இந்த உலகில் மிக
சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்”
என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன்,
யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய
உறைவிடம் இந்த உலகம்... அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்... அவன் அவளை
நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது
அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது
என்ன செய்ய ?
“நான்”, அவன்
கடவுளுக்கு கீழே உள்ளவன் அவனுடைய வேலை அவன் தாயை புரிந்துகொள்வது. “நான்” வாழ்நாள்
முழுவதும் அலைவான், நிரந்தரத்தை வெறுப்பவன், முடிவிலியை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவன்
அவனுடைய ஆசைகள் எபோதும் நிறைவேறபோவதில்லை என அறிந்தும் அதை அடைய முற்படுபவன்.
“நான்” ஒரு தனி மனிதன், தனித்த மனிதன் ,தனிமையின் அழகை உணர்ந்த மனிதன். அதன்
கிறக்கத்திலிருந்து மீண்டு வர மனமில்லாதவன்.. அவன் நடக்கிறான். சில நேரங்களில்
பறக்கிறான்.. புரியவில்லை பரிணாமத்தில் அதற்கு வழியில்லையே என்றாலும் “நான்’
பறக்கிறான்.
நான் அவனை பார்க்க
விரும்புகிறேன். “நான்” என்னை விட ரொம்ப வருடங்கள் முன்னோக்கி இருக்கிறான். ஒரு
பத்து பதினைந்து வருடங்களாவது அவன் முன் நின்று நடக்கிறான்.
நான் “நான்” – ஐ
பார்க்க வேண்டும். அவனுடன் பேசி சில விஷயங்களை பகிர வேண்டும்... இல்லை இல்லை
உண்மையில் நான் “நானிடம்” கதை கேட்கவே அவனை பார்க்க விரும்புகிறேன்; எனக்கு தெரியும்
“நானிடம்” ஏகப்பட்ட கதைகள் இருக்கும் அதைவிட அந்த கதைகளை யாரிடமும் சொல்லமாட்டன்
என்பதும் தெரியும். நான் அவனை பார்க்க வேண்டும் அவன் இருபது வருடங்கள் தள்ளி
இருக்கிறான் என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு கூட இருக்கலாம் அவனை கண்டுபிடிப்பேன்
என்று கூட எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் அப்போது எப்படி இருப்பான் என்ற கற்பனைக்கு
கூட வழியில்லாமல் அவனை இங்கு எழுதுகிறேன். அவன் இந்த காலத்தில் என்ன செய்வான் ?
தூங்கிக்கொண்டிக்கலாம்............ இல்லை இல்லை “நான்” இன்னும் பிறக்கவில்லை
சொல்லப்போனால் பிறக்கப்போவதும் இல்லை என அறிகிறேன். ஆசா பாசங்கள் அவனை கருத்தரிக்க
விடாது... அவனை இந்த உலகிற்கு அறிமுக ப......(இதை எழுதி முடிக்கவில்லை .... “நான்”
என்னை எச்சரிக்கிறான் அவனைப் பற்றி சொல்ல கூடாது என்று ..!!!!)
நான் அவனை
மதிக்கிறேன் அதனால் நிறுத்திவிடுகிறேன்.
பி.கு: நான் நானாக
இருக்க ஆசைப்படுகிறேன் – என்னை நீங்கள் பூட்டி வைத்துள்ளிர்கள் – உடைக்க முடியாத
பூட்டு உணர்வுகளால் திரித்த பூட்டு உயிரை நெறிக்கும் பூட்டு – கடைசி வரை நான்
நானாக போவதில்லை, நீங்களும் விட போவதில்லை – போகட்டும் நான் “நீங்களாகவே”
இருக்கிறேன்.
- திரு. கா. கா.
- திரு. கா. கா.
நான் யார்?நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்?யார்?
ReplyDeleteநானாக நான் இல்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு.......
நானா? இல்லை நீயா? நெஞ்சக்கதவை மெல்ல திறந்தது
நானா? இல்லை நீயா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?....
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை நான் காத்திருந்தேன் உன்னைப்........
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே .........வாழ்கிறான்?.......
நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப்பார்த்தால் எல்லாம் பொம்மை.......