Pages

Wednesday, January 25, 2012

எங்கே விவசாயி?


பருத்தி விவசாயிகள் தற்கொலை பல வருடங்களாக தொடர்வது இந்திய நாட்டின் அவமானம். இது மேலும் தொடராது இருக்க உழவர் திருநாள் கொண்டாடிய நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியா உணவு தானியங்களை நம் நாட்டு தேவை போக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் சில வருடங்களாக நம் நிலைமை அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை இறக்குமதி செய்துதான் நாட்டின் உணவுத் தேவையை சமாளிக்க முடிகிறது. விவசாய நிலங்களும் அதன் விளைச்சலும் குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியா பிற நாடுகளை நம்ப வேண்டிய இன்னும் சொல்லப் போனால் கையேந்த வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்படும். அப்படி ஆனால் பாதிக்கப் படுவது நாமும் தானே.

பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? விலை வீழ்ச்சி, பருத்தி உற்பத்தி வீழ்ச்சி, விதை, பூச்சி மருந்துகள் வாங்க கந்துவட்டி கடன்கள். விவசாயிகளுக்கும் பேராசை உள்ளது. அதிக லாபம் உள்ள பருத்தியை தொடர்ந்து அடுத்தடுத்த பருவங்களில் பயிர் செய்தால், தேவையான சத்துக்களைத் தர  மண்வளம் ஈடுகொடுக்காது. அதை ஈடு செய்ய உரங்களுக்கும், பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டும். ஒரே பயிர் தொடர்ந்து செய்வதால் அதைத் தாக்கும் பூச்சி இனங்களின் எண்ணிக்கையும், பூச்சிக்கொல்லிகளுக்கு மருந்துக்கெதிரான எதிர்ப்புசக்த்தியும் மிக அதிகமாகப் பெருகிவிடும். ஒவ்வொரு பருவத்திற்கும் நோய் தடுப்பு, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை அதிகரிக்கும் அதன் விலைகளுடன். இந்த மிக எளிய தத்துவம் விவசாயிகளுக்கு மிக நன்றாகத் தெரியும். பள்ளிக் கல்வி படித்த அனைவரும் பயிர் சுழற்சி, தாவர வளர்ச்சி, மண்வளம், செடிகள், கொடிகள், மரங்கள் என்று படித்திருப்போம்.

விவசாயிகள் வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வது எதனால்? நாம் அனைவரும் உணவு அருந்துகிறோம் என்றாலும் உணவு தர உழைக்கும் விவசாயியை, விவசாயத் தொழிலை மதிப்பதில்லை. இவை அனைத்தையும் விட விவசாயம் லாபகரமான் தொழிலாக இல்லை விவசாயிக்கு மட்டும். வியாபாரிகளும், இடைத் தரகர்களும், நகரங்களில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுகளும் தான் லாபத்தை அனுபவிப்பவர்கள். எந்த தொழிற்சாலையின் உற்பத்தி பொருளாவது வாங்குபவனால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறதா? உதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்வோம். பேனாவின் விலையை பிரித்தால், அதன் மூலப் பொருட்கள் விலை, மூடியின் விலை, மையின் விலை, பாக்கிங்கின் விலை, போக்குவரத்து செலவு, உற்பத்தியாளர் லாபம், விற்பனையாளர் லாபம் என்று இன்னும் பல வரிகளுடன் இருக்கும். அதையெல்லாம் கணக்கிட்டு தான் விலை நிர்ணஇக்கப் படுகிறது. ஆனால் இந்த நிலை விவசாயப் பொருட்களுக்கு உண்டா? வாங்குபவன் கேட்ட விலை தான். 

விவசாயக் குடும்ப மாணவர்கள் படிப்பதால் விவசாயம் செய்வதில்லை என்று ஒரு சாரார் சொல்லும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. யாராவது ஒரு தொழிலதிபரின் மகன்/மகள் படிப்பதால் அந்த குடும்பத் தொழிலில் ஈடுபடுவதில்லையா? லாபம் இருக்கும் பட்சத்தில் அந்த தொழிலிலேயே ஈடுபடுகின்றனர். அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்கு எண்ணற்ற பேர்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.

உலகத்தின் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம். எந்த ஒரு நாடும் ஒரு  குறிப்பிட்ட விவசாயப் பொருள் உற்பத்தியில் தன் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதற்கு மண்வளம் இடம் கொடுக்காது. தொடர்ந்து அதே பயிரை அதே நிலத்தில் பயிரிட்டால் மண்ணின் வளம் குன்றிவிடும். இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. உதாரணமாக சணல் பயிரை சொல்லலாம். சணல் பயிர் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திலும் பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும் எப்போதும் நிலைத்து இருக்கும். இந்த நாடுகளில் இருந்து வருவதுதான் மொத்த உற்பத்தி.  இந்த பயிர் வளரத் தேவையான சூழ்நிலை வேறு நாடுகளில் இல்லை.

இந்த நிலைமையை இப்படியே விட்டு விட முடியுமா? கண்டிப்பாக நானும் நீங்களும் பாதிக்கப்படுவோம். என்னுடைய கருத்தை எழுத்தில் முழுமையாக சொல்ல முடியாவிட்டாலும் சற்று சிந்தித்தால் இந்த நிலையின் தீவிரம் புலப்படும். நான் இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். குறைந்தபட்சம் ஒரு திட்டத்தை யோசித்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாயிகள் குழு ஆரம்பிக்க வேண்டும் (சுயஉதவிக் குழு போல). கிராமத்தின் மொத்த விவசாய நிலத்திலும் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். வருடம் முழுவதும் வேலை இருப்பது போல உணவு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், பூக்கள், பழங்கள், மரங்கள், எண்ணெய்ப் பயிர்கள்  என்பன போன்ற பல்வேறு வகை பயிர்களையும் அந்தந்த மண்ணிற்கு ஏற்றவாறு  திட்டமிட்டு பயிர் செய்ய வேண்டும். இதில் முதலீடு செய்வது, நிர்வகிக்கும் முறைகள், வேலையைப் பகிர்ந்தளிக்கும் முறைகள், லாபத்தை பிரிக்கும் முறைகள் என்ற பலவும் உள்ளடக்கி வெற்றிகரமாக செயல்பட ஒரு அமைப்பை(system) உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தின் ஒவ்வொரு நடைமுறையையும் தெளிவாக வரையறுத்து வகைப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் உதவியும் தேவைதான். இத்திட்டதிற்கென தனியாக ஒரு துறையை தொடங்கி மாவட்டம் தோறும் மையங்களை செயல்படுத்தலாம். இந்த மையங்கள் அந்த நிலங்களின் மண்ணுக்கும், நீர்வளத்திற்கும் ஏற்றவாறு பயிர் திட்டங்களை உருவாகிக் கொடுக்கலாம். மற்றும் பல்வேறு வகை  தொழில்நுட்ப குறைகளை, இடற்பாடுகளைக் களைய உதவி செய்யலாம். இந்த திட்டத்தின் ஆரம்ப காலத்தில் வங்கிகள் கடன் கொடுக்கலாம். வங்கிகள் கூட ஒரு பங்குதாரராக(shareholder) சேர்ந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு மாத உதவித்தொகை கூட அளிக்கலாம். இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கும், ஆப்ரிக்க நாடுகளுக்கும், இலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் நிதி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. நம் நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடாதா? ஏன் எது எதற்கோ வரிகள் உள்ளன, இந்த திட்டத்திற்காக தனியாக வரியே வசூலிக்கலாம்.

பல்வேறு பயிர்களையும் ஒரே நிலத்தில் சுழற்சி முறையல் விளைவிப்பதால் மண்வளம் கூடி உற்பத்தியும் கூடுமே ஒழிய குறையாது. ஒரு பயிரின் பூச்சி மற்றொரு பயிரின் பூச்சியை இரையாகத்தின்னும் predator ஆக இருக்கும். பல்வேறு உயிரினங்களும் மரம் செடி கொடிகள் உள்ள எந்த காடாவது  நோய்த் தாக்குதலில், பூச்சித் தாக்குதலில் அழிந்திருக்கிறதா?  இதைவிட ஒவ்வொரு பயிரும் ஒவ்வொரு காலத்தில் அறுவடை நடந்து விற்பனை செய்யலாம். ஒவ்வொரு அறுவடையிலும் பணம் வரும். எதோ ஒரு பயிர் நஷ்டமடைந்தாலும் மற்ற பயிர்கள் லாபம் தரும், முதலீட்டை, உழைப்பை வீணாக்கி விடாது. இயற்கையின் சீற்றங்களும் எல்லா பயிர்களையும் பாதிக்காது ஒவ்வொரு பயிரும் வேறு வேறு வளர்ச்சி நிலைகளில் இருக்கும். அப்படியே அனைத்து பயிர்களும் பாதித்தாலும் அரசாங்கம் பொறுப்புடன் காலத்தே நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இன்னும் அரசாங்கத்திடமிருந்து தேவையானது மின்சாரம். ஒரு MNC தொழிற்சாலைக்குத் தரும் மின்சாரம் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் தேவையான மின்சாரத்திற்கு சமமாகும். ஆக புதிது புதிதாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதை விட உணவளிக்கப் பாடுபடும் விவசாயிக்கு மின்சாரம் வழங்கலாம். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். விதை உற்பத்தி நிறுவனகள், உர தொழிற்சாலைகள், விவசாயக் கருவிகள் செய்யும் தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள் (food processing and storage) என்ற இன்னும் பல.

இதனால் textile போன்ற பெரிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று எண்ணலாம். பாதிக்கப்பட்டாலும், தொழிலதிபர்கள் மிகச்சுலபமாக வேறு லாபகரமான தொழிலுக்கு மாறிவிடுவார்கள். ஆனால் விவசாய நிலங்களை இழந்தால் திரும்பப் பெறுவதும் அதில் விவசாயம் செய்வதும் மிகக் கடினம். மேலும் விவசாயியை பெறுவது சாத்தியமில்லாத ஒன்று. விவசாயிகளின் traditional knowledge வேறு துறையிலிருந்து விவசாயத்திற்கு புதிதாக மாறும் விவசாயிக்கு இது இருக்காது. விவசாயியின் traditional knowledgeஐ இழந்து விட்டால் அவ்வளவுதான்.

எனக்கு விவசாயமோ, பொருளாதாரமோ, நிர்வாகமோ சரியாகத் தெரியாது. இதை படிக்கும் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் நண்பர்களிடம், இந்தத் துறை வல்லுனர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இத்துறைகளில் வல்லுனர்களாக உள்ளவர்களின் கருத்துக்களை சேர்க்க வேண்டும். இத்திட்டம் சாத்தியப்படுமா? என்ன திருத்தங்கள் செய்யலாம்? இன்னும் பல்வேறு முறைகளில் வெற்றி பெறத் தேவையான அனைத்தையும் புகுத்தி இத்திட்டத்தை சீர்படுத்தலாம். மிக மிக முக்கியம் விவசாயிகளின் கருத்து. தமிழ்நாட்டு விவசாயிகளின் கருத்து மட்டும் போதாது. இந்தியாவின் விவசாயிகள் அனைவரின் கருத்துக்களும் வேண்டும். அனைத்து மாநில விவசாயிகளுக்கும், வல்லுனர்களுக்கும் இந்த திட்டம் பற்றிச் சொல்ல இதை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். முதலில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து விட்டால் பிற மொழிகளில் வேகமாக மொழிபெயர்த்து விடலாம்.
மொழிபெயர்ப்பிற்கு உங்களின், உங்கள் நண்பர்களின் உதவி தேவை.  செய்வீர்களா?


don't hesitate to give your comments, suggestions, opinions, corrections.......


for typing in  বাংলা ,  ગુજરાતી ,  हिंदी ,  ಕನ್ನಡ ,  മലയാളം मराठी ,  नेपाली ଓଡ଼ିOriya,  ਪੰਜਾਬੀ ,   தமிழ் తెలుగు and  اردو  . follow the link & download a small app to your computer, this works in offline very well. 

11 comments:

 1. Hi Vaidhees, Very good post. We better to give this flyer to all our formers and give awarness to our people. thanks ji......

  ReplyDelete
  Replies
  1. thank you sir, your point of creating awareness among farmers is an important one. first priority is to translate to indian languages and simultaneously getting more and more suggestions from people like you and experts and farmers

   Delete
 2. Fantastic thinking and if it comes to reality, this will fetch you doctorate than your selected project.Why don't you send it to our former President Dr.A.P.J.Abdul Kalaam? We are proud to have wider, beneficial and forseeing son like you. Small suggestion. Please go through the matter and correct spelling wherever necessary. Go ahead with such thinking and writing.

  ReplyDelete
  Replies
  1. Thank you. It is my pleasure to get comment and appreciation from you. I will try for the best.

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. நன்றாக உள்ளது.

  ReplyDelete
 5. வரவேற்கத்த்க்க கருத்துகள்.சிந்தித்து செயல் பட்டால் சிற்க்குமே விவசாயம்.விவசாயி வாழ்வான்;விவசாய நிலம் வளம் பெரும்;உணவு உற்பத்தி பெருகும்;விளை நிலம் பிளாட்டுகளாகாது;விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாது;விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்;லாபத்தை பகிர்ந்து கொள்ளலம்; கிராமம் செழிக்கும்;பொருளாதார வல்லுநர்கள்,விவசாயிகள்,வங்கிகள்,அரசு மற்றும் ஆர்வமுள்ள அனைவரின் முயற்சியால் விவசாயியும் நாட்டின் முதுகெலும்பும் நிமிர்த்தப்படவேண்டும்.இதனைக்காண்பவர் ஆவன செய்தல் வேண்டும்.

  ReplyDelete
 6. இந்த blog இல குறிப்பிட்டது போன்ற திட்டம் ஒன்றைப் பற்றிய செய்தி பதிவிட்ட மறுநாள் ஹிந்து நாளிதழில் வந்துள்ளது. பார்க்கவும்.
  http://www.thehindu.com/sci-tech/agriculture/article2832482.ece

  ReplyDelete
 7. Use google tranlate at
  translate.google.com

  ReplyDelete
 8. dear thiyagu,
  thank you for your interest and support.
  Google translation is ok to translate but it has to be checked by person who know that 2 languages for accuracy of meaning and sentence forms. this article is also available in English. you try Tamil to English using Google and see how machine translates.

  ReplyDelete
 9. என் விகடனில் , தங்கள் வலைப்பூ அறிமுகப்படுத்தப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் .
  மேலும் தொடரவும் .

  இணையத் தமிழன் ,
  http://www.inaya-tamilan.blogspot.com/

  ReplyDelete