Posts

அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்னும் வேண்டும் இதுபோல் தமிழக நகரங்களிலும்

Image
நண்பர் பிரேம்குமார் அவர்களின் அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கவிதை. வலைப்பூவில் பதிப்பிக்க கேட்டேன். உடனே எழுதித் தந்த புலமைக்கு நன்றிகள். இதுபோல இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள். அ வசரமான சென்னையில்     ஓர் ஆரவாரமற்ற கண்ணாடி மாளிகை. அரிய மரங்களை அழித்து விட்டு யாரையோ பலி தீர்க்க அவசர கதியில் வளர்ந்திருக்கும் ஓர் அழகிய கட்டிடம். ஓயா நகருக்குள் ஓயாமல் இயங்கும் ஓர் கட்டிடம். வெறும் மண்ணின் மூலக்கூறுகளால் மட்டும் வானளாவி மோதி நிற்கும் ஓர் அழகிய கட்டிடம். இங்குள் எட்டடுக்கு மாளிகையின் அலங்கார அலமாரிக்குள் மர மம்மிக்கள். ஆம் வெவ்வேறு   ( அரச)மரங்களின் தியாகத்தால் தன்னை வெட்டி – அறுத்து – நொருக்கி   -   அமுக்கி –   பிழிந்து பின் தன் மேல் பதிக்க விடவிட்டு கொடுத்த எழுத்துகளால் கோர்க்கப்பட்டு நூல்களாக்கப்பட்ட மம்மிக்களின் குடோன். மனசாட்சி மாறிப்போன மனித விலங்கை நெறிபடுத்த இங்கு இத்தொகையை விட இந்நூல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அணுகுண்டே தலை மேல...

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லாததற்கு யார் காரணம்?

Image
உரக்கச் சொல்லுங்கள், நான், என் பெற்றோர், என் பள்ளி, ஆசிரியர்கள், என் ஊர் மக்கள்,  அரசாங்கம். உரக்கச் சொன்னது போதும். எனக்கு விளையாட்டு மிக மிக விருப்பம், என்னை விளையாட விட்டதா இந்தச் சமூகம். என் அம்மா, அப்பா, ஆசிரியர்களின் அடக்குமுறை என்னை படிப்பை நோக்கித் தள்ளியது. பேச்சு, கருத்து, மதம், மதமற்ற நாத்திகம் அனைத்திற்கும் சுதந்திரம் உள்ள  இந்நாட்டில் குழந்தைகள் விளையாட்டு வீரராக சுதந்திரம் இல்லை. ஒரு விளையாட்டு வீரனாக மாற எத்தனை தடைகள் இருக்கிறது தெரியுமா இந்நாட்டில்? தற்போதைக்கு ஒலிம்பிக் 2012இல் பங்கேற்ற அனைத்து வீரர்களும் எதோ ஒரு துறையில் வேலை செய்கிறார்கள்/ நன்றாக படித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் பயிற்சியினாலும் திறமையினாலும் (சிலர் பயிற்சி, திறமையுடன் பணபல அரசியல் செல்வாக்காலும்) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். அதற்கு மேலும் பார்த்தால் தன் சொந்த செலவில் பயிற்சி எடுத்தவர்கள் 80%. (அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங், அஸ்வினி பொன்னப்பா, ஜ்வாலா குட்டா, செய்னா நேவால், சானியா மிர்சா இன்னும் பலர்). உங்கள் ஊரில் போதிய விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியில...

புது மழை

Image
மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ ஏரோட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ சும்மா திரியுற மாமனுக்கு சூடு வையுங்கோ என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை.  மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத....