அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்னும் வேண்டும் இதுபோல் தமிழக நகரங்களிலும்
நண்பர் பிரேம்குமார் அவர்களின் அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கவிதை. வலைப்பூவில் பதிப்பிக்க கேட்டேன். உடனே எழுதித் தந்த புலமைக்கு நன்றிகள். இதுபோல இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள். அ வசரமான சென்னையில் ஓர் ஆரவாரமற்ற கண்ணாடி மாளிகை. அரிய மரங்களை அழித்து விட்டு யாரையோ பலி தீர்க்க அவசர கதியில் வளர்ந்திருக்கும் ஓர் அழகிய கட்டிடம். ஓயா நகருக்குள் ஓயாமல் இயங்கும் ஓர் கட்டிடம். வெறும் மண்ணின் மூலக்கூறுகளால் மட்டும் வானளாவி மோதி நிற்கும் ஓர் அழகிய கட்டிடம். இங்குள் எட்டடுக்கு மாளிகையின் அலங்கார அலமாரிக்குள் மர மம்மிக்கள். ஆம் வெவ்வேறு ( அரச)மரங்களின் தியாகத்தால் தன்னை வெட்டி – அறுத்து – நொருக்கி - அமுக்கி – பிழிந்து பின் தன் மேல் பதிக்க விடவிட்டு கொடுத்த எழுத்துகளால் கோர்க்கப்பட்டு நூல்களாக்கப்பட்ட மம்மிக்களின் குடோன். மனசாட்சி மாறிப்போன மனித விலங்கை நெறிபடுத்த இங்கு இத்தொகையை விட இந்நூல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அணுகுண்டே தலை மேல...