இங்கிலீஷ்* புத்தாண்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் முதல் ஆளாக(i am the first to wish.,) அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாட்டு மக்களெல்லாம், தமிழ் வருடத் தொடக்கத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பது ஏன் என்கிற வினா ஒன்று தோன்றுகிறது.
ஒருவேளை இங்கிலீஷ் நாட்காட்டியின் படி சம்பளம் பெறுவதாலா? தமிழ் புத்தாண்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரி கட்டி கையிருப்பில் பணம் இல்லாது போவதாலா?
தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை என்றால் கர்நாடகாவிலா அரசு விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இங்கிலீஷ் புத்தாண்டும், தமிழ் புத்தாண்டும் sms blackout days என்று அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில் மட்டுமே sms பரிமாற்றம் அதிகமிருக்கிறது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தை sms blackout தினத்திலிருந்து நீக்கச் செய்ய வேண்டும். சம்பளம் தமிழ் மாத முதல் தேதியில் தருவதை வழக்கமாக்க வேண்டும். நிதிஆண்டும் தமிழ் ஆண்டும் பங்குனியில்(மார்ச்) முடியும்.
நேரக் கணக்கைப் போலவே 60 தமிழ் ஆண்டுச் சுழற்சி என்பது வியாழன் சூரியனை 12 முறை சுற்றி வரும் காலமாகும். அதாவது வானமண்டலத்தின் 12 வீடுகளிலும் இடம் பெற்றிருக்கிற ஒன்பது கிரகங்களும் ஒருமுறை தாம் இருக்கின்ற அவ்வவ் வீடுகளிலேயே மீண்டும் இடம் பெறுகிற நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும். மற்ற கிரகங்களைப் பொருத்தவரை அவை தாமிருந்த பழைய இடத்துக்கு மீண்டும் வருவதென்பது, மிக விரைவாக நிகழக்கூடியதே என்றாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது1. இந்த ஒரு வான்நிலை நிகழ்வை ஒட்டியே தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் சூரியக் குடும்பத்தின் ஒரு சுழற்சி தொடக்கத்தையும் கணக்கில் கொண்டுள்ளது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...., எண்ணும் எழுத்தும்.... என்றெல்லாம் எண் பற்றிய முக்கியத்துவம் தெரிந்திருந்தும் தமிழ் எண்களை பழகாமல் விட்டுவிட்டோம்.
அனைவருக்கும் தமிழ் ஜய ஆண்டு சித்திரை க நாள் வாழ்த்துகள்.
1.http://www.sishri.org/puthandufull.html).
*English என்பதை உச்சரிப்பில் இங்கிலீஷ் என்றே குறிப்பிடுவது சரியாகும். எவ்வாறு ஆங்கிலம் என்பது சரியாகும்?

1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0 இதை எளிதாக நினைவில் கொள்ள,
''க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்அனைவருக்கும் தமிழ் ஜய ஆண்டு சித்திரை க நாள் வாழ்த்துகள்.