Posts

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture

Image
வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்     திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில்  நிலத்தை  வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில்   முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...

தமிழ் மொழியும் மென்பொருள்கருவிகளும், News on demand, Tree bus stop

Image
மொழியும் மென்பொருள்கருவிகளும் சாப்ட்வேர் வளர்ந்து விட்டது என்று பலரும் பேசிப் பேசி அலுத்து விட்டது. இந்த வளர்ச்சி தமிழுக்கு என்ன தந்தது? என்ற சந்தேகம் எழுகிறது. கணினியில் இங்கிலீஷ் (English தமிழிலும் இங்கிலீஷ் தான்) பயன்படுத்தப் படுவதைப் போல தமிழைப் பயன்படுத்த முடியவில்லையே. கணினியில் தமிழ் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை (spell check, grammar check) சுட்டிக் காட்டவோ திருத்தம் செய்யவோ இன்னும் செயல் பாட்டளவில் வழி ஏற்படுத்தவில்லை. இங்கிலீஷ் தவிர இன்னும் பல மொழிகளுக்கு இந்த வசதிகள் உள்ளன. கூகிளும், மைக்ரோசாப்ட்டும் வணிகத்துக்காக மட்டுமே  தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டார்கள். இந்த இரு வசதிகள் மட்டும் இருந்திருந்தால் எழுத்துப்பிழைகளே இல்லாத விளம்பரங்கள், அறிவிப்புகள், சமூக வலைக் கருத்துக்களை நாம் அனுபவித்துக் கொண்டிருப்போம். மேலும், தமிழ் வார்த்தைகளை ஒலியாக கேட்கவும், தமிழில் பேசினால் வார்த்தையாக தட்டச்சு (text to speech, voice input) செய்யவும் முடிய வில்லை. இங்கிலீஷில் இவை எல்லாம் சாத்தியம். இங்கிலீஷ் மொழியில் தவறின்றி தட்டச்சு செய்து அச்சிட முடிந்த தமிழனால் தம...

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இரண்டாம் பட்சமா

Image
இங்கிலீஷ்* புத்தாண்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் முதல் ஆளாக(i am the first to wish.,) அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாட்டு மக்களெல்லாம், தமிழ் வருடத் தொடக்கத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பது ஏன் என்கிற வினா ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இங்கிலீஷ் நாட்காட்டியின் படி சம்பளம் பெறுவதாலா? தமிழ் புத்தாண்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரி கட்டி  கையிருப்பில் பணம் இல்லாது போவதாலா? தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை என்றால் கர்நாடகாவிலா அரசு விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இங்கிலீஷ் புத்தாண்டும்,  தமிழ் புத்தாண்டும் sms blackout days என்று அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில் மட்டுமே sms பரிமாற்றம் அதிகமிருக்கிறது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தை sms blackout தினத்திலிருந்து நீக்கச் செய்ய வேண்டும். சம்பளம் தமிழ் மாத முதல் தேதியில் தருவதை வழக்கமாக்க வேண்டும். நிதிஆண்டும் தமிழ் ஆண்டும் பங்குனியில்(மார்ச்) முடியும். நேரக் கணக்கைப்...

மாடித் தோட்டமும் நகர மக்களும்

Image
கி.பி. 1600 களில் 60 கோடியாக இருந்த உலக   மக்கள்தொகை அடுத்த 400 ஆண்டுகளில் 700 கோடி உயர்ந்தது. ஒவ்வொரு எழுபது ஆண்டுகளிலும் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. இதே நிலையில் போனால் 2050 இல் உலக மக்கள் தொகை ஐநா கணிப்பின்படி 915 கோடி ஆகும். நம் பூமியின் தாங்கும் அளவு என்ன? எத்தனை பேர் வாழ இந்த பூமியில் வளங்கள் உள்ளன? மக்கள் தொகை உயர்ந்ததோ மடங்குகளில். அதே அளவு வளங்கள் உயர்ந்ததா என்றால் இல்லை. உணவு உற்பத்தியை ஒரு அளவு வரை படிப்படியாக உயர்த்த முடிந்தது, இன்னும் இன்னும் உயர்த்திக் கொண்டே போவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். உணவு உற்பத்தியை மேற்கொள்பவர்களின் துயரங்கள் (நம் நாட்டு அரசியல் கொள்கைகளால்) அவர்களின் அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில், உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் தடுத்துவிடுகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடன் பட்டதால் உழைப்புக்கு உணவு தரும் அட்சய பாத்திரமான  நிலங்களையும் விற்றுவிட்டு வேறு தொழில் தேடி தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நேரடியாக விவசாயம் செய்யும் மக்கள்தொகையில் 2035 பேர் குறைந்துகொண்டிருக்கிறா...

வருடத்தின் 182 மணி நேரம்

Image
அரை மணி நேரம் TV யை நிறுத்துங்கள், உங்கள் வாழ்க்கையிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். ஒரு நாளில் சுமார் மூன்று மணி நேரம் டிவியில் செலவிடுகிறீர்கள் என்றால் அதை இரண்டரை மணி நேரமாக குறையுங்கள். அதுவும் நீங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சியின் நேரத்தில் குறையுங்கள். நம் வீட்டில் இருக்கும் சாதனங்களிலேயே மிகவும் எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டிய சாதனம் TV தான். ஒரு நாளைக்கு, உங்கள் நேரம் அரை மணி நேரம், உங்கள் மொத்த குடும்ப நேரம் 2  மணி நேரம் (4 பேர் கொண்ட குடும்பம்) இப்படி கணக்கிட்டால் வருடத்தின் 182.5 மணி, குடும்பத்தின் நேரம் 730 மணி நேரம் பல பயனுள்ள காரியங்களுக்கு செலவிடப்படும். பல நேரங்களில் ஒய்வு எடுக்க நேரமின்றி இருந்திருப்பீர்கள். இந்த அரை மணி நேரத்தை அதற்கு கூட பயன் படுத்திக்கொள்ளலாம். மக்களை டிவி முன் அமரவைத்து டிவி பேசிக்கொண்டிருக்கிறது மக்கள் முடமாக அதன்முன் அனைத்து புலன்களையும் அடகு வைத்துவிடுகிறார்கள். கண்ணும் காதும் டிவியை கவனித்துக் கொண்டிருக்கிறது. கண் காதுக்கு ஒத்திசைவாக உங்கள் உடல் இயக்கம் இன்றி நிற்கிறது. அதைவிட முக்கியமாக உங்களை சிந்திக்க விடுவதில்லை. ...

மருத்துவத்தால் பாதிக்கிறதா மக்கள்நலம்?

Image
உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது.  திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தின் பத்தில் ஏழு குறட்பாக்கள் உணவைப் பற்றித்தான் உள்ளன. மூன்றுதான் மருத்துவம், மருத்துவர் பற்றியும் உள்ளது. உணவு மிஞ்சினாலும் குறைந்தாலும், ஒவ்வாத உணவைத் தவிர்த்து பசியின் தன்மைக்கேற்ப செரித்தபின் அளவறிந்து உண்டால் மருந்து தேவைப்படாது.   நீண்ட காலம் வாழலாம். நோயில்லை, இன்பம் என்று ஏழு குறட்பாக்களிலும்............... நோயாளியின் வயது, தன்மை, நேரம்; நோயின் தன்மை அறிந்து ஆராய்ந்து சிகிச்சையும் நோய் வராமல் காக்கும் வழிகளையும் கற்றவன் மருத்துவன். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவம், மருந்து கொடுப்பவன் எல்லாம் உள்ளடக்கியது மருத்துவமுறை என்று மூன்று குறட்பாக்களிலும் கூறியுள்ளார். வள்ளுவன் காலம் முதற்கொண்டு மருத்துவத் தொழிலையும், மருத்துவர்களையும் கடவுளுக்கு நிகராகப் போற்றி வந்துள்ளனர். மருத்துவர்கள் செய்வது அறத்தொழில் என்பதில் எந்த மாறுபாடான கருத்தும் இன்றி மருத்துவம்(ர்), மருத்துவத்துறையில் நம் நாட்டின் நிலைமை சிந்திக்கத் தூண்டியது. அவற்றை இங்கு பகிர்கிறேன்...