அதிமதுரம் Liquorice
அதிமதுரம்: தாவரப்பெயர்:Glyeyrrhiza glabra.ஆங்கிலத்தில் Liquorice, ஹிந்தியில் மூலேதி (मुलेठी) இது ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொடிவகையை ச் சார்ந்தது. நட்ட 3 (அ) 4 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும். எந்த மண்ணிலும் நன்றாக வளரும். தொட்டிகளில் மாடியில் வளர்த்து கீழே தொங்கவிடலாம். முல்லைக்கொடி போல மாடிமேலே ஏற்றலாம். வீட்டின் முன் ஆர்ச்சில் படரவிடலாம். அழகுக்காகவும் மருந்துக்காவும் வளர்க்கலாம். பயன்படும் பாகங்கள்: வேர்த்தண்டு மற்றும் வேர்கள்.தண்டு, கிழங்கு பூமியின்3,4 அடிஆழத்தில் பரவலாகக்கிடைக்கும். இலைகள் இனிப்பு சுவையும் வெப்பத்தன்மையும், வேர் இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சீன மருத்துவத்தில் உடலைப்'புதுப்பிக்கும் மருந்தா கப் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மருத்துவப் பொருள்களுடன்அதிமதுரம் சேர்க்க ஓராயிரம் நோய் போக்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது. அதிமதுரப் பொடி சித்தாவிலும்,அலோபதியிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக ஐஸ்கிரீம்,,மிட்டாய்கள், சிரப்புகளில் அதிமதுரம் சேர்க...