Posts

Showing posts from August, 2010

உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?

Image
--> --> உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?   ஆம் என்பவர்கள் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கலாம். அல்லது சுவைகளில் வித்தியாசமான புதுமையை விரும்புபவராக இருக்கலாம். சர்க்கரை கூட போடாமல் சுவைப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுரைகளுக்கு கட்டுபட்டவர்கள். முகர்ந்து பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் இனிப்பு இல்லாத டீயை. இன்னும் கொஞ்சம் பார்த்தால், பால் கூட இல்லாத கருந்தேநீர் (பிளாக் டீ). சூடு மட்டுமே தேவை இங்கே. வெப்பத்தை உள்ளே கடத்துவதற்குத் தானோ இந்த எதுவுமே இல்லாத கருந்தேநீர். பேக்கிரவுண்ட் மியூசிக் இல்லாத ஹீரோ அறிமுகம் தான்.   முழு உலகத்தையே உணர்கிறேன் இந்த உப்பு தேநீரில். மலை தந்த தேயிலையும், அலைகடல் தந்த உப்பும் உதட்டை தொடும்போது. பல்வேறு சுவைகளில் டீ. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த தேநீர், இஞ்சி டீ, தேயிலைத் தூளுடன் ஏலக்காய் கலந்தால் ஏலக்காய் டீ, துளசி கலந்தால் துளசி டீ என்று விற்பனை செய்கிறார்கள். புளியங்கொட்டை  கலந்த டீயை புளியன் டீ என்று விற்பதில்லையே? இன்னும் சுவைகளி...