Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? அல்லது bank account இல் இருந்து எவ்வாறு பணம் திருடப்படுகிறது?
உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வங்கிகளில் சேமிக்கிறோம், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் எனப்படும் பிளாஸ்டிக் பணத்தை ATM களிலும், கடைகளிலும், online shopping எனப்படும் இண்டெர்நெட் கடைகளிலும், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்துகிறோம். கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. RBI யின் கணக்குப்படி 2007ல் 41,361 கோடி ரூபாய், 2008ல் 57,958 கோடி ரூபாய் கிரெடிட் கார்ட் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. ஒரு வருடத்தில் 41% பயன்பாடு உயர்ந்திருக்கிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை குறி வைத்து நடக்கும் குற்றங்களும்தான். இத்தகைய திருடர்களின் நோக்கம் பிறர் கணக்கிலிருக்கும் பணத்தை கார்டுகளின் மூலம் திருடுவது, வங்கிக் கணக்கிலிருந்து online ல் கொள்ளை அடிப்பது. சமகாலத் தமிழில் சொன்னால் 'அடுத்தவன் அக்கவுண்டில் ஆட்டைய போடுறது'. ம்ம்…. எப்படி நடக்குது? பொதுவாக தனிப்பட்ட நபரின் வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் கசிவதால் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது. எத்தனையோ வழிகளில் உங்கள் தகவல...