலைக்கு செல்லலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான்,

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த சி.ஏ., படித்தவர்களிடம் அதிகமாக உள்ளது. சி.ஏ., படித்தவர்களே இந்திய நிறுவனங்களுக்கான சிறந்த தலைவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உடனடி முடிவுகளை சி.ஏ., படித்தவர்களே எடுக்க முடியும். CA படிப்பிற்கான தகவல்களுக்கு http://students.icwai.org/studies/students-admission.asp

CA படிப்பில் சேர்வதற்கு தேர்வுகள் வருடத்தில் இருமுறை நடக்கிறது (ஜூன் 11-18, டிசம்பர் 10-17). ஜூன் தேர்வுக்கு டிசம்பர் 5ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் தேர்வுக்கு ஜூன் 5ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.


மருத்துவமும் ஆதனைச் சார்ந்த படிப்புகள் அதிகமாக உள்ளன. அவற்றுள் பார்வை பிரச்சனை இந்தியாவில் உள்ள அனைத்து வயதினருக்கும் பொதுவாக காணப்படுகிறது.  கண் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய படிப்பு B.S optometry (பி எஸ் அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல்) ஆகும். நான்கு ஆண்டு தொழில்முறை படிப்பில் முதல் மூன்று ஆண்டு கல்வி பயிற்சி மற்றும் நான்காம் ஆண்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல் நாட்டின் முதல் பத்து வருமானம்-ஈட்டும் தொழில்களுள் ஒன்றாகும். மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் அறிவியலில் ( இயற்பியல், கணிதம், உயரியல்) 50 சதவிதம் பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். தேர்வு முறை  வெவ்வேறு நிறுவனங்களுக்கு வேறுபடும். சிலர் நுழைவு தேர்வு மூலமும் சிலர் தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் இளநிலை பட்டம் பெற்ற பின் மாஸ்டர் மற்றும் M.Phil போன்ற மேல்பப்டிபும் தொடரலாம். ஒரு optometrist தனது சொந்த கண் மருத்துவமனை, ஒளியியல் கடை, லென்ஸ் உற்பத்தி அலகு, முதலியன தொடங்கமுடியும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள  கண்  மருத்துவமனைகளில் வேலை பெற முடியும். அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம்.

இந்தியாவில் optometrist (அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்தல்) படிப்புகள் வழங்கும் கல்லூரிகளின் பட்டியல்.
1.        All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi.


2.       Elite School of Optometry (ESO), Sankara Nethralaya, (collaboration with Birla Institute of  Technology and Science, (BITS) Pilani, India), Chennai.

3.        Bharati Vidyapeeth University School of Optometry, Pune.


4.     Sri Prakash Institute of Optometry (Dr.Agarwal's Eye Hospital) (Affiliated to Alagappa University), Chennai.


5.        Vidyasagar College of Optometry & Vision Science, Kolkata.


6.        Aditya Jyot Institute of Optometry, Mumbai.


7.        Bausch & Lomb School of Optometry, Hyderabad.


8.        College of Optometry and Ophthalmic Sciences, Nasik.


9.        Lions Arvind Institute of Community Ophthalmology, Aravind Eye Hospital, Madurai.


10.     Optometry Research & Training Institute (ORTI), Banda (Uttar Pradesh).


11.     School of Optometry, Gandhi Eye Hospital, Aligarh (Uttar Pradesh).


12.     MEH School of Optometry, Muncipal Eye Hospital, Mumbai.


மேலும் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரிகளை விட பல்கலைக்கழகங்களில் சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இருப்பார்கள், உதாரணமாக B. Tech Biotechnology, Bioinformatics படிப்பை புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கல்லூரியில் படிப்பதை விட Tamil Nadu Agricultural University இல் படிக்கலாம், இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.(http://www.tnau.ac.in/admission.html). 

B. Tech. Traditional Architecture மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் படிக்கலாம். B. Sc. Visual Communication Design சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள தமிழ்நாடு அரசு கவின்கலைக் கல்லூரியில் படிக்கலாம். http://artandculture.tn.gov.in/art-culture2.htm


இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை. யு.பி.எஸ்.சி. ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ்(SCRA) தேர்வை நடத்துகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (http://www.upsc.gov.in/exams/notifications/2014/scra/scra_eng.pdf2013 நவம்பர் 4, ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுபோல எண்ணற்ற படிப்புகள் உள்ளன, கல்லூரியில் சேருவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொண்டு தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். (பல கல்வி நிறுவனங்களில் தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விழிப்புடன் இருந்து விண்ணப்பிக்கும் தேதிகளை தவற விடாதீர்கள்.)


ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவ, மாணவியர் 18.12.2014 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். IITJEE நுழைவுத்தேர்வு தேதி 4, 10& 11.4.2015.  மேலும் விவரம் http://jeemain.nic.in/webinfo/PDF/Admission%20notice.pdf

NIFT நுழைவுத்தேர்வு தேதிகள் 09.02.2014 மற்றும் 23.02.2014 பற்றி அறிய - https://www.applyadmission.net/nift2014/default.htm

இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர National Eligibility cum Entrance Test NEET நுழைவுத்தேர்வு தேதி 04.05.2014 பற்றி அறிய  - http://cbseneet.nic.in/cbseneet/docs/Press_Release.pdf

IISER - Indian Institutes of Science Education and Research போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ளது. இங்கே 5 வருட BS-MS கல்வி உதவித்தொகையுடன் படிக்கலாம். மேலும் அறிய http://kalvimalar.dinamalar.com/news-details.asp?id=12426&cat=1

ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்கள் CUCET என்ற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். மேலும் அறிய http://cutn.ac.in/news_det.php?id=MzA4



மே 6, 2015 முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. https://www.annauniv.edu/tnea2015/
மே 6, 2015 முதல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். 


விருப்பமில்லாத படிப்பு, தொழில், வேலையில் ஈடுபட்டவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவுகளில் காணவும்.



4 comments:

  1. உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் இ மெயிலுக்கு(mankuthirai@gmail.com) என் தொடர்பு எண்ணை அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  3. can i get your contact number sir. mail it to srimuthucbe@gmail.com

    ReplyDelete
  4. Thank you for your visit to my blog, I sent my contact to your email.

    ReplyDelete