மழை பொழியுமா? பொய்க்குமா?
நீரின்றி அமையாது உலகு. வளமை இன்றி அமையாது பொருண்மை; பசுமை இன்றி அமையாது குளுமை.குளிர்ச்சி வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மேகம் குளிர வேண்டும்; மேகம் குளிர மண்ணில் மரம், செடி, கொடி வேண்டும். வெட்டப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் அழிந்து பட்டாலோ அந்த இடத்தில் புதிய மரக்கன்றை நட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த இடம் வெறுமை ஆவதோடு வெம்மை அதிகமாகும். அனைத்து இடங்களிலும் இந்நிலை நீடிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது, குளுமை குறைகிறது. இந்நிலையில் மழை பொழியுமா? பொய்க்குமா? என்னசெய்யலாம்? எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெப்பம் மக்களை அதிகமாக வாட்டியது அனைவரும் அறிந்த ஒன்று. வசதி படைத்தவர் குளிர்வாசத்தலங்களுக்கு சென்றனர். வறுமையில் உழன்றோர் கோடை வெப்பம் தாங்க முடியாமல் உயிர்நீத்த செய்தியை நாளிதழ்களில் கண்டிருக்கலாம். அனுதாப “இச்” கொட்டினால், போன உயிர் வருமா? வெப்பம்தான் குறையுமா? இதற்கெல்லாம் என்னகாரணம்? மரம், செடி, கொடிகளை வெட்டியது, ஆற்றுப்படுகைளில் மணலை சுரண்டியது, எவ்வளவு ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமோ அதை செய்வது. காடுகள் வளர்ப்புக்கு...