கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை
செய்யப் போகும் தொழிலை/வேலையை தீர்மானிக்கும் நமது கல்லூரி படிப்பு. பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும். கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக இக்கட்டுரையை எழுதுகிறேன். இன்னும் +2 தேர்வுகளே ஆரம்பிக்க வில்லை என்று எண்ணாதீர்கள். ஆனால் IIT, NIT, NIFT மற்றும் பல கல்வி நிறுவனங்களில் 2015 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவித்துவிட்டார்கள். online இல் விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். +2 தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருந்தால் பல வாய்ப்புகளுக்கான கடைசி தேதி முடிந்திருக்கும். கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் நமக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான படிப்புகளை கீழே உள்ள படத்தில் காணலாம். இதில் இல்லாத படிப்புகளும் அதன் உட்பிரிவுகளும் உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த/பழகியவர்களின் வேலையையே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். உதாரணமாக நாம் பார்க்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், என்ஜினியர்கள், ஓட்டுனர்...