ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லாததற்கு யார் காரணம்?
உரக்கச் சொல்லுங்கள், நான், என் பெற்றோர், என் பள்ளி, ஆசிரியர்கள், என் ஊர் மக்கள், அரசாங்கம். உரக்கச் சொன்னது போதும். எனக்கு விளையாட்டு மிக மிக விருப்பம், என்னை விளையாட விட்டதா இந்தச் சமூகம். என் அம்மா, அப்பா, ஆசிரியர்களின் அடக்குமுறை என்னை படிப்பை நோக்கித் தள்ளியது. பேச்சு, கருத்து, மதம், மதமற்ற நாத்திகம் அனைத்திற்கும் சுதந்திரம் உள்ள இந்நாட்டில் குழந்தைகள் விளையாட்டு வீரராக சுதந்திரம் இல்லை. ஒரு விளையாட்டு வீரனாக மாற எத்தனை தடைகள் இருக்கிறது தெரியுமா இந்நாட்டில்? தற்போதைக்கு ஒலிம்பிக் 2012இல் பங்கேற்ற அனைத்து வீரர்களும் எதோ ஒரு துறையில் வேலை செய்கிறார்கள்/ நன்றாக படித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் பயிற்சியினாலும் திறமையினாலும் (சிலர் பயிற்சி, திறமையுடன் பணபல அரசியல் செல்வாக்காலும்) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். அதற்கு மேலும் பார்த்தால் தன் சொந்த செலவில் பயிற்சி எடுத்தவர்கள் 80%. (அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங், அஸ்வினி பொன்னப்பா, ஜ்வாலா குட்டா, செய்னா நேவால், சானியா மிர்சா இன்னும் பலர்). உங்கள் ஊரில் போதிய விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியில...