இரவு நேரத்தில் பயணிப்பது ஒரு வித அனுபவம்
நந்தனம், சென்னை ஒரு வெள்ளிக்கிழமையில் இல்லை, இல்லை. வியாழக்கிழமை இரவு ஊருக்குச் செல்லக் கிளம்பினேன். இரவு உணவு முடித்துவிட்டேன். பத்து மணிக்கு அறையை விட்டுக் கிளம்பினேன். இரவு நேர பேருந்துகளில் பயணிப்பது ஒரு வித அனுபவம். யார் தான் இந்த பேருந்து பலகை நிறங்களைத் தேர்வு செய்வார்களோ? இரவு நேரங்களில் பெயர்பலகையின் நிறம் கருப்பில் வெள்ளை எழுத்துக்கள். நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுருந்தேன். சில பேருந்துகளும், நிறைய லாரிகளும் விரைந்து போய்க்கொண்டிருந்தன. நான் எதிர்பார்த்த இரவுநேர (நைட் சர்வீஸ்) பேருந்து இன்னும் வரவில்லை. ஒரு நாய் என் அருகில் வந்து குறைத்தது. நான் நகர்ந்து நின்றதும், சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்து விட்டு படுத்துவிட்டது. எதிர்பார்த்தது போல கருப்பு நிற பலகையுடன் தாம்பரம் செல்லும் இரவுப் பேருந்து வந்தே விட்டது, கை நீட்டி வண்டியை நிறுத்தினேன். கத்திப்பார ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு எங்கே அமர்வது என்று யோசித்தேன், என்னைத் தவிர மூவர்தான் பேருந்தில் இருந்தனர். நடத்துனர் தன் பையை இன்ஜின் மேல் போட்டுவிட்டு ஓட்டுனருக்கு வலதுபக்க இருக்கையில் அமர்ந்து எதையோ பற்...