Posts

தாதூண் பறவைகள் - பறவைகளும் தண்ணீரும்

Image
மலைகள் இணைய இதழ் 4 ஆம் ஆண்டு சிறப்பிதழில் பதிப்பிக்கப்பட்ட என் கட்டுரை   http://malaigal.com/?p=6705 கட்டுரைச் சுருக்கம்: இவ்வுலகில் உள்ள 8650 பறவையினங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை உணவுக்காக வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து மற்றும் வளர்ப்புப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகளும் தான். 8650 இனங்களில் 1200 இந்தியாவில் காணலாம். நிலத்தின் மேல் உள்ள நீர்நிலைகள் அளவில் சுருங்கி மாசடைந்து குளங்கள், ஏரிகள், ஆறுகள் விஷ சாக்கடையாக உள்ளன. போர் போட்டு தொட்டியிலும் புட்டியிலும் நீரை அடைத்து வைத்துள்ளோம். நீர் இல்லாமல் நமக்கு நா வரளும். வியர்வை சுரப்பியற்ற பறவைகளுக்கு உடலும் வரளும். பறவைகள் தாகம் தணிக்க எங்கே தேடியலையும்? பறவைகளின் நீர் குடிக்கும் பழக்கங்கள், நீர் தேவை போன்றவற்றின் காரணங்கள்.  சில வாரங்களுக்கு முன் நான் காலையில் பணிக்குச் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தேன். சாலை ஓர மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கையை நீட்டி என்னை அழைத்தாள். ‘என்னம்மா வேண்டும்’ என்று கேட்டு விட்டு நின்றேன். மூதாட்டி தன் கையிலிருந்த வாட்டர் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். எனக்கு ...

புது வருட ரெசல்யூஷன் :)

Image
நியூ இயர் வருது உங்கள் ரெசல்யூஷன் என்னங்க?  640*780 HD. தம்பி என் மொபைலுக்கு தான கேட்டீங்க? டீவி க்கு 1084 இருக்கும். என் வீட்டுல வேற எந்த ரெசல்யூஷனும் இல்லை. உங்க புத்தாண்டு சபதங்கள் என்ன?  யாருகூடவும் நமக்கு பகை இல்லைங்க தம்பி. அதனால "இந்த நாள்.... உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ......" அப்டினு சபதம் எதுவும் விடலை.  உங்களுக்கு புது வருஷ கொண்டாட்டம் எதுவும் இல்லைங்களா? கொண்டாடலாமுன்னு ஒருதரம் ஆரம்பிச்சேன். இருபது முப்பது நாளுக்கு ஒருமுறை கொண்டாடும்படி ஆகிப்போச்சி.  என்னண்ணே சொல்றீங்க?  சீன நியூ இயர், சிறீலங்கா நியூ இயர், கன்னட நியூ இயர், முஸ்லீம் நியூ இயர், கிரிஸ்டீன் நியூ இயர், தமிழ் நியூ இயர், இப்படியே ஆப்பிரிக்கா, அண்டார்க்டிக்கா, நெப்டியூனின் நியூ இயர் வரைக்கும் கொண்டாடிட்டேன். இதுக்கெடயிலே எனக்கு 30 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்துச்சி, இப்போ "அண்ணனை  வாழ்த்த வயதில்லை ...." அளவுக்கு ஆகிப்போச்சி பாத்துக்கோங்க. இதனால ஐநா வுக்கு போட்டியா பல தினங்களை கொண்டாடிட்டேனு கிப்டு எல்லாம் வந்து குடுத்தாங்க தம்பி. 

அதிமதுரம் Liquorice

Image
அதிமதுரம்: தாவரப்பெயர்:Glyeyrrhiza glabra.ஆங்கிலத்தில் Liquorice, ஹிந்தியில் மூலேதி (मुलेठी) இது ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொடிவகையை ச் சார்ந்தது. நட்ட 3 (அ) 4 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும். எந்த மண்ணிலும் நன்றாக வளரும். தொட்டிகளில் மாடியில் வளர்த்து கீழே தொங்கவிடலாம். முல்லைக்கொடி போல மாடிமேலே ஏற்றலாம். வீட்டின் முன் ஆர்ச்சில் படரவிடலாம். அழகுக்காகவும் மருந்துக்காவும் வளர்க்கலாம்.  பயன்படும் பாகங்கள்: வேர்த்தண்டு மற்றும் வேர்கள்.தண்டு, கிழங்கு பூமியின்3,4 அடிஆழத்தில் பரவலாகக்கிடைக்கும்.  இலைகள் இனிப்பு சுவையும் வெப்பத்தன்மையும், வேர் இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.   சீன மருத்துவத்தில் உடலைப்'புதுப்பிக்கும் மருந்தா கப் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மருத்துவப் பொருள்களுடன்அதிமதுரம் சேர்க்க ஓராயிரம் நோய் போக்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது. அதிமதுரப் பொடி சித்தாவிலும்,அலோபதியிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக ஐஸ்கிரீம்,,மிட்டாய்கள், சிரப்புகளில் அதிமதுரம் சேர்க...

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture

Image
வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்     திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில்  நிலத்தை  வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில்   முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...

தமிழ் மொழியும் மென்பொருள்கருவிகளும், News on demand, Tree bus stop

Image
மொழியும் மென்பொருள்கருவிகளும் சாப்ட்வேர் வளர்ந்து விட்டது என்று பலரும் பேசிப் பேசி அலுத்து விட்டது. இந்த வளர்ச்சி தமிழுக்கு என்ன தந்தது? என்ற சந்தேகம் எழுகிறது. கணினியில் இங்கிலீஷ் (English தமிழிலும் இங்கிலீஷ் தான்) பயன்படுத்தப் படுவதைப் போல தமிழைப் பயன்படுத்த முடியவில்லையே. கணினியில் தமிழ் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை (spell check, grammar check) சுட்டிக் காட்டவோ திருத்தம் செய்யவோ இன்னும் செயல் பாட்டளவில் வழி ஏற்படுத்தவில்லை. இங்கிலீஷ் தவிர இன்னும் பல மொழிகளுக்கு இந்த வசதிகள் உள்ளன. கூகிளும், மைக்ரோசாப்ட்டும் வணிகத்துக்காக மட்டுமே  தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டார்கள். இந்த இரு வசதிகள் மட்டும் இருந்திருந்தால் எழுத்துப்பிழைகளே இல்லாத விளம்பரங்கள், அறிவிப்புகள், சமூக வலைக் கருத்துக்களை நாம் அனுபவித்துக் கொண்டிருப்போம். மேலும், தமிழ் வார்த்தைகளை ஒலியாக கேட்கவும், தமிழில் பேசினால் வார்த்தையாக தட்டச்சு (text to speech, voice input) செய்யவும் முடிய வில்லை. இங்கிலீஷில் இவை எல்லாம் சாத்தியம். இங்கிலீஷ் மொழியில் தவறின்றி தட்டச்சு செய்து அச்சிட முடிந்த தமிழனால் தம...