பழி வாங்குமா இயற்கை?
இயற்கை சீற்றங்களால் பேரழிவு, இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் கட்டுப்படுத்த இயலாத வெள்ளம் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தை 5-10 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது. மீண்டு ( ம் ) பழைய நிலைக்கு கொண்டு வருவது மிகவும் சவாலான வேலை என்று மத்திய மாநில அரசுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை உயிருடன் மீட்ட ராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. சராசரியை விட நாலரை மடங்கு அதிக மழைப்பொழிவுதான் இந்தப் பேரழிவிற்கு காரணமா? இதற்கு காரணம் என்ன? உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட குமாவூன் மற்றும் கார்வால் மண்டலங்கள் கங்கை மற்றும் யமுனை ஆகிய ஜீவநதிகளின் பிறப்பிடமான இமயமலையுடன் இணைந்த பகுதிகள். இந்தப் பருவமழை அதிகமாக இருக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்ட ஒன்றுதான். கணிக்கப்பட்ட மழை வெள்ள எச்சரிக்கையை யாத்ரீகர்களுக்கு பொது ஊடகங்கள் மூலம் அறிவிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கமுடியவில்லை. பருவமழை ஒவ்வொரு வருடமும் சூதாட்டம் போல ஏறக்குறையதான் இருக்கும். 65 சதவிகிதத்தை ...