செட்டில் ஆவது ஏன்? எப்படி?
என்ன சார்/மேடம் செட்டில் ஆகிட்டீங்களா? என்றோ, போ போ நல்லபடியா செட்டில் ஆகிற வழியப் பாரு என்றோ கேட்கப்பட்டிருப்பீர்கள். இதில் செட்டில் என்பதற்கு முன்னேறுதல் என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் அந்தச் சொல்லின் பொருள் என்ன? கீழ்நோக்கி, இயக்கம் நிற்கும் வரை பயணித்து அடியில் தங்குதல் தேங்குதல். ஒரு பொருள் அதன் எடைக்கேற்ப செட்டில் ஆகும் நேரம் கூடலாம் குறையலாம். செட்டில்(settle) என்பதற்கு அகராதியைப் பார்த்தேன். குடியேறுதல், அடியில் தங்குதல், முடிவு, தீர்த்து வைத்தல் .... என்பதாக இருந்தது. என்ன சார் பிரிசிபிடேட்(precipitate) ஆகிட்டீங்களா? என்று ஏன் யாரும் கேட்பதில்லை. புதிதாக வீட்டில் குடியேறியவரைக் கேட்கலாம், புது வீட்டுல செட்டில் ஆகிட்டீங்க... பிரமாதம்! என்று. சொத்து பிரித்துக்கொள்ளும் சகோதரர்களிடம் கேட்கலாம், அண்ணன் தம்பியோட செட்டில்மென்ட் பண்ணியாச்சா? என்று. ஒரு வகுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் மாணவனிடம், என்ன தம்பி எட்டாவதிலேயே செட்டில் ஆகிட்ட போலிருக்கு என்று கேட்கலாம். விருந்திலே...